ஒரு சொட்டுக் கண்ணீர்
02.12.2012 பனிகொட்டிய காலை தூரத்தில் எங்கேயோ ஆரம்பித்து எதிர்த்திசையில் மெதுவாக நகர்ந்த இடிமுழக்கமும், இரைந்துகொண்டேயிருந்த மழைச்சத்தமும் உண்மையா அல்லது வெறுமனே பிரம்மையா என்று உள்ளுணர்வை ஆராய்ந்தபடி தூக்கத்திற்கும் விழிப்பிற்குமிடையில் கிறங்கிக் கிடந்தான் ரொக்கெற். பிரம்மைதான். இப்படியொரு சோனாவாரிப் பேய்மழை இங்கே பெய்யச் சாத்தியமில்லை. அவன் மழையின் ஓசையை திரும்பவும்…