August 22, 2026

அஷேரா – 21

கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன் யார்? “அதுக்குப் பிறகு நீ யாரோ.. நாங்கள் யாரோ.. உனக்காக நாங்கள் உரிமை கோர முடியாது. எப்பவாவது கைதிகளைப் பரிமாறும்போது கூட பட்டியலில் உன்ர பெயரைச் சேர்க்க முடியாது.” கடல் தாண்டும் முன்னர் சொல்லப்பட்டவற்றை […]
◷ 28 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அந்தக் கண்களும் சில காதல்களும்

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி முற்றத்தின் மத்தியில் பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம் எப்போதாவது எனைச் சந்தித்து சில மொழிகள் பேசும் இரு விழிகள் 0 0 0 சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால்…

நல்லவேளையாக அவர் கையில் ஆயுதங்கள் இல்லை

மாவீரர் தினம் முடிந்துவிட்டது. நானறிந்தவரை லண்டனிலும் கனடாவிலும் விசில் பறக்க நடந்ததாகக் கேள்வி. மற்றைய நாடுகளிலும் அவ்வாறே நடந்திருக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து யாரேனும் வந்து அனல்பறக்கப் பேச அதற்கு விசிலடித்து ஓய்வதோடு நமது தமிழ்த்தேசிய எழுச்சி முடிவுக்கு வருகிறதென நினைக்கிறேன். இம்முறை நெடுமாறன்…

கலைஞருக்கு எழுதிய கடிதமும் காலாவதியான குறிப்புக்களும்

அவுஸ்ரேலிய நாட்டிலிருந்த ஏதோ ஒரு சம்மேளனம் தன் கடிதமொன்றில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஈழத்தெய்வம் ஜெயலலிதா! உண்மையாய் பெருத்த சோகத்தை உணர்ந்தேன். அது ஜெ/கருணாநிதி என்கிற ஒற்றைமனிதர்களை முன்னிறுத்தியதல்ல. கையில் பிஸ்கட்டுடன் யார்யாரோ எல்லாம் எட்டாத உயரத்தில் நீட்டி ஞ்சூ…

சின்ராசு மாமா என்கின்ற துரோகி

சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த மாதிரியா, அல்லது நொந்தமாதிரியா என்று நான் சொல்வேன். “என்ன மாமா இண்டைக்கு உங்கடை கடலம்மா பாத்துப்பாராமல் தந்திருக்கிறா போலை” என்று…

ஸ்பெயின் ஒரு பயணம்

சுவிற்சர்லாந்தின் மத்தியிலிருந்து ஜெனிவா வழியூடாக பிரான்ஸைக் குறுக்கறுத்து அத்திலாந்திக் கடலோரத்தில் ஸ்பெயினின் சன் செபஸ்ரியான் நகருக்கு , சுமார் 1300 கிலோமீற்றர்கள் என்றும் சென்று சேர 13 மணித்தியாலங்களென்றும் நவி காட்டினாலும் வழிநெடுக சுச்சா சிச்சா முச்சா மற்றும் கபே கோலா…

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்