September 17, 2026

திசை ஒன்பது – உயிரின் பேராவல்: கருணாகரன்

இலங்கையின் இனவாதப் போர்ச் சூழலைத் தன்னுடைய பெரும் நாவலான ‘ஆதிரை’ யில் கட்டமைத்த சயந்தன், ‘ஆறாவடு’, ‘அஷேரா’ என்ற மற்றைய இரண்டு நாவல்கள் வழியாகவும் தன்னுடைய புனைவுப் பரப்பை இலங்கையிலிருந்து வெளியுலகை நோக்கி விரித்திருந்தார். அப்படி விரிக்கும்போது, ‘உள்நாடு மட்டுமல்ல, உலகமே ஒரு அரசியற் சூதாட்டக் களமாகத்தான் இருக்கிறது’ என்பதையும், ‘அது சாதாரண மனிதர்களின் வாழ்க்கையோடு விளையாடி, அவர்களைப் பலியெடுத்துக் கொண்டேயிருக்கிறது’ என்பதையும் காண்பித்தார். அந்தத் தொடர்ச்சியில்தான், சயந்தனின் புதிய நாவலான ‘திசை ஒன்பது’, வும் எழுதப்பட்டுள்ளது. […]
◷ 8 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அஷேரா – 21

கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன்…

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே

மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம்…

இத்தி மரத்தடி எஞ்சுவது: மண்ணின்றி நிலைகொள்ளா வாழ்வுகள் – ராஜி பாலசுப்பிரமணியன்

போர் வரலாறு பொதுவாக வெற்றி-தோல்விகளைப் பதிவு செய்கிறது. எந்தத் தரப்பு வென்றது அல்லது தோற்றது, எந்த நிலப்பரப்பு கைமாறியது, அடையப்பட்ட அரசியல் இலக்குகள் எவை என்பவற்றை மையமாக்குகிறது. ஆனால் போர்களின் பின் எழும் கேள்விகள் பல. போர்களில் உயிரிழப்புகள் முதலில் செய்திகளாக,…

அஷேரா – 20

வெளியே கொட்டிக் கிடந்த உறை குளிரிலிருந்து வெட்டி எடுப்பதைப்போல வெப்பக் கணப்பு சூட்டைத் தள்ளியது. தொண்டைக் கரகரத்தது. முகத்தில் ஏதோ ஊர்ந்து திரிவதைப்போன்ற உணர்வு. அருள்குமரன் குசினியிலிருந்து வரவேற்பறைக்கு வந்தான். அற்புதம் சோபாவிற்குப் பக்கத்தில் சுவரோடு உட்கார்ந்திருந்தார். அடிக்கடி கழுத்தை, கன்னங்களைத்…

அஷேரா – 19

தனுஷ்கோடிக்குப் பக்கத்தில்தான் இந்த மணல்திட்டு இருக்கிறதென்று படகோட்டி சொன்னான். விடிந்தால்தான் தெரியும். இப்பொழுது இரவு இரண்டு மணியிருக்கலாம். தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. மீன்பிடிப் படகுகள். இந்தத் திட்டு தண்ணீருக்குள் முட்டை மிதப்பதைப்போல மிதக்கிறது என்று அருள்குமரனுக்கு ஏனோ தோன்றிற்று. முதுகுப்…

விமர்சனங்களிலிருந்து

முருகபூபதி

வன்னி மக்களின் ஆத்மாவைச் சொல்லும் சயந்தனின் ஆதிரை போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் தொடரும் தமிழ் மக்கள் அவலங்களின் ஆவணம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை இலங்கை மலையகம் பலாங்கொடையில் எனது உறவினர்கள் சிலர் sayanthanவசித்தார்கள். எனது அக்காவை அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு ( பெற்றோர் பேசிச்செய்த திருமணம்) மணம் முடித்துக்கொடுத்தார்கள். 1966 ஆம் ஆண்டில் நீர்கொழும்பில் அக்காவின் திருமணம் நடந்தபொழுது நான்தான் மாப்பிள்ளைத்தோழன். அக்கா மலையகத்தில் குடியேறியதனால் அங்கு உறவுகள் பிறந்தன. ஒருவர் எனது அக்காவின் கணவரின் தங்கையை மணம்முடித்தார். அவருக்கும் பாலங்கொடையில் ஒரு வர்த்தகநிலையத்தில் லொறிச்சாரதி வேலை. 1981 இல் மலையகத்தில் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, இறக்வானை, தெனியாய ஆகிய ஊர்கள் சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டபோது பலாங்கொடையும் தப்பவில்லை. அக்கா குடும்பம் வவுனியாவில் காணி வாங்கி குடியேறியது. அதுபோன்று அந்தச்சாரதியின் குடும்பமும் (எனக்கு அண்ணா - அண்ணி முறை உறவு) பூவரசங்குளத்தில் ஒரு துண்டு காணி வாங்கி குடிசை அமைத்து வாழத்தலைப்பட்டது. அவருக்கு வேப்பங்குளத்தில்…
முழுவதும் வாசிக்க →
✉
புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

“

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்
“

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி
“

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்