கண் கெட்ட பின்னும் சூரிய நமஸ்காரம்

அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் தனது முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்து வருவதாக இலங்கை ஜனாதிபதி அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்ததாக சற்று முன்னர் சக்தி வானொலி சொல்லியது.

அது இப்பொழுதுதான் அவருக்கு தெரிந்ததா என்ற கேள்வியும் இப்போதாவது தெரிந்ததே என்ற எண்ணமும் ஒருங்கே உண்டாகின்றன.
சக்தி சொல்லியதை வைத்துப் பார்த்தால் நமது அதிபர் சற்றுக் கடுமையாகத் தான் கருத்து வெளியிட்டிருக்கிறார் போல தெரிகிறது.

அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் தனது நடவடிக்கைகளுக்கு தடையாக இருப்பதாகவும், சிறு சிறு விடயங்களிற்கு எல்லாம் அரசிலிருந்து விலகப் போவதாக மிரட்டுவதாகவும்,அவ்வாறு விலக விரும்பினால் அவர்கள் தாராளமாக விலகிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அரச பங்காளிக் கட்சியான ஜே வி பியின் நடவடிக்கைகளால் சந்திரிகா எவ்வளவுக்கு நொந்து போயிருக்கிறார் என்பதை அவரது கருத்துக்கள் சொல்கின்றன.

பார்க்கலாம்!

”கண் கெட்ட” பின்னாலும் சூரிய நமஸ்காரம் செய்யலாம்

Last modified: February 13, 2005

2 Responses to " கண் கெட்ட பின்னும் சூரிய நமஸ்காரம் "

  1. வசந்தன்(Vasanthan) says:

    நானும் தமிழில பின்னூட்டம் குடுக்கிற வசதி செய்துகுடுக்க சரியாக் கஸ்டப்பட்டுத்தான் பாத்தனான் இன்னும் திருப்பதியா வரேல. உங்கட பின்னணி நிறம் நல்லாயிருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ.
    வசந்தன்.

  2. Anonymous says:

    இது உலகத்தை ஏமாற்றும் வித்தை.. அவர்களை வெளியேற்றும் அதிகாரம் சந்திரிகாவிடம் இருக்கிறது. வெளியேற்றலாமே- சீலன்

× Close