அஷேரா! ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் – சுபா
‘ஏரி பெரிய இருள்ப் படுக்கையைப் போல விரிந்துகொண்டே போனது…’. மனதின் ஒவ்வொரு இருள் படுக்கையாக உரித்து உரித்து எடுத்து, சில நாட்களுக்கு ஆப்கானின் வரண்ட மலைகளாக நிச்சலனத்துடன் வெறித்து மட்டுமே நிற்க வைத்தது அஷேரா எனும் ஆழமான நாவல். காமமும், கோபமும் உயிர்க்குணங்கள். பிரிக்க முடியாதவை. இருள் போர்த்தியவை….