September 17, 2026

திசை ஒன்பது – உயிரின் பேராவல்: கருணாகரன்

இலங்கையின் இனவாதப் போர்ச் சூழலைத் தன்னுடைய பெரும் நாவலான ‘ஆதிரை’ யில் கட்டமைத்த சயந்தன், ‘ஆறாவடு’, ‘அஷேரா’ என்ற மற்றைய இரண்டு நாவல்கள் வழியாகவும் தன்னுடைய புனைவுப் பரப்பை இலங்கையிலிருந்து வெளியுலகை நோக்கி விரித்திருந்தார். அப்படி விரிக்கும்போது, ‘உள்நாடு மட்டுமல்ல, உலகமே ஒரு அரசியற் சூதாட்டக் களமாகத்தான் இருக்கிறது’ என்பதையும், ‘அது சாதாரண மனிதர்களின் வாழ்க்கையோடு விளையாடி, அவர்களைப் பலியெடுத்துக் கொண்டேயிருக்கிறது’ என்பதையும் காண்பித்தார். அந்தத் தொடர்ச்சியில்தான், சயந்தனின் புதிய நாவலான ‘திசை ஒன்பது’, வும் எழுதப்பட்டுள்ளது. […]
◷ 8 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அஷேரா – 25

25 குளிர், பூச்சியத்திற்குக் கீழே எட்டு அல்லது பத்துக்குப் போயிருக்க வேண்டும். மோர்கார்த்தென் நினைவாலயத்திற்கு ஏறும் கருங்கல் பாதையில் கனத்த இருள். அருள்குமரன் மூச்சிரைக்க மூச்சிரைக்க ஏறினான். கை கால்கள் திடீர் திடீரென்று குளிரில் உறைந்துவிடுவதைப் போலவும் கஸ்ரப்பட்டுப் பிரித்துக் கொள்வதாகவும்…

மழையும் வானத்தின் பழைய துயரமும்

சில புனைவுகளை வாசிக்கும்போது, ஒரு காட்சியை அதனுடைய இயல்பிலேயே இருக்கவிட எழுத்தாளருக்கே நம்பிக்கை இல்லை என்பது போலத் தோன்றுகிறது. ஒரு மரம் மரமாக நிற்பதற்கு முன்பே அது காலத்தின் அடையாளமாகிவிடுகிறது. மழை பெய்யத் தொடங்குவதற்குள் அது ஒருவரின் உள்மனக் கலக்கத்தைச் சுமக்கிறது.…

அஷேரா – 24

தலைக்குத் தோய்ந்துவிட்டு உடலைத் துவட்டியபடி குளியல் அறையிலிருந்து அற்புதம் வெளியேறினார். அவர் பயன்படுத்திய போர்வையையும் தலையணை உறைகளையும் துவைப்பதற்காகக் கூடைக்குள் அடைந்துகொண்டிருந்த அருள்குமரன் அவரை நிமிர்ந்து பார்த்தான். நெஞ்சிலும் வயிற்றிலும் அம்மிக் கல் பொளிந்த மாதிரி அம்மைத் தழும்புகள். பாவம். அம்மைப்…

அஷேரா – 23

கொழும்பு மாநகர சபை மைதானத்தில் தேர்தல் பிரச்சார மேடையில் குண்டு வெடித்துவிட்டது என்ற செய்தியை அருள்குமரன் பார்த்துக்கொண்டிருந்த ‘மர்மதேசம்’ தொடருக்கு நடுவில் திடீரென்று ஒளிபரப்பினார்கள். இரவு பத்து மணியிருக்கும். இப்பொழுதுதான் வீட்டுக்கார அம்மா ‘சித்தி’ நாடகம் பார்த்துவிட்டு தூங்கப் போயிருந்தாள். நல்ல…

அஷேரா – 22

“அரங்கன்  வந்திட்டார்.” என்றாள் அபர்ணா. அதற்குப் பிறகும் அவள் ஏதோ பேசிக்கொண்டுதான் போனாள், சிறு சலனம் கூட இல்லாமல். அருள்குமரனுக்குத்தான் சட்டென்று இழை அறுந்துவிட்டதைப்போல தோன்றிற்று. அவன் வெறுமனே காதில் தொலைபேசியைப் பிடித்து வைத்துக்கொண்டு நின்றான். அது எப்பிடிச் சாத்தியம்? மின்னாமல்…

விமர்சனங்களிலிருந்து

அல்லற்பட்ட ஓர் இனத்தின் துயர்

தீபு ஹரி ஆதிரையைப் படிக்கத் தொடங்கிய போதே, போர் பற்றிய லட்சியவாதக் கற்பனைகள் எல்லாம் உடைந்து விட்டன. தியாகம் ,லட்சியம், கனவு என்பதைத் தாண்டி போர் என்பது ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்கும், உரிமைக்குமான வேட்கையே என்பது விளங்கியது. போர் எவ்வாறு மனிதர்களுடைய சமநிலையை, வாழ்வாதாரத்தை, நம்பிக்கைகளை,தன்மானத்தை எல்லாம் குலைத்துப் போடுகிறது?எது மக்களை இயக்கத்தை நோக்கி நகர்த்துகிறது? பெண்களுடைய பார்வையில் போர் என்னவாக இருக்கிறது என்கிற கேள்விகளுக்கான பெரும் தேடலாகவே இந்தப் புதினம் விரிகிறது. ஒரு போரின் வெற்றி தோல்வியை வெளியில் இருந்து வெறும் பார்வையாளர்களாகப் பார்க்கிறவர்கள், அதனுடைய கொள்கை , நோக்கம் , அதை நோக்கிய போராட்டத்திற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் போன்றவற்றை வைத்து அதை ஆதரிக்கவும், விமர்சிக்கவும் செய்கிறோம். போர் என்றால் இழப்புகளும் இருக்கதான் செய்யும் என்று சமாதானம் கொள்கிறோம். ஆனால் நேரடியாக போருக்குள் அகப்படும் மக்களின் மனநிலை வேறாக இருக்கிறது. போரினால் ஏற்படும் பொருள் இழப்புக்கள்,உயிர் இழப்புகள்,மற்றும் பாதுகாப்பின்மை போன்றவை பெரும்பான்மையான மக்களை அகிம்சை வழியிலான போராட்டத்தையே ஆதரிக்கச் செய்கிறது. இந்த நாவலில்…
முழுவதும் வாசிக்க →
புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்