ஆதிரை : முன்நின்று கல்நின்றவள் – கமலக்கண்ணன்

களத்தில் ஆயுதமேந்திப் போராடும் வீரர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வின் நிலையின்மையுடன் போராடும் குடியானவர்களும் போரின் வலியை ஏந்திச் சுமப்பதில் முதன்மையானவர்களே. பத்துக்கும் குறைந்த வயதுடைய முகையவிழாக் குழந்தைகள், பேதலிப்பின் விளிம்பில் நின்றபடி முன்னகரும் தாய்மார்கள், நரைகூடிக் கிழப்பருவம் எய்தியபின்னும் பிஞ்சுகளின் மரணத்தைக் கண்டு வேதனையுறும் முதுமகன்கள் என நூலெங்கும்… தொடர்க

திசை ஒன்பது வாசிப்பு / ஜ்யோவ்ராம் சுந்தர்

சயந்தனின் திசை ஒன்பது படித்தேன். அகதி வாழ்க்கையை நோக்கிச் செல்பவர்களின் பயணங்கள், அதில் சந்திக்கும் கஷ்டங்கள்தான் முழு நாவலும். இந்த நாவல் பேசும் அரசியல் தனித்துவமானது. படித்தால்தான் விளங்கும். அவரது ஆறாவடு, அஷேரா அளவிற்கு எனக்கு அப்பீல் ஆகவில்லையென்றாலும், நன்றாகவே இருக்கிறது. சில விஷயங்கள் ரிப்பீட் ஆவது கொஞ்சம்… தொடர்க

திசை ஒன்பது வாசிப்பு / சின்னராஜா விமலன்

புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர் சயந்தன் எழுதிய ‘திசை ஒன்பது’ நாவலை இன்றைய தினம் படித்து முடித்ததும் சிறியதொரு அறிமுகக் குறிப்பை எழுதத் தோன்றியது. புலம்பெயர் எழுத்துக்கள் அறிமுகப் படுத்திய புதிய களங்கள் ஈழத்து இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவையாக அமைந்தன. அந்தவகையில் ரஷ்யா – உக்ரேன் போரை முழுமையாகச் சித்திரிக்காவிட்டாலும்… தொடர்க

அஷேரா! எல்லோருக்குமான பிறழ்வு – நிஜந்தன்

அரங்கனால், நிகழும் சந்தேகங்களுக்கை உள்ளாகும் அபர்ணாவின் வாழ்வு சிக்கலானது திருமணத்திற்கு முன்னரான அவனுடன் உறவு வைத்துக்கொள்ளும்பொழுது ஏன் நீ மறுக்கவில்லை என்று திருமணத்தின் போதே தொடங்கி விடுகிறது, அருள் குமரனை அது போன்ற ஒரு சமயத்தில் உதவிவேண்டியே சந்திப்பு உருவாகிறது.

ஈழத்தமிழர்கள் கொடுத்த விலைக்கு பிராயச்சித்தம், ஐந்தாறு பேரை தண்டிப்பது மட்டுமே அல்ல

இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கே உரியது என்ற நம்பிக்கை அது. தமிழர்கள் வெளியிலிருந்து வந்த வந்தேறிகள், இரண்டாம் தர பிரஜைகள் என்ற நம்பிக்கை. இது இன்று, நேற்று வந்ததல்ல, ஆயிரம் வருஷ நம்பிக்கை. இதை பௌத்த மகாசங்கமும் கடும் போக்குள்ள பிக்குகளும் எண்ணெய் ஊற்றி ஊற்றி வளர்த்தெடுக்கிறார்கள். நீதித்துறைகூட அவர்களுக்குப் பணிந்தே ஆகவேண்டிய நிலை.’