மருது

எழுத்தாளர் சயந்தன் அவர்களுக்கு, நான் கடந்த முறை எழுதிய போது அடுத்த முறை தமிழில் எழுதுவதாக சொல்லி இருந்தேன். ஆனால் அதற்குள் இரண்டு வருடம் ஓடி விடும் என்று நினைக்க வில்லை. சோதி மலர் போல ஒரு பெண்ணை இதுவரை படித்த எந்த புத்தகத்திலும் சந்திக்க வில்லை. சந்திரா…

ப்ரகாஷ் சிவா

சயந்தன் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒரு இளைஞர், இவரின் பெயரற்றது என்ற சிறுகதை தொகுதியை படித்து முடித்த உடனேயே யோசிக்காமல் ஆதிரையை வாங்கினேன். 1977லில் ஆரம்பமாகும் இந்த நிஜங்களின் தொகுப்பு மூன்று தலைமுறைகளை கடந்து 2013 இல் முடிவடைகிறது. இதுவரை இலங்கையை நேரடியாக அறியாத, ஊடகங்களில்,…

கருப்பையா பெருமாள்

கதாசரியர்கள் தங்கள் அனுபவங்களை ஆசைகளை நிராசைகளை வாழ்வனுபவங்களை தனது பாத்திரங்களின் வாயிலாக வாசகனின் வாசகஉலகிற்கு கடத்துவதே முதலான வேலை. அப்படி கடத்தப்படும் விஷயங்கள் வாசகனுக்கு விருப்பமாக இருந்தால் அந்த நாவல் வாசகனை ஈர்த்துவிடும்.சிலநேரம் வாசகனின் வாழ்வனுபவங்களின் சிறு தெரிப்பு படிக்கும் கதை மாந்தரின் அனுபவங்களோடு ஒன்றியிருந்தால் அந்த நாவல்…

மணிமாறன்

அனைத்தையும் அழித்தொழித்தாகி விட்டது. அரை நூற்றாண்டு கால யுத்தத்தின் கடைசித் துளிகளில் எதை பெற்றது, எதை இழந்தது இந்த இனம். துட்டகை முனுவிற்கும், எல்லாளனுக்கும் துவைந்த யுத்தத்தின் சத்தங்களால் திகைத்திருந்த நிலத்தின் இனியான கதை என்னவாகப் போகிறது. உலகின் காணச் சகியாத காட்சிகளையெல்லாம் வர்ணமேற்றி காட்சி உருவைப் பெரிதினும்,…

ராஜ சுந்தர ராஜன்

“ஆதிரை”, இனப்போர் தன் நச்சுப்பற்களால் தேயிலைத் தோட்டத் தமிழர்களையும் தீண்ட, அங்கிருந்து இடம்பெயரும் இந்தியவழித் தமிழர்களோடு தொடங்கி, அவர்கள் சக்கிலியர்கள், வடக்குமுகமாக வளர்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டு, சற்று தெற்காமை வந்து, அம் மக்களோடு ஒண்ணுமண்ணாப் புழங்கும் சந்திரா-அத்தார் தம்பதி வழியாக விமர்சனக்கோணமும் பெறுகிறது. சந்திரா வெள்ளாளத்தி, அத்தார் அம்பட்டர்….

முருகபூபதி

வன்னி  மக்களின்  ஆத்மாவைச் சொல்லும்  சயந்தனின் ஆதிரை போருக்கு  முன்னரும்  போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும்  தொடரும்  தமிழ்  மக்கள்  அவலங்களின் ஆவணம் வன்னிக்காடுறை  மனிதர்களின்  நிர்க்கதி வாழ்வைப்பேசும்    ஆதிரை இலங்கை  மலையகம்  பலாங்கொடையில்  எனது   உறவினர்கள்  சிலர் sayanthanவசித்தார்கள். எனது  அக்காவை   அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer…

கோணங்கி

சயந்தனின் ஆறாவடு நாவலுக்கு இதழில் வந்த மணிமாறனின் வாச்சியத்திற்குப் பின் இப்போது வந்திருக்கும் ஆதிரை நாவல் அளவில் பெரியதாயினும் தன் தீவு நிலத்தின் அகப்பரப்பில் மலையக சாயல்களோடு பெயர்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் கதை தான் நாவலாகி இருக்கிறது. ஆறாவடு நாவலோ அளவில் சிறியதாயினும் கால் இழந்த போராளியின் செயற்கைக்…

மங்கை செல்வம்

அழுகை, அச்சம், கையாலாகாத கோபம், ஒரு விதமான சுயவெறுப்பு எல்லாமுமாக ஆதிரையை முடித்தேன். எல்லாருக்கும் நியாயம் இருப்பது போல் ஆனால் எதற்குமே அர்த்தம் இல்லாதது போலும்… நண்பரொருவர் சொல்லியது போல் வன்னியின் எளிய மக்கள்படும் துன்பத்தை விட அவர்கள் எல்லோராலும் நடத்தப்படும் அவலம். Racial purity ethnic supremacy…

ஹரி ராசலெட்சுமி

அதிகார மையங்களால் எழுதப்பட்ட வரலாறுகளுக்குள் விளிம்பின் இடப்படுத்தல்களையும், எழுதப்படுதலின் வன்முறையையும் குறித்து 80களின் இறுதியிலும், 90களின் ஆரம்பத்திலும் தமிழில் நிறையவே ஆரோக்கியமான விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பின்-அமைப்பியல் சிந்தனை, சபால்டேர்ன் வரலாற்றெழுத்தியல், பெண்ணியம் மற்றும் தலித்தியத்தால் ஊக்கம்பெற்ற விமர்சனமரபு தமிழில் மிகவும் கச்சிதமான தாக்கங்களையும், மாற்றங்களையும் உண்டு பண்ணியிருக்கின்றது. இந்தப்…

புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ் மக்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இறுதி 15 வருடங்களை ஒட்டுமொத்தமாக தாங்கி நின்றது வன்னிப் பெருநிலம். காடுகளும், களணிகளும், கடலும் சார்ந்த வன்னிப் பெருநிலம், தன்னுள் தன் பூர்வீகக் குடிகளை மாத்திரமின்றி மலையகத்திலிருந்தும், கிழக்கிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் வந்த பெருமளவு மக்களையும் ஒரு தாயின் உள்ளன்போடு உள்வாங்கிக் கொண்ட…