விடுதலைப் புலிகளைப் பற்றி வீராச்சாமி

ஈழவிடுதலை பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் அசாதாரண ஒரு நிலையில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் எந்த ஒரு பேச்சையும் நான் இதுவரை கேட்டதில்லை. ஈழத்தில் தமிழ் அரசியல் வாதிகள் செல்வாக்கு செலுத்தாத காலத்தில் பிறந்தவன் என்பதாலேயோ வளர்ந்தவன் என்பதானாலேயோ இவ்வாறான உரைகளைக் கேட்டதில்லை. சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆங்காங்கே பரப்புரைகளை நடாத்திய போதும் தமிழக தலைவர்களினது உணர்ச்சி மிகு உரைகளைப் போல அவை இருந்ததில்லை.

புலிகள் கூட தமது நிகழ்வுகளில் அவ்வாறு பேசியதில்லை. அதனால்த் தானோ என்னவோ ஆணி வேர் திரைப்படத்தில் நந்தா மேடையில் ஏறி நாம் பூனைகள் அல்ல புலிகள் என்று உறுமிய போது எனக்கு இந்திய தமிழ்ச் சினிமா பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் முதல்த் தடவையாக விடுதலைப் புலிகள் பற்றியும் ஈழத்தமிழர்கள் பற்றியும் ஒரு தமிழக அரசியல் பிரமுகர் அத்தனை ஆக்ரோசமாகப் பேசியதைக் கேட்டேன். அவர் யாருமல்ல. வீராசாமியெனும் காவியம் அளித்த விஜய ரி ராஜேந்தர் தான் அவர். கேட்கிறீங்களா..?



18 Comments

  1. அப்ப தமிழர் புலம் பெயர் நாடுகளில் வீராசாமி பிச்சுக்கிட்டு ஓடும் எண்டுறீங்கள்.

  2. அப்ப தமிழர் புலம் பெயர் நாடுகளில் வீராசாமி பிச்சுக்கிட்டு ஓடும் எண்டுறீங்கள்.

  3. வாழ்க வீராச்சாமி.
    தொடுப்பு முழுமையாக இல்லை சயந்தன் ..எங்கே சுட்டீர்கள்?

  4. வாழ்க வீராச்சாமி.
    தொடுப்பு முழுமையாக இல்லை சயந்தன் ..எங்கே சுட்டீர்கள்?

  5. சயந்தன்!
    இப்படி இவர் எதையுமே!உணர்ச்சியாகப் பேசுவார். நாளைக்கு மாற்றிப் பேசி அதற்கு காரணமும் கற்பிப்பதில்
    இவரிடம் எல்லோரும் பாடம் படிக்கலாம்.

  6. சயந்தன்!
    இப்படி இவர் எதையுமே!உணர்ச்சியாகப் பேசுவார். நாளைக்கு மாற்றிப் பேசி அதற்கு காரணமும் கற்பிப்பதில்
    இவரிடம் எல்லோரும் பாடம் படிக்கலாம்.

  7. அவன்தான்யா புலி
    எடுப்பான்யா பலி
    சிங்களம் கொள்ளும் கிலி
    அது தான் நம்ம வழி

  8. அவன்தான்யா புலி
    எடுப்பான்யா பலி
    சிங்களம் கொள்ளும் கிலி
    அது தான் நம்ம வழி

  9. பூனையைப் படம் பிடிச்சுப் போட்டால் அடிபிடிப்பட்டுச் சனம் வருகிறது. kingkong கதைச்சதை எடுத்துப் போட்டால் ஒரு சனமும் இல்லை. கரடியெண்டால் சனத்திற்கு சரியான பயம் எண்டு விளங்குதோ..?

  10. பூனையைப் படம் பிடிச்சுப் போட்டால் அடிபிடிப்பட்டுச் சனம் வருகிறது. kingkong கதைச்சதை எடுத்துப் போட்டால் ஒரு சனமும் இல்லை. கரடியெண்டால் சனத்திற்கு சரியான பயம் எண்டு விளங்குதோ..?

  11. தீவு இது குமுதத்திலிருந்து சுட்டது தான்.

  12. தீவு இது குமுதத்திலிருந்து சுட்டது தான்.

  13. இது வெளிநாடுகளில் வீராச்சாமியை
    நன்றாக ஓட்டி லாபம் பார்க்கும் யுக்தியாக இருக்கலாம் அல்லவா?
    இவரே பல காலம் அ.தி.மு.க வில் இருந்தவர் என்று நினைக்கிறேன்…
    அப்பிடியெண்டா தெரியும்தானே?
    இவ்வளவு நாளும் ஒண்டும் பேசாதவருக்கு இப்பமட்டும் எங்கயிருந்து வந்தது ஞானம்?

  14. இது வெளிநாடுகளில் வீராச்சாமியை
    நன்றாக ஓட்டி லாபம் பார்க்கும் யுக்தியாக இருக்கலாம் அல்லவா?
    இவரே பல காலம் அ.தி.மு.க வில் இருந்தவர் என்று நினைக்கிறேன்…
    அப்பிடியெண்டா தெரியும்தானே?
    இவ்வளவு நாளும் ஒண்டும் பேசாதவருக்கு இப்பமட்டும் எங்கயிருந்து வந்தது ஞானம்?

  15. அப்பா வீட்ல தான் சும்மா கத்துறார்னா இங்குமா..?

  16. அப்பா வீட்ல தான் சும்மா கத்துறார்னா இங்குமா..?

Comments are closed.