August 22, 2026

அஷேரா – 21

கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன் யார்? “அதுக்குப் பிறகு நீ யாரோ.. நாங்கள் யாரோ.. உனக்காக நாங்கள் உரிமை கோர முடியாது. எப்பவாவது கைதிகளைப் பரிமாறும்போது கூட பட்டியலில் உன்ர பெயரைச் சேர்க்க முடியாது.” கடல் தாண்டும் முன்னர் சொல்லப்பட்டவற்றை […]
◷ 28 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

Sample article image

ஸ்ரீலங்கா பாஸ்போர்ட் – சிறுகதை

“சிங்கள தன்னவத? ´´ (சிங்களம் தெரியுமா) என்றார் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த மீசையற்ற அதிகாரி. இல்லையென்று தலையாட்டினான் சீலன். “தன்னாய்´´ (தெரியாது) என சிங்களத்திலேயே அவனால் பதிலளித்திருக்க முடியும். கொழும்பில் தங்கியிருந்த கடந்த இரண்டு வருட காலத்தில் எக்காய், தெக்காய்,…

பட்டாம் பூச்சியும் பன்னிரு வருட சிறையும்

2002 இன் பெப்ரவரியில் ஒரு நாள்! தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருக்கின்றேன். வவுனியா ஓமந்தைப் பிரதேசத்தில் நிகழும் இலங்கை இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற நிகழ்வொன்று நேரடியாக ஒளிபரப்பாகிறது. இலங்கை அரச படைகளால் ஆங்காங்கே கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப்…

நகல்த் துளி எத் துளி

இலையினில் தெறித்த துளிகளில் ஒன்று மட்டும் அசல் துளி அல்ல. அது எத்துளி..? Photoshop Tutorial ஒன்றிலிருந்து –

இலையினில் தெறித்த துளிகளில் ஒன்று மட்டும் அசல் துளி அல்ல. அது எத்துளி..? Photoshop Tutorial ஒன்றிலிருந்து –

நீர் விழுது !

கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் ஆடிச்சாம். என்ன… நீர் விழுதுதானே..லுசேர்ண் மாநிலம்

கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் ஆடிச்சாம். என்ன… நீர் விழுதுதானே..லுசேர்ண் மாநிலம்

சைவக் கோழி சாப்பிட்டிருக்கீங்களா..

அண்மையில் ஒரு உறவினரின் நிகழ்வொன்றிற்குச் சென்ற போது இப்படியொரு சேவலைச் செய்து வைத்திருந்தார்கள். பார்க்க அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அசப்பில் அசல் போலவே இருக்கிறதல்லவா..

அண்மையில் ஒரு உறவினரின் நிகழ்வொன்றிற்குச் சென்ற போது இப்படியொரு சேவலைச் செய்து வைத்திருந்தார்கள். பார்க்க அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அசப்பில் அசல் போலவே இருக்கிறதல்லவா..

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்