August 22, 2026

அஷேரா – 21

கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன் யார்? “அதுக்குப் பிறகு நீ யாரோ.. நாங்கள் யாரோ.. உனக்காக நாங்கள் உரிமை கோர முடியாது. எப்பவாவது கைதிகளைப் பரிமாறும்போது கூட பட்டியலில் உன்ர பெயரைச் சேர்க்க முடியாது.” கடல் தாண்டும் முன்னர் சொல்லப்பட்டவற்றை […]
◷ 28 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

Sample article image

இது ஒப்பாரி அல்ல – நினைவு 1

புனைவுகளில் கற்பனை கலந்திருக்குமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இந்த 86 களிலிருந்து என்பது எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நான் நேரடியாகத் தொடர்புற்றிருந்த சம்பவங்களின் பதிவு. இவை அனைத்திலும் மகனாக நண்பனாக வழிப்போக்கனாக வாய் பார்த்தவனாக செய்தி கேட்டவனாக…

4 வது ஆண்டில் சாரல். வாழ்த்த வரிசையாய் வாருங்கள்

சும்மாயிருந்த பொழுதொன்றில் நானெழுதிய யானைக்கதையொன்றைத் தேடிப்புறப்பட்டபோதுதான் புலப்பட்டது. கடந்த பெப்ரவரி 13 இல் சாரல் நான்காவது வருடத்தில் நுழைந்து விட்டிருந்தமை. அட நான்கு வருடமாயிற்றா ? சாரல் Blogspot இற்கு வருவதற்கு முன்பே 2004 செப்டெம்பரில் யாழ்.நெற்றில் (நெட்டில்) சஜீ என்ற…

விருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையமும்

2005 இன் ஒரு நாள், கொழும்பின் பூபாலசிங்கம் கடையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் இருக்கா எனக் கேட்டதற்கு அங்கு வேலை செய்த அக்கா ஒரு மாதிரியா பார்த்தா. பிறகு அவ காட்டிய இன்னுமொருவர் அது விற்பதில் சில பல பிரச்சனைகள்…

நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு.. :)

சற்றே ஓய்ந்து போன சிஞ்சா மனுசிக் கலையகத்தின் ? ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று இந்தப் பாடல். கணணியை மட்டும் உபயோகப்படுத்தி கோர்த்த இசையில் பாடல் வரிகளைப் போட்டுப் பாடுவது நான்தான். (தேவையா இதெல்லாம் ?) இசையமைத்தவர் ராஜ். ஒஸ்ரேலியாவில் ஒலிப்பதிவு…

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்