பனை – சாதியின் ஒரு நெம்புகோல், சாதியின் ஆப்பாகுமா?
சாதியத்தை வெறுமனே வர்க்கப் பார்வையற்று அணுகிவிட முடியாது. நிலத்தின் மீதான அதிகாரம் சாதியத்தை தக்கவைக்கும் இன்னொரு விடயமாகும். புலிகள் குடிமைத் தொழிலை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த காலத்திற்குச் சமாந்தரமாக சாதிய அசமத்துவத்தின் வேர் சொத்துடைமையுடன் தொடர்புடையது என்ற கோணத்தில் ஆதாரம் சஞ்சிகையில் 1992 ஜனவரி, மார்ச் இதழ்களில் தொடங்கப்படட உரையாடல் இது. கோழி வளர்ப்பு தனியொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு தொழிலல்ல. விவசாயமும் அப்படியே. எந்தச் சாதியும் விவசாயம் செய்யலாம். கால்நடை வளர்ப்பும் சாதிக்கென்று வரையறுக்கப்பட்டதொன்றல்ல. …