September 17, 2026

திசை ஒன்பது – உயிரின் பேராவல்: கருணாகரன்

இலங்கையின் இனவாதப் போர்ச் சூழலைத் தன்னுடைய பெரும் நாவலான ‘ஆதிரை’ யில் கட்டமைத்த சயந்தன், ‘ஆறாவடு’, ‘அஷேரா’ என்ற மற்றைய இரண்டு நாவல்கள் வழியாகவும் தன்னுடைய புனைவுப் பரப்பை இலங்கையிலிருந்து வெளியுலகை நோக்கி விரித்திருந்தார். அப்படி விரிக்கும்போது, ‘உள்நாடு மட்டுமல்ல, உலகமே ஒரு அரசியற் சூதாட்டக் களமாகத்தான் இருக்கிறது’ என்பதையும், ‘அது சாதாரண மனிதர்களின் வாழ்க்கையோடு விளையாடி, அவர்களைப் பலியெடுத்துக் கொண்டேயிருக்கிறது’ என்பதையும் காண்பித்தார். அந்தத் தொடர்ச்சியில்தான், சயந்தனின் புதிய நாவலான ‘திசை ஒன்பது’, வும் எழுதப்பட்டுள்ளது. […]
◷ 8 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

Sample article image

அஷேரா! ஈழத்தின் இன்னொரு முகம் – திராவிடமணி

ஈழத்திலிருந்து அகதிகளாக சுவிற்சர்லாந்திற்கு வந்த அருள்குமரன், அற்புதம், என்ற இருவர் கடந்து வந்த பாதைகளின் வலிகளைப் பற்றிப் பேசும் புதினம். அருள்குமரனும், அற்புதமும் ஈழத்தில் பிறந்து, பல்வேறு இயக்கங்களைக் கடந்து உயிர்வாழ்தலின் தேவையுணர்ந்து அந்நாட்டிலிருந்து தப்பித்து சுவிற்சர்லாந்திற்கு வந்து… அகதிமுகாமில் தங்கி,…

அஷேரா! நீரோட்ட ஆழம் – கஜுரி புவிராசா

துரோகங்களால் இன்று இந்த நிமிஷம் வரை வதைபட்டுக்கொண்டிருக்கிறது ஒரு இனம்… அதன் இன்னல்களை பட்ட வதைகளை சிந்திய சிவப்புத் துளிகளை தெறித்த நிணக்குழம்புகளை எல்லாம் எதிர்காலத்திற்கு கடத்தியாக வேண்டியது காலத்தினது மட்டுமல்ல ஒவ்வொருவருடைய கடப்பாடும்.. காயங்கண்ட சிம்மங்களோ புலிகளோ நாவால் அந்த…

அஷேரா! அற்புதம்மான் – நெற்கொழுதாசன்

“அஷோராவின் அற்புதம்” என்பது, வார்த்தைகளுக்குள் உறைந்துபோய் விடக்கூடிய ஒரு உணர்ச்சியல்ல. ஒவ்வொரு பகுதிகளாக வரைந்து வரைந்து சட்டென முழுமையான சித்திரமொன்றை காட்சிப்படுத்தி உணர்ச்சிப்பிழம்பான மனநிலையை உருவாக்கிவிடுகின்றது. 0 மறந்துவிட, விலகிப்போக, மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற தவிப்பை தினம்தோறும் கொண்டலைகின்ற ,…

அஷேரா! புனிதங்களை அசைக்கும் மொழிக்கற்கள் – சுரேகா பரமன்

ஈழப்போராட்ட வரலாற்றையும் அதன் அதிர்வுகளையும் கண்ணீரும் இரத்தமுமாகப் பேசிய ஆதிரைக்குப்பின்னராக சயந்தன் அண்ணாவால் எழுதப்பட்டிருக்கின்ற அஷேரா நாவலானது , “போராட்டம் முடிவடைந்த பின்னர் தனி மனிதன், தன் அடுத்த கட்ட வாழ்வியலுக்குள் இயல்பாக நகரமுடியாது உழல்கின்ற தன்மையை தனிமனித போராட்டமாக உணர்வு…

அஷேரா! மனதை விட்டு அகலாத அற்புதம் – உமா ஆனந்த்

“கையைச்சுடும் என்றாலும் தீயைத்தொடும் பிள்ளைபோல்” நான் ஏன் தேடி தேடி ஈழக்கதைகளை வாசிக்கிறேன் என்று புரியவில்லை. எப்படியாவது வாழ்ந்துவிட துடிக்கும் மக்களின் கதை. உயிர் வாழும் ஆசை எந்த எல்லைக்கும் துரத்தக்கூடியது . அற்புதம் கடைசி முறையாக இலங்கையில் இருந்து கிளம்புவதை…

விமர்சனங்களிலிருந்து

முருகபூபதி

வன்னி மக்களின் ஆத்மாவைச் சொல்லும் சயந்தனின் ஆதிரை போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் தொடரும் தமிழ் மக்கள் அவலங்களின் ஆவணம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை இலங்கை மலையகம் பலாங்கொடையில் எனது உறவினர்கள் சிலர் sayanthanவசித்தார்கள். எனது அக்காவை அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு ( பெற்றோர் பேசிச்செய்த திருமணம்) மணம் முடித்துக்கொடுத்தார்கள். 1966 ஆம் ஆண்டில் நீர்கொழும்பில் அக்காவின் திருமணம் நடந்தபொழுது நான்தான் மாப்பிள்ளைத்தோழன். அக்கா மலையகத்தில் குடியேறியதனால் அங்கு உறவுகள் பிறந்தன. ஒருவர் எனது அக்காவின் கணவரின் தங்கையை மணம்முடித்தார். அவருக்கும் பாலங்கொடையில் ஒரு வர்த்தகநிலையத்தில் லொறிச்சாரதி வேலை. 1981 இல் மலையகத்தில் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, இறக்வானை, தெனியாய ஆகிய ஊர்கள் சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டபோது பலாங்கொடையும் தப்பவில்லை. அக்கா குடும்பம் வவுனியாவில் காணி வாங்கி குடியேறியது. அதுபோன்று அந்தச்சாரதியின் குடும்பமும் (எனக்கு அண்ணா - அண்ணி முறை உறவு) பூவரசங்குளத்தில் ஒரு துண்டு காணி வாங்கி குடிசை அமைத்து வாழத்தலைப்பட்டது. அவருக்கு வேப்பங்குளத்தில்…
முழுவதும் வாசிக்க →
✉
புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

“

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்
“

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி
“

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்