செல்லக் கடிகளும் சின்னக் கீறல்களும்..

By சினிமா

12 வருசங்களுக்கு முன்பு முற்றம் கோடி தாழ்வாரம் கிணற்றடி என வாழ்ந்த சூழலில் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் வளர்த்த காலத்தின் பின் மீண்டும் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஒரு கிராமத்தின் ஏதோ ஒரு கோடியில் வாய்த்து விட்ட வீடாயினும் அமைதியும் கதவைத் திறந்தால் முன் முற்றத்தில் இறங்கி விளையாடும் சூழலும் வளர்ப்புப் பிராணிகளை விரும்பி ஏற்கப் பண்ணின.

இப்போ சற்று முன்னர் பூனைக் குட்டியாரைத் திரத்தித் திரத்திப் படமெடுத்தேன். அப்போ ஜெர்மன் மொழியில் அவர் சிந்தித்ததை முடிந்தவரை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். பார்க்கிறீங்களா..?

wweeeeee

wweeeeee

Last modified: February 19, 2007

45 Responses to " செல்லக் கடிகளும் சின்னக் கீறல்களும்.. "

  1. யோகன் பாரிஸ்(Johan-Paris) says:

    சயந்தன்!
    இவர் நல்ல சாப்பாட்டு ராமர்(மி) போல கிடக்குது!
    படம் உங்கள் கற்பனை அருமை!!
    உண்மையில் பேசுமாயின் இப்படித்தான் கூறும்!

  2. யோகன் பாரிஸ்(Johan-Paris) says:

    சயந்தன்!
    இவர் நல்ல சாப்பாட்டு ராமர்(மி) போல கிடக்குது!
    படம் உங்கள் கற்பனை அருமை!!
    உண்மையில் பேசுமாயின் இப்படித்தான் கூறும்!

  3. அம்மாப் பூனை says:

    என்ர குஞ்சு.. நீ தமிழ் ஆக்களின்ர வீட்டுக்கு போகும் போதே நினைச்சனான். அவங்கள் உன்னை நிம்மதியா வாழ விடமாட்டாங்கள் எண்டு..
    நீ 18 வயசான உடனை வெளியாலை போ.. வேறையென்ன.. அவங்கடை உறைப்புச் சாப்பாட்டை சாப்பிட்டு விடாதை.. உடம்பை கவனமாகப் பார்..

  4. சிநேகிதி says:

    நல்லாத்தான் பூனைப்பாசை தெரிந்நு வைச்சிருக்கிறீங்கள்.படங்களும் நீங்கள் பூனையா இருந்திருந்தா என்ன நினைச்சிருப்பீங்கள் என்று நினைச்சு எழுதியவையும் நல்லா இருக்கு.பச்சைக்கண் பூனை சூப்பர்.
    மூன்றாவது படத்தில பூனையின் கழுத்துப்பகுதியில் வெள்ளையாத்தெரிவதென்ன?

  5. அம்மாப் பூனை says:

    என்ர குஞ்சு.. நீ தமிழ் ஆக்களின்ர வீட்டுக்கு போகும் போதே நினைச்சனான். அவங்கள் உன்னை நிம்மதியா வாழ விடமாட்டாங்கள் எண்டு..
    நீ 18 வயசான உடனை வெளியாலை போ.. வேறையென்ன.. அவங்கடை உறைப்புச் சாப்பாட்டை சாப்பிட்டு விடாதை.. உடம்பை கவனமாகப் பார்..

  6. சிநேகிதி says:

    நல்லாத்தான் பூனைப்பாசை தெரிந்நு வைச்சிருக்கிறீங்கள்.படங்களும் நீங்கள் பூனையா இருந்திருந்தா என்ன நினைச்சிருப்பீங்கள் என்று நினைச்சு எழுதியவையும் நல்லா இருக்கு.பச்சைக்கண் பூனை சூப்பர்.
    மூன்றாவது படத்தில பூனையின் கழுத்துப்பகுதியில் வெள்ளையாத்தெரிவதென்ன?

  7. சிநேகிதி says:

    \\வேறையென்ன.. அவங்கடை உறைப்புச் சாப்பாட்டை சாப்பிட்டு விடாதை.. உடம்பை கவனமாகப் பார்\\

    :-))

  8. சிநேகிதி says:

    \\வேறையென்ன.. அவங்கடை உறைப்புச் சாப்பாட்டை சாப்பிட்டு விடாதை.. உடம்பை கவனமாகப் பார்\\

    :-))

  9. பூனைப் பதிவாளர் says:

    //என்ர குஞ்சு.. நீ தமிழ் ஆக்களின்ர வீட்டுக்கு போகும் போதே நினைச்சனான்.//

    இதிலிருந்தே தெரிகிறது இது போலி அம்மா பூனையென்று..
    பூனை குஞ்சு அல்ல.
    அது குட்டி..

  10. பூனைப் பதிவாளர் says:

    //என்ர குஞ்சு.. நீ தமிழ் ஆக்களின்ர வீட்டுக்கு போகும் போதே நினைச்சனான்.//

    இதிலிருந்தே தெரிகிறது இது போலி அம்மா பூனையென்று..
    பூனை குஞ்சு அல்ல.
    அது குட்டி..

  11. 'மழை' ஷ்ரேயா(Shreya) says:

    :O))

    //பூனையின் கழுத்துப்பகுதியில் வெள்ளையாத்தெரிவதென்ன?//
    சயந்தன் பூனைக்கு tag போட்டிருப்பார்; அது தப்பியோடிப்போனாலும் திரும்பக் கண்டுபிடிச்சு ஆக்கினைப்படுத்திப் படமெடுக்க!! :O)

  12. துளசி கோபால் says:

    அட! நம்ம ஜிஞ்ஜூ……… ( ஜிஞ்சர் பூனையின் ச்செல்லப் பெயர்)

    அருமையா இருக்கார் சயந்தன் உங்கட ஆளு:-)))

    இந்தப் பசங்க லேசுப்பட்டதில்லை. கொஞ்ச நாளில் நம்மை அப்படியே வாலுலே சுருட்டிரும்:-))))

    சிநேகிதி,

    அந்த வெள்ளை அதோட காலர் ( கழுத்துப்பட்டி)

  13. Anonymous says:

    புனைக்கு கவலை!!! ஏனேண்டால் பூனையை ஒரு நாய் படம் பிடித்ததை பாத்து.. 🙂

  14. வி. ஜெ. சந்திரன் says:

    படங்கள் சரி.. ஆனா அந்த பூனை உதை விட கூடுதலை உம்மை திட்டி ருக்குமெண்டு நினைக்கிறன்.

  15. K.Subhash Chandiran says:

    மிகவும் நல்ல கற்பனை.
    ரசிக்கும் படி இருந்தது.
    வந்த மறுமொழிகள் சிலவும்
    உங்கள் பதிவை ஜனரஞ்சகமாகியது.
    பாராட்டுக்கள்.
    க.சுபாஷ் சந்திரன், கோவை.

  16. சயந்தன் says:

    அதென்னமோ தெரியல்ல..
    எனக்கு என்ர பதிவில மட்டும் அம்மா பூனை, அப்பா பூனை, பூனைப் பதிவாளர் எல்லாம் ஆஜராகிறாங்க..

    உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ..?

  17. பூனைகள் சங்க தலைவி says:

    இப்பிடி கொடுமைப் படுத்தினீங்கன்னா.. ப்ளூ க்ராஸ்சிடம் சொல்ல வேண்டியிருக்கும்..

  18. காதல் பூனை says:

    ராசாத்தி நீ அங்க தான் இருக்கிறியா..? உன்னைக் காணாமல் ரொம்பத் தவிச்சுப் போயிட்டன் செல்லம்.. நான் கூட இங்க ஒரு இடத்தில மாட்டிக்கிட்டேன். நம்ம வாழ்க்கை இப்பிடியாப் போச்சு.. ம்.. அடுத்த ஜன்மத்திலாவது மனிசராப் பொறந்து ஒண்ணாச் சேருவோம்.. உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே.. காலமெல்லாம் ஒன்னை நினைச்சு வாழும் – உன் குட்டி

  19. Anonymous says:

    நானும் ஏதோ ‘ஏ’ பதிவு போல எண்டு ஓடி வந்தால் இப்பிடி ஏமாற்றி விட்டீங்களே.

    பூனைக் கதையும் நல்லாத்தான் இருக்கு.

  20. Anonymous says:

    //பூனைக்கு கவலை!!! ஏனேண்டால் பூனையை ஒரு நாய் படம் பிடித்ததை பாத்து.. :)//

    நாய்க்கு விளையாட்டு. பூனைக்கு சீவன் போகுது;)

  21. சயந்தன் says:

    //நானும் ஏதோ ‘ஏ’ பதிவு போல எண்டு ஓடி வந்தால் இப்பிடி ஏமாற்றி விட்டீங்களே.//

    ஏ… மாந்திட்டீங்களா..?

    //ராசாத்தி நீ அங்க தான் இருக்கிறியா..? உன்னைக் காணாமல் ரொம்பத் தவிச்சுப் போயிட்டன் செல்லம்..//

    காதல் பூனை ரொம்ப பீல் பண்ண வைச்சிட்டீரப்பா.. ஆனாலும் நீர் ரொம்பப் பாவம்.. என்னிடம் உள்ளது ராசாத்தியில்ல .. 🙂 ராசா
    விதி இங்கையும் உம்மோடை இப்பிடி விளையாடுது.. 🙁

  22. கானா பிரபா says:

    ஆனைக்கொரு(சயந்தன்)காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

    கடைசி வாங்கிலிருந்து
    கானா.பிரபா

  23. ஆழியூரான் says:

    இந்த பதிவினால் கடுப்பாகி, யானைகளை படமெடுத்து கமெண்ட் போடுவதற்கு எங்கள் பொ.க.ச.வின் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை அன்னாரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

    ‘ஆனையக்கா’ பொ.க.ச.
    டி.கல்லுபட்டி கிளை,
    பதிவு எண்(87680/07),
    கொட்டாம்பட்டி,
    சிவங்கங்கை மாவட்டம்.

  24. Anonymous says:

    போட்டோஸ் காமெடின்னா.. வந்திருக்கிற பின்னூட்டங்கள் சூப்பர் காமெடிங்கோ..

  25. பூனைப்படை says:

    நீங்க ஏன் எங்க பூனைப்படையில வந்து ஜாயின் பண்ணக் கூடாது? துப்பாக்கியெல்லாம் தருவோம்

  26. ரவிசங்கர் says:

    இப்படி பூனை சங்கத்தில இருந்து ஆட்கள் கிளம்பி வருவாங்கன்னு நீங்க நினைக்கல தான 🙂 ஜெர்மன் பூனைகளுக்கும் 😉 கண் பச்சை தானா !

  27. Anonymous says:

    //என்னிடம் உள்ளது ராசாத்தியில்ல .. 🙂 ராசா//

    ஆதாரம் வேண்டும்.

  28. சயந்தன் says:

    அம்மாப் பூனை..பூனைப்பதிவர்.. பூனைகள் சங்கத் தலைவி..காதல் பூனை..பூனைப்படை வாங்கைய்யா வாங்க.. வந்து கும்மியடியுங்க..

    கானா பிரபா.. நீர் வரும் போதே கலவன் பள்ளிக் குடம் எண்டால்த்தான் வருவன் எண்டனீர்.. இப்ப நீராவே கடைசி வாங்குக்கு போயிட்டீர்.. அது யாரப்பா அங்கை கடைசி வாங்கில..

    ஆழியூரான் யானைகளை படுக்கவைத்தும் நிற்கவைத்தும் படமெடுக்கப் போறீங்களா.. அது சரி யானைகளை பிச்சையெடுக்கவே வைக்கும் போது..

    ரவி சங்கர்.. ஆட்கள் இல்ல யாரோ ஒரு ஆளு.. 😉

  29. தமிழ்நதி says:

    சயந்தன், எனக்குப் பிடிச்ச விஷயத்துக்கு இப்பதான் வந்திருக்கிறீங்கள். நாய்க்குட்டி, பூனைக்குட்டி, கோழிக்குஞ்சு(அது பஞ்சு மாதிரிப் படுத்திருக்கிற வடிவைப் பாத்துக்கொண்டே இருக்கலாம்)இவைகளின் தீவிர ரசிகை நான். எங்கடை வீட்டுப் பூனைக்குட்டி என்னோடை கதைக்கிறதெண்டால் நீங்கள் ஒருதரும் நம்பமாட்டியள்.

    அது சரி! பூனை கதைக்க ஏன் இவ்வளவு நேரம் எடுக்குது… பஞ்சி பிடிச்ச பூனையா இருக்கும்போலை. ஆள் இவ்வளவு குண்டா இருந்தா கொலஸ்ரோல் கட்டாயம் இருக்கும். பூனையைக் கூட்டிக்கொண்டு ஓடுறேல்லையா…? (இப்போதைக்கு)

  30. சிநேகிதி says:

    \\காதல் பூனை ரொம்ப பீல் பண்ண வைச்சிட்டீரப்பா.. ஆனாலும் நீர் ரொம்பப் பாவம்.. என்னிடம் உள்ளது ராசாத்தியில்ல .. 🙂 ராசா
    விதி இங்கையும் உம்மோடை இப்பிடி விளையாடுது.. :\\

    :-)))
    Poonai pattalam mulluka ingathan nikuthu pola.

    \\கடைசி வாங்கிலிருந்து
    கானா.பிரபா
    \\ ean angellam porenganna 🙂

    Nanri thulasi periyama!

  31. பொன்ஸ் says:

    :)))))))))))))))))))))))))

    “என்னாச்சு என்னாச்சு”ன்னு எங்க வீட்லேர்ந்து எல்லாரும் ஓடி வந்து பார்க்குமளவுக்கு கண்ணில் நீர் வரச் சிரித்துக் கொண்டிருந்தேன்.. உங்க பூனையையும், அதன் குடும்பத்தினரும் [இடையிடையே நீரும் :))] பேசியதைக் கேட்டு :)))

  32. Anonymous says:

    //ராசா
    விதி இங்கையும் உம்மோடை இப்பிடி விளையாடுது.. 🙁 //
    அப்ப அது வசந்தனோ O))

  33. மாமி பூனை says:

    மருமோனே நீயெண்ட மோளுக்குத்தான். வேர யாரையும் சைட் அடிச்சாயெண்டால் உடம்பிலை சூடு வைப்பனடா

  34. சயந்தன் says:

    தமிழ்நதி பக்கம் தரவிறக்க நேரம் எடுத்ததா..? ஒரு ஏழெட்டு மாதத்திற்கு முன்பென்றால் பூனையோடு ..(மட்டுமென்ன..?) ஓடியிருக்கலாம்..

    பொன்ஸ் என் தயவில் பூனைக் குடும்பமே புளொக்கரில தான் நிக்குது. இன்னும் தாத்தா பாட்டியைக் காணேல்லை.

    //அப்ப அது வசந்தனோ O))//

    யாரப்பா இங்கை வசந்தனை இழுக்கிறது..

    //மருமோனே நீயெண்ட மோளுக்குத்தான். வேர யாரையும் சைட் அடிச்சாயெண்டால் உடம்பிலை சூடு வைப்பனடா//

    மாமிப் பூனை இது பூனைக்குத் தானே..

  35. theevu says:

    //என்பதை அன்னாரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.//

    எண்டாலும் பூனை படம் போட்டதற்காக ஆழியூரான் உங்களை அன்னார் என்று சொல்லியிருக்ககூடாது.:)

  36. தாத்தாப் பூனை says:

    //பொன்ஸ் என் தயவில் பூனைக் குடும்பமே புளொக்கரில தான் நிக்குது. இன்னும் தாத்தா பாட்டியைக் காணேல்லை. //

    மோனை.. என்னையும் மறக்காமல் ஞாபகம் வைச்சிருக்கிறாய். நன்றியப்பு.. பேரனை கவனமாகப் பார்.. பாட்டிப் பூனை தவறிட்டா.. கடவுள் எப்ப என்னை பாட்டிட்டை கூட்டிக்கொண்டு போறாரோ தெரியேல்லை.. ஏதோ ஆண்டவன் விட்ட வழி..

  37. Anonymous says:

    4 பூனைப் படத்தைப் போட்டு 40 பின்னூட்டம் வாங்கிட்டீர். ம்.. நாங்களும் மாய்ந்து மாய்ந்து எழுதுறம். சீண்டுவார் இல்லை. பிளந்து கட்டும்.

  38. Anonymous says:

    //4 பூனைப் படத்தைப் போட்டு 40 பின்னூட்டம் வாங்கிட்டீர். ம்.. நாங்களும் மாய்ந்து மாய்ந்து எழுதுறம். சீண்டுவார் இல்லை. பிளந்து கட்டும//

    வேண்டுமென்றால் ஒரு சிங்கத்தை இப்பிடி படுக்கவைச்சு நீங்க முயற்சித்து பார்க்கலாமே

  39. Kanthan says:

    ஆகா.. என்னோட பார்வையில இது நாள் வரை படலையே இது.. சூப்பர்.. தலைப்புக் கூட ரொம்ப ரொமான்டிக்..

  40. Anonymous says:

    நல்ல கற்பனையப்பா எப்பிடியிதெல்லாம்..

  41. சயந்தன் says:

    //நல்ல கற்பனையப்பா எப்பிடியிதெல்லாம்..//

    அப்பிடித் தானப்பா.. அதுவா வரும்.

  42. துர்கா says:

    உங்களுக்கு பூனை பாஷை எல்லாம் தெரியும் என்று எங்களுக்குத் தெரியமால் போய் விட்டது சயந்தன் 😉

  43. Anonymous says:

    hahahaha very funny… nice idea

  44. Haran says:

    எனக்கெண்டால் சயந்தன் பூனை பேசினதில முக்கால்வாசிக்கு மேல சென்சார் பண்ணிப் போட்டார் போல கிடக்கு

  45. Anonymous says:

    🙂

× Close