பாதசாரி

ஆதிரை நாவல் முதல் வாசிப்பு முடித்தேன். நுட்பங்களை தவற விடாமல் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.. அதற்குள் அவசரப் பட்டு எழுதத்தூண்டுது அந்தரித்த மனது..! வாழ்க்கைக்கும் வார்த்தைக்குமான இடைவெளித்தூரம் என்பது இந் நாவலில் ஒரு பெருமூச்சின் நீளமே… படைப்பு நோக்கத்தின் அடிப்படைத் தார்மீகம், படைத்த விதத்தில் நம்பகத்தன்மை,…

மோட்டார் சைக்கிள் குரூப்

முடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது, முறிகண்டி மாங்குளம் வீதியில் பனிச்சங்குளத்திற்கு சற்றுத்தள்ளி, தெருவிலிருந்து அடர் காட்டுக்குள், சமாந்தரமான இரு கோடுகளாய் இறங்கும் சிவப்பு மண் தெரிகிற பாதையில் சுற்றி அடைக்கப்பட்டிருந்த தகரங்களில் கரும் புகை அப்பிப் படர்ந்திருந்த குசினியையும், கானகத்தின் இருள் மெதுவாய்…

தமிழ்நதி

எந்தவொரு படைப்பையும் முன்முடிவுகளோடு வாசிக்கக்கூடாதென அண்மைக்காலமாக எண்ணுகிறேன். ஆனால், முகநூலும் சில இணையப் பதிவுகளும் தந்த சித்திரங்களை எளிதில் துடைத்தழித்துவிட்டு வாசிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். அதிலும் குறிப்பாக அ.இரவியால் எழுதப்பட்ட விமர்சனங்கள்… பிடித்த குழந்தையை கொஞ்சிக் கொஞ்சி கன்னம் வலிக்கப் பண்ணும் நேசம் அது. முப்பதாண்டு…

அ.இரவி (பொங்குதமிழ் இணையம்)

2011 நத்தார் தினங்களில் ஒன்று. ‘ஒருபேப்பர்’ வைத்த விருந்து ஒன்றில் சயந்தன் சொன்னார். “நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்.” நான் நினைத்தேன்: ‘அது இலேசான காரியமோ? சிறுபிள்ளை வேளாண்மை. வீடு வந்து சேர்ந்தாலும் உண்ண முடியாதது.’ பிறகு சயந்தன் சொன்னான். “அந்த நாவலுக்கு இயக்கம் என்று பெயர் வைத்திருக்கிறேன்.”…

சின்ராசு மாமா

சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி…