ஒரு சொட்டுக் கண்ணீர்

அப்படியொருநாள் தட்டிலிருந்து கவளம் சோற்றை வாயருகில் கொண்டு போனபோது சோற்றையிட்டவர் சொன்னார். “கஸ்ரப்பட்டு இந்தக் குளிரிலையும் பனியிலையும் உழைத்த காசையெல்லாம் உங்களை நம்பித்தானே அனுப்பி வைத்தோம். கரியாக்கி விட்டீங்களே”அந்த வார்த்தைகளைக் கேட்டபிறகு தொண்டைக் குழிக்குள் எனக்கு எப்படிச் சோறு இறங்கும். அதன்பிறகு நான் கோயிலுக்குப் போறதில்லை. அண்ணன், யாருக்காக…

கிழவனின் உயிர்!

“பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை..” மர்மக்கதையொன்றின், முதலாவது முடிச்சை இலாவகமாக முடிவதுபோல நடேசுக் கிழவர் ஆரம்பித்தபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்து தலையை அவரிடத்தில் சரித்தேன். இம்மாதிரியான திகில்…

அஷேரா! சொல்லப்படாத கதை – வெ.நீலகண்டன்

நாற்பதாண்டுக்கால ஈழத்து வாழ்க்கைத் துயரங்களைத் தன் இரு நாவல்களில் உளவியல் நுண்ணுணர்வோடு பதிவு செய்து கவனம் ஈர்த்த சயந்தனின் மூன்றாவது நாவல் ‘அஷேரா.’ போர், தனிமனிதர்களின் வாழ்க்கையை எப்படிக் கூறுபோட்டு விளிம்புக்குத் துரத்துகிறது என்ற எதார்த்தத்தை அருள்குமரன், அற்புதம், அபர்ணா, நஜிபுல்லா போன்றவர்களின் வாழ்க்கையைக் கொண்டு காட்சிப்படுத்துகிறார் சயந்தன்….

அஷேரா! மனதின் தீராத இருட் கயத்தில் முட்டி பய முறுத்தும் சாவின் தொடுதல் – கோணங்கி

திராட்க்ஷை ஜாரில் 243-ஆம்பக்கத்தில் தோன்றும் கிழவன்தான் இந்த அஷேரா நாவலின் தீர்க்கதரிசியாக வந்து மறைகிறான். இந்த ஈழ மண்ணின் குருதியுடன் பிசைந்து வடித்த இந்த பழஞ்ஜாடிக்குள் அஷேராவின் கதா உருக்களெல்லாம் ஜாடியின் சுவர் வழியே கசிந்து வந்து திரும்பவும் உள்ளே மறைந்து விடுகிறார்கள். எல்லாக் கொடுமைகளையும் தாங்கி உடைபடாத…

அஷேரா! ஆறாவடுவின் தொடர்ச்சி – மல்லியப்புசந்தி திலகர்

1990 களில்தான் ஐரோப்பிய நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இலங்கை வந்திருந்தபோது முதன் முறையாக புலம்பெயர்ந்த ஒருவரை சந்தித்த அல்லது பார்த்ததாக நினைவு. அப்போது அவரை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என்றுதான் அழைத்தோம். புலம்பெயர்ந்தவர் என்ற சொல்லே அப்போது தெரியாது. அவர் அழகாக இருந்தார். அவர் ஆங்கிலம் பேசும்…