August 22, 2026

அஷேரா – 21

கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன் யார்? “அதுக்குப் பிறகு நீ யாரோ.. நாங்கள் யாரோ.. உனக்காக நாங்கள் உரிமை கோர முடியாது. எப்பவாவது கைதிகளைப் பரிமாறும்போது கூட பட்டியலில் உன்ர பெயரைச் சேர்க்க முடியாது.” கடல் தாண்டும் முன்னர் சொல்லப்பட்டவற்றை […]
◷ 28 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

Sample article image

எனக்கும் ஒரு சாதி சான்றிதழ்

மண்டபம் ஏதிலிகள் தங்ககத்திலிருந்து திருச்சிக்கு சென்று தங்கியிருந்த காலப் பகுதி அது! என்னை அங்குள்ள ஏதாவது பள்ளியில் சேர்த்து விடுவதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் மூலமாக அறிமுகமான சட்டத்தரணி ஒருவர் தான் அதற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும்…

யானைக் கதை

இண்டைக்கு ஒரு யானைக் கதை சொல்லப்போறன்! அப்ப நாங்கள் தேவிபுரத்திலை இருந்தனாங்கள். தேவிபுரம் வன்னியில புதுக்குடியிருப்புக்கும் உடையார் கட்டுக்கும் இடையிலை இருக்கு. உடையார் கட்டை நானும் நண்பர்களும் UK எண்டுதான் சொல்லுவம். ஒரு சித்திரை மாசம் நடுச்சாமம் தான் நாங்கள் தேவிபுரத்துக்கு…

மீண்டும் வணக்கம்

ஒரு சில கால இடைவெளியின் பின்னர் மீண்டும் வந்துவிட்டேன். யாழ் தந்த வீட்டில் போட்டது போட்டபடி இருக்க கொஞ்சம் ஜிலு ஜிலுப்பாய் ஒரு வீடு கட்டி வந்தாச்சு. ( இங்கே மெல்பேர்ணில் வசிக்கும் வீட்டினையும் மாற்றியாச்சு). இனித் தொடர்ந்து எழுதுவதற்கு முன்பாக…

கண் கெட்ட பின்னும் சூரிய நமஸ்காரம்

அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் தனது முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்து வருவதாக இலங்கை ஜனாதிபதி அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்ததாக சற்று முன்னர் சக்தி வானொலி சொல்லியது. அது இப்பொழுதுதான் அவருக்கு தெரிந்ததா…

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்