September 17, 2026

திசை ஒன்பது – உயிரின் பேராவல்: கருணாகரன்

இலங்கையின் இனவாதப் போர்ச் சூழலைத் தன்னுடைய பெரும் நாவலான ‘ஆதிரை’ யில் கட்டமைத்த சயந்தன், ‘ஆறாவடு’, ‘அஷேரா’ என்ற மற்றைய இரண்டு நாவல்கள் வழியாகவும் தன்னுடைய புனைவுப் பரப்பை இலங்கையிலிருந்து வெளியுலகை நோக்கி விரித்திருந்தார். அப்படி விரிக்கும்போது, ‘உள்நாடு மட்டுமல்ல, உலகமே ஒரு அரசியற் சூதாட்டக் களமாகத்தான் இருக்கிறது’ என்பதையும், ‘அது சாதாரண மனிதர்களின் வாழ்க்கையோடு விளையாடி, அவர்களைப் பலியெடுத்துக் கொண்டேயிருக்கிறது’ என்பதையும் காண்பித்தார். அந்தத் தொடர்ச்சியில்தான், சயந்தனின் புதிய நாவலான ‘திசை ஒன்பது’, வும் எழுதப்பட்டுள்ளது. […]
◷ 8 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அஷேரா – 13

அன்றைக்கு அற்புதம் மட்டக்களப்பிற்குப் போகவில்லை. எங்கோ தமிழ்நாட்டின் ஒரு மூலையிலிருந்து அவனைத் துரத்திக்கொண்டு வருபவர்களுக்கு மட்டக்களப்பு கூப்பிடு தொலைவுதான். நேராகக் கதவைத் திறந்து வந்து சுடுவார்கள். ஒரேயொரு வழி, திரும்பவும் ரெலோக் காரரர்களிடம்தான் தஞ்சம் கோரினான். அவர்கள் அளவெட்டியிலிருந்த ஒரு மூதாட்டியின்…

அஷேரா – 12

12 அருள்குமரனுக்குத் திரும்பவும் ஒரு கடிதம் வந்தது. லவகுசராசா “ஐயோ.. உம்மட முடிவை கான்சல் பண்ணிப் போட்டாங்களோ?” என்று அங்கலாய்த்தான். இந்த முறை சமூக உதவித் தொகையை வழங்கும் திணைக்களத்திடமிருந்து அழைப்பு. எதிர்பார்த்ததுதான். மதியம்போல போனான். அங்க நிறைய நேரம் தேவைப்பட்டிருக்கவில்லை.…

அஷேரா – 11

11 இரவின் கடைசிச் சத்தமும் நீங்கியது. அற்புதத்திற்கு நித்திரை வரவில்லை. ஏதேதோ ரீங்காரங்கள், நாய்கள் குரைக்கின்ற சத்தங்கள், தொலைவில் பேருந்துகளின் இரைச்சல்கள் கேட்டுக்கொண்டிருந்தபோது நேரம் கட கடவென்று போன மாதிரி இருந்தது. இப்போது அப்படி இல்லை. காலத்தை காலால் மிதித்து வைத்திருக்கிற…

அஷேரா – 10

10 அருள்குமரனின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை மத்திய புகலிடப் பணியகம் ஏற்றுக்கொண்ட தகவலைப் பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார்கள். கடிதத்தின் உள்ளே கத்தையாகத் தாள்கள், ஒன்றுமே விளங்கவில்லை. மாலையில் முல்லர் வரும் வரைக்கும் காத்திருந்தான். லப்பாமும் டப்பாமும்தான் அந்தரப்பட்டார்கள். “ரிஜெக்ட் பண்ணிப் போட்டாங்களோ?”…

அஷேரா – 9

9 வெயில்தான் நிறங்களாலானது. பனி போர்த்திய வெண்மை வெறுமையாலானது. அருள்குமரன் பேருந்தின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தான். கிளிப் பச்சை நிறப் புல் நிலங்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காதுகளில் இலக்கக் குறியீடு. கழுத்தில் ஆடிய செப்பு மணிகள் அசைந்து ஒலி எழுப்பின. அப்படி…

விமர்சனங்களிலிருந்து

முருகபூபதி

வன்னி மக்களின் ஆத்மாவைச் சொல்லும் சயந்தனின் ஆதிரை போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் தொடரும் தமிழ் மக்கள் அவலங்களின் ஆவணம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை இலங்கை மலையகம் பலாங்கொடையில் எனது உறவினர்கள் சிலர் sayanthanவசித்தார்கள். எனது அக்காவை அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு ( பெற்றோர் பேசிச்செய்த திருமணம்) மணம் முடித்துக்கொடுத்தார்கள். 1966 ஆம் ஆண்டில் நீர்கொழும்பில் அக்காவின் திருமணம் நடந்தபொழுது நான்தான் மாப்பிள்ளைத்தோழன். அக்கா மலையகத்தில் குடியேறியதனால் அங்கு உறவுகள் பிறந்தன. ஒருவர் எனது அக்காவின் கணவரின் தங்கையை மணம்முடித்தார். அவருக்கும் பாலங்கொடையில் ஒரு வர்த்தகநிலையத்தில் லொறிச்சாரதி வேலை. 1981 இல் மலையகத்தில் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, இறக்வானை, தெனியாய ஆகிய ஊர்கள் சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டபோது பலாங்கொடையும் தப்பவில்லை. அக்கா குடும்பம் வவுனியாவில் காணி வாங்கி குடியேறியது. அதுபோன்று அந்தச்சாரதியின் குடும்பமும் (எனக்கு அண்ணா - அண்ணி முறை உறவு) பூவரசங்குளத்தில் ஒரு துண்டு காணி வாங்கி குடிசை அமைத்து வாழத்தலைப்பட்டது. அவருக்கு வேப்பங்குளத்தில்…
முழுவதும் வாசிக்க →
✉
புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

“

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்
“

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி
“

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்