September 17, 2026

திசை ஒன்பது – உயிரின் பேராவல்: கருணாகரன்

இலங்கையின் இனவாதப் போர்ச் சூழலைத் தன்னுடைய பெரும் நாவலான ‘ஆதிரை’ யில் கட்டமைத்த சயந்தன், ‘ஆறாவடு’, ‘அஷேரா’ என்ற மற்றைய இரண்டு நாவல்கள் வழியாகவும் தன்னுடைய புனைவுப் பரப்பை இலங்கையிலிருந்து வெளியுலகை நோக்கி விரித்திருந்தார். அப்படி விரிக்கும்போது, ‘உள்நாடு மட்டுமல்ல, உலகமே ஒரு அரசியற் சூதாட்டக் களமாகத்தான் இருக்கிறது’ என்பதையும், ‘அது சாதாரண மனிதர்களின் வாழ்க்கையோடு விளையாடி, அவர்களைப் பலியெடுத்துக் கொண்டேயிருக்கிறது’ என்பதையும் காண்பித்தார். அந்தத் தொடர்ச்சியில்தான், சயந்தனின் புதிய நாவலான ‘திசை ஒன்பது’, வும் எழுதப்பட்டுள்ளது. […]
◷ 8 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அஷேரா – 8

8 சிங்கப்பூரில் இருந்து சூரிச் நகருக்கு புறப்படத் தயாராக இருந்தது அந்த விமானம். இடையில் எங்கும் நிறுத்தாத நேர்ப் பறப்பு. அபர்ணா ஒரு பெரிய மாளிகைக்குள் நுழைவதைப்போல உணர்ந்தாள். அவ்வளவு பிரமாண்டம். ‘பெரிய வயிற்றுடன் ஒரு பிள்ளைத்தாச்சிப் பெண் நடப்பதைப்போலதான் இது…

அஷேரா – 7

7 மத்தியான நேரத்தில் காயம் பட்டால் ரத்தம் குபு குபு என்று பொங்கும் என்று பெத்தம்மா சொல்வாள். உண்மைதான். நஜிபுல்லாவின் வலது கையிலிருந்து ரத்தம் அருவி மாதிரித்தான் கொட்டிற்று. ‘நாசமாய்ப்போனவன், கையைத் தாறு மாறாகக் கிழித்து வைத்திருந்தான்’. அருள்குமரன் மதியச் சமையலை…

அஷேரா – 6

6 இரவு பதினொரு மணி. சுழிபுரக் கடலை இரவு மூடியிருந்தது. அற்புதம் கடற்கரையில் உட்கார்ந்திருந்தான். வெள்ளை நுரைகள் அவனுக்குச் சற்றுத் தூரத்தில் வந்து வந்து உடைந்து அழிந்தன. ஆறுக்கெல்லாம் படகு புறப்பட்டிருக்க வேண்டும். இயந்திரத்தில் ஏதோ பழுதுபோல.. எப்படியும் சரிப் பண்ணி…

அஷேரா – 5

5 நஜிபுல்லா பிறந்த காலத்தில்தான் சோவியத் ரஷ்யாவின் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தன. ஒரே வெற்றிக் கொண்டாட்டம். பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த ‘நீயொரு முஜாகித் என்றால் இயந்திரத் துப்பாக்கி உன்னுடைய நண்பன். நீயொரு முஜாகித் என்றால் ஏவுகணைகள் உன்னுடைய நண்பர்கள்’ என்ற பாடலை நஜிபுல்லாவின்…

அஷேரா – 4

4 எகெரி ஏரிக் கரையோரச் சதுப்பு நிலத்திலிருந்து செங்குத்தாக மேலெழுந்த குன்றின் அப்பால் பச்சைப் புல்வெளிகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளுமாக நிலம் விரிந்திருந்தது. அது சுவிற்சர்லாந்தின் ஆதி நிலங்களில் ஒன்று. மரச் சட்டங்களாலான வீடுகளும், செம்மறி ஆடுகள் மேயும் பண்ணைத் தோட்டங்களும் என…

விமர்சனங்களிலிருந்து

முருகபூபதி

வன்னி மக்களின் ஆத்மாவைச் சொல்லும் சயந்தனின் ஆதிரை போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் தொடரும் தமிழ் மக்கள் அவலங்களின் ஆவணம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை இலங்கை மலையகம் பலாங்கொடையில் எனது உறவினர்கள் சிலர் sayanthanவசித்தார்கள். எனது அக்காவை அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு ( பெற்றோர் பேசிச்செய்த திருமணம்) மணம் முடித்துக்கொடுத்தார்கள். 1966 ஆம் ஆண்டில் நீர்கொழும்பில் அக்காவின் திருமணம் நடந்தபொழுது நான்தான் மாப்பிள்ளைத்தோழன். அக்கா மலையகத்தில் குடியேறியதனால் அங்கு உறவுகள் பிறந்தன. ஒருவர் எனது அக்காவின் கணவரின் தங்கையை மணம்முடித்தார். அவருக்கும் பாலங்கொடையில் ஒரு வர்த்தகநிலையத்தில் லொறிச்சாரதி வேலை. 1981 இல் மலையகத்தில் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, இறக்வானை, தெனியாய ஆகிய ஊர்கள் சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டபோது பலாங்கொடையும் தப்பவில்லை. அக்கா குடும்பம் வவுனியாவில் காணி வாங்கி குடியேறியது. அதுபோன்று அந்தச்சாரதியின் குடும்பமும் (எனக்கு அண்ணா - அண்ணி முறை உறவு) பூவரசங்குளத்தில் ஒரு துண்டு காணி வாங்கி குடிசை அமைத்து வாழத்தலைப்பட்டது. அவருக்கு வேப்பங்குளத்தில்…
முழுவதும் வாசிக்க →
✉
புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

“

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்
“

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி
“

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்