September 17, 2026

திசை ஒன்பது – உயிரின் பேராவல்: கருணாகரன்

இலங்கையின் இனவாதப் போர்ச் சூழலைத் தன்னுடைய பெரும் நாவலான ‘ஆதிரை’ யில் கட்டமைத்த சயந்தன், ‘ஆறாவடு’, ‘அஷேரா’ என்ற மற்றைய இரண்டு நாவல்கள் வழியாகவும் தன்னுடைய புனைவுப் பரப்பை இலங்கையிலிருந்து வெளியுலகை நோக்கி விரித்திருந்தார். அப்படி விரிக்கும்போது, ‘உள்நாடு மட்டுமல்ல, உலகமே ஒரு அரசியற் சூதாட்டக் களமாகத்தான் இருக்கிறது’ என்பதையும், ‘அது சாதாரண மனிதர்களின் வாழ்க்கையோடு விளையாடி, அவர்களைப் பலியெடுத்துக் கொண்டேயிருக்கிறது’ என்பதையும் காண்பித்தார். அந்தத் தொடர்ச்சியில்தான், சயந்தனின் புதிய நாவலான ‘திசை ஒன்பது’, வும் எழுதப்பட்டுள்ளது. […]
◷ 8 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

Sample article image

அஷேரா! சொல்லப்படாத கதை – வெ.நீலகண்டன்

நாற்பதாண்டுக்கால ஈழத்து வாழ்க்கைத் துயரங்களைத் தன் இரு நாவல்களில் உளவியல் நுண்ணுணர்வோடு பதிவு செய்து கவனம் ஈர்த்த சயந்தனின் மூன்றாவது நாவல் ‘அஷேரா.’ போர், தனிமனிதர்களின் வாழ்க்கையை எப்படிக் கூறுபோட்டு விளிம்புக்குத் துரத்துகிறது என்ற எதார்த்தத்தை அருள்குமரன், அற்புதம், அபர்ணா, நஜிபுல்லா…

அஷேரா! மனதின் தீராத இருட் கயத்தில் முட்டி பய முறுத்தும் சாவின் தொடுதல் – கோணங்கி

திராட்க்ஷை ஜாரில் 243-ஆம்பக்கத்தில் தோன்றும் கிழவன்தான் இந்த அஷேரா நாவலின் தீர்க்கதரிசியாக வந்து மறைகிறான். இந்த ஈழ மண்ணின் குருதியுடன் பிசைந்து வடித்த இந்த பழஞ்ஜாடிக்குள் அஷேராவின் கதா உருக்களெல்லாம் ஜாடியின் சுவர் வழியே கசிந்து வந்து திரும்பவும் உள்ளே மறைந்து…

அஷேரா! காலங்கடந்தும் வாழவல்ல ஒரு படைப்பு – எஸ்.கே.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் சயந்தனின்  ஐந்தாவது நூலும்  மூன்றாவது நாவலுமாகிய அஷேராவை வாசித்துமுடித்த சூட்டோடு இந்தக் குறிப்பை எழுதும் சந்தர்ப்பம் வாய்த்தது ஒருவகையில் தற்செயலானதே. அவரது  சிறுகதைத் தொகுப்பான அர்த்தம்,  நாவல்களான ஆறாவடு, ஆதிரை  ஆகிய நூல்களை  நான் ஏற்கனவே வாசித்திருந்த போதும், ஆறாவடு …

அஷேரா! ஆறாவடுவின் தொடர்ச்சி – மல்லியப்புசந்தி திலகர்

1990 களில்தான் ஐரோப்பிய நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இலங்கை வந்திருந்தபோது முதன் முறையாக புலம்பெயர்ந்த ஒருவரை சந்தித்த அல்லது பார்த்ததாக நினைவு. அப்போது அவரை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என்றுதான் அழைத்தோம். புலம்பெயர்ந்தவர் என்ற சொல்லே அப்போது தெரியாது. அவர்…

அஷேரா! உடல் உள ஏக்கங்களின் தேடல் – நிலாந்தி சசிகுமார்

சயந்தனின் படைப்புகளில் ஆறாவடு, ஆதிரை வரிசையில் இன்று அஷேரா. இலங்கைக்கு சம்பந்தமற்ற ஒரு தலைப்பில் போருக்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டமைந்த புனைவுகளின் செறிவு. அஷேராவின் வரலாற்றுக்கும் உலகத்தின் அனைத்துப் பெண்களின் கதைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. அந்தவகையில் தான் நாவலை நாம்…

விமர்சனங்களிலிருந்து

முருகபூபதி

வன்னி மக்களின் ஆத்மாவைச் சொல்லும் சயந்தனின் ஆதிரை போருக்கு முன்னரும் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும் தொடரும் தமிழ் மக்கள் அவலங்களின் ஆவணம் வன்னிக்காடுறை மனிதர்களின் நிர்க்கதி வாழ்வைப்பேசும் ஆதிரை இலங்கை மலையகம் பலாங்கொடையில் எனது உறவினர்கள் சிலர் sayanthanவசித்தார்கள். எனது அக்காவை அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு ( பெற்றோர் பேசிச்செய்த திருமணம்) மணம் முடித்துக்கொடுத்தார்கள். 1966 ஆம் ஆண்டில் நீர்கொழும்பில் அக்காவின் திருமணம் நடந்தபொழுது நான்தான் மாப்பிள்ளைத்தோழன். அக்கா மலையகத்தில் குடியேறியதனால் அங்கு உறவுகள் பிறந்தன. ஒருவர் எனது அக்காவின் கணவரின் தங்கையை மணம்முடித்தார். அவருக்கும் பாலங்கொடையில் ஒரு வர்த்தகநிலையத்தில் லொறிச்சாரதி வேலை. 1981 இல் மலையகத்தில் இரத்தினபுரி, காவத்தை, பெல்மதுளை, இறக்வானை, தெனியாய ஆகிய ஊர்கள் சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டபோது பலாங்கொடையும் தப்பவில்லை. அக்கா குடும்பம் வவுனியாவில் காணி வாங்கி குடியேறியது. அதுபோன்று அந்தச்சாரதியின் குடும்பமும் (எனக்கு அண்ணா - அண்ணி முறை உறவு) பூவரசங்குளத்தில் ஒரு துண்டு காணி வாங்கி குடிசை அமைத்து வாழத்தலைப்பட்டது. அவருக்கு வேப்பங்குளத்தில்…
முழுவதும் வாசிக்க →
✉
புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

“

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்
“

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி
“

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்