அஷேரா! களிம்பிடவும் எலுமிச்சையைத் தேய்க்கவும் – கமலக்கண்ணன்

பாவனைகள் வாழ்வின் அழுத்தமிளக்கிகளுள் ஒரு உத்தி. எதிரிலிருப்பவர் பாவனை செய்கிறார் என்று அறிந்தபோதும் ஆபத்தற்ற பாவனைகளைகளைப் பொருட்படுத்தாமல் விட்டகல்வதே நல்லது. அகதிகளின் வாழ்வில் பாவனைகள் அன்றாடத் தேவையாகிறது. அவர்கள் ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும் என்ற ஐயத்தின் நிழல் அவர்கள் மீது எப்போதும் விழுகிறது. பாரம் கூட்டும் நிழல். புது நிலத்தில்…

அஷேரா! குற்ற உணர்வின் கதை – மானசீகன்

‘அஷேரா’ வெவ்வேறு போராளி இயக்கங்களைச் சார்ந்த இருவரின் நினைவோட்டம் வழியாக இலங்கை விடுதலைப் போரின் சில பக்கங்களைத் திறந்து காட்டுகிறது..கூடுதலாக பனி சூழ்ந்த ஸ்விட்சர்லாந்து மண்ணின் ‘எகெரி’ ஏரிக்கு மேலே மலையில் மையம் கொண்டிருக்கும் அகதி முகாமொன்றின் வாழ்க்கைச் சூழலையும் சித்தரிக்கிறது.. இரு முன்னாள் போராளிகளின் அகக் கொந்தளிப்புகளே…

அஷேரா! தனித்திருக்கும் குளிராடை – குணா கந்தசாமி

ஆறாவடு, ஆதிரை, அஷேரா என்று தன் நாவல்களுக்கு ‘அ’ வரிசையில் சயந்தன் தலைப்பிடுவது தற்செயலா திட்டமிட்டதா என்று தெரியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே அவருடைய நாவல்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். அவருடைய மூன்றாவது நாவல் “அஷேரா” 2021 ஆம் ஆண்டு ஆதிரை வெளியீடாகவும், 2024 ஆம் ஆண்டு இரண்டாவது பதிப்பாக தமிழினியிலும்…

அஷேரா! குற்றவுணர்வும் காமத்தின் ஊடாட்டமும்

சயந்தனின் அஷேரா நாவலை வாசித்தேன். ஈழப்போருக்குப் பிந்தைய போராளிகளின் மனநிலையை ஒட்டிய நாவலாக அமைந்திருக்கிறது. வளரிளம் பருவத்திலே போராளி குழுக்களில் பங்கேற்பவர்கள் வாழ்வின் ஒரு பகுதியைப் போரின் உக்கிரத்தையும் உயிரச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். போர் விழுமியங்களான தியாகம், இலட்சியம் ஆகியவையை அச்சங்கொள்ளச் செய்கின்ற தண்டனைகளின் வாயிலாகவும் இயக்க நடவடிக்கைகளாக முன்வைக்கப்படுகிறது….

பூரணம்

பதுங்கு அகழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன் என்றாள். காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் அவளையொரு தனித் தீவில் கைவிட்டுவிட்டு தொலைவாகப் போய்க்கொண்டிருந்தது. முதுகிலேயோ தொடையிலேயோ எனக்கும் ஒரு வெடி பட்டிருந்தால் என்னையும் ஏற்றிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன் என்றாள். ‘சின்னக்காயம் எண்டால் ஏத்த மாட்டார்கள்..’ ஒருத்திக்கு வயிறு பிளந்திருந்தது…