இப்போ வந்த பின்னூட்டங்கள் இவை..

இந்த வலைப்பதிவின் பக்கத்தில், இப்போ கருத்து இட்டவர்கள் என்னும் ஒரு பகுதி இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதில் எனது வலைப்பதிவுக்கு கடைசியாகப் பின்னூட்டம் இட்டவர்களினுடைய பெயர்களும், பின்னூட்டங்களில் இருந்து சில வரிகளும் உள்ளடக்கப் பட்டிருக்கும்.பின்னூட்டங்களினூடு, பதிவொன்றின் தொடர்ச்சித் தன்மையைப் பேண, இது பெருமளவு வழி வகுக்கிறது. இதனை நிறுவுதல் தொடர்பான சில குறிப்புக்களை இப்போது பார்ப்போம்.

உங்களது கிளாசிக் வார்ப்புருவில் இணைக்க வேண்டிய முதலாவது நிரலினை இவ்விணைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். txt கோப்பாக கிடைக்கும் இந் நிரல் துண்டைப் படியெடுத்து, அவதானமாக உங்களது வார்ப்புருவின் <head> பகுதிக்குள் செலுத்துங்கள். குறிப்பாக </head>என்னும் பகுதிக்கு மேலாக செருகுதல் உங்களுக்கு இலகுவானதாக இருக்கும்.

இனி உங்கள் வலைப்பதிவில் இறுதியாக இடப்பட்ட பின்னூட்டங்கள், காட்சிப்படுத்தப்பட வேண்டிய இடத்தைத் தீர்மானியுங்கள். பொதுவாக side bar எனப்படும் பகுதியில் இடுவதே பொருத்தமாயிருக்கும். உங்களது வார்ப்புருவில் அதற்கான பகுதியைத் தெரிந்து கொண்டு இவ்விணைப்பில் உள்ள நிரல்த் துண்டினை இணைத்து விடுங்கள்.

இங்கு yourName என்னும் இடத்தில் உங்கள் வலைப்பதிவுப் பெயர் உள்ளிடப்பட வேண்டும் என்பதை, நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்மென்பதில்லை. அது போலவே numcomments என்னும் variable, காட்டப்பட வேண்டிய பின்னூட்டங்களின் எண்ணிக்கையையும், numchars என்பது ஒவ்வொரு பின்னூட்டத்திலும் காட்டப்படவேண்டிய எழுத்துக்களின் எண்ணிக்கையையும் தீர்மானிக்கின்றன. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல தெரிவு செய்ய முடியுமாயினும் 10 பின்னூட்டங்களும் 100 சொற்களுமே போதுமானவை.

இனி layout வார்ப்புருவில் இறுதிப் பின்னூட்டங்கள் தொடர்பாகப் பேசுவோம். அதில் இவ்வாறான சுத்துமாத்து வேலைகள் தேவையில்லாத வகையில், புளொக்கர் நேரடியான சேவையை வழங்குகிறது.

உங்களுடைய Template பகுதியில் Page Elements பிரிவினைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இனி இறுதிப் பின்னூட்டங்களை காட்சிப்படுத்துவதற்கேதுவாக Add a Page Element இனை அழுத்தி தோன்றும் புதிய window இல் Feed என்னும் பகுதியில் ADD TO BLOG இனை அழுத்துங்கள்.

இப்போது பின்னூட்டங்களுக்கான Feed url இனை நீங்கள் அதில் கொடுக்க வேண்டியிருக்கும். கீழுள்ள இறுதிப் பின்னூட்டங்களுக்கான Feed url இனை அங்கு இட்டு, Continue இனை அழுத்துங்கள்.

http://yourName.blogspot.com/feeds/comments/default?start-index=2

yourName பகுதியில் வலைப்பதிவின் பெயரெழுத மறக்க வேண்டாம்.

இப்போது திரட்டப்படும் பின்னூட்டங்கள் அங்கு காட்சிப்படுத்தப்படும். அதில் தரப்பட்டுள்ள தெரிவுகளுக்கேற்ப சில மாறுதல்களை, அதாவது பின்னூட்டத்தினை இட்டவரின் பெயர் மற்றும் திகதி என்பவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம். Title பெயர் கொடுக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு.

முடித்தாயிற்றா..? இனியென்ன உங்கள் வலைப்பதிவில் இறுதிப் பின்னூட்டங்கள் இப்போது தயார்.

குறிப்பு: இதனை வெற்றிகரமாக நீங்கள் நிறுவினால் உங்களால் ஒரு விடயத்தை அவதானிக்க முடியும். அதாவது கடைசிப் பின்னூட்டத்திற்கு முந்தைய பின்னூட்டம் வரையான பின்னூட்டங்கள் திரட்டப்படுவதே அது. உண்மையில் இறுதி வரையான பின்னூட்டங்களைத் திரட்டுவதற்குரிய Feed

http://yourName.blogspot.com/feeds/comments/default

என்பதே. ஆனால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர், சடுதியாக இது ஒரு வருடத்திற்கு முந்தைய பின்னூட்டங்களைத் திரட்டத் தொடங்கியது. அதனால் சில மாறுதல்களைச் செய்து இறுதிக்கு முந்தைய பின்னூட்டம் வரை திரட்ட வழி செய்யப்பட்டிருக்கிறது.

20 Comments

  1. Layout முறையில் இலகுவாய் இருக்கும் போலுள்ளதே..

  2. Layout முறையில் இலகுவாய் இருக்கும் போலுள்ளதே..

  3. பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்ற பதிவுகளை காட்சிப்படுத்துவது வரையறை செய்யப் பட்டுள்ளமையால் தமக்கு வரும் 30க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான (அந்த மாதிரி எல்லாம் வருதா) பின்னூட்டங்களை தொடர்ந்தும் நமது ரசிக நெஞ்சங்களுக்கு எப்படிக் காட்சிப் படுத்துவதென துடிக்கும் உள்ளங்கள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தமது பின்னூட்டங்களைத் தமது பதிவில் தாமே திரட்டலாம்.

    நீங்கள் எழுதிய அண்மைய பதிவொன்றினூடாக உள்ளே வருபவர்கள் இங்கு திரட்டப்படும் பின்னூட்டங்களை நோட்டம் விட்டு, அடடா நமது முன்னைய பின்னூட்டத்திற்கு எவனோ எதிர்ப்புச் சொல்லியிருக்கிறானே என்பதறிந்து, கார சார ஆரோக்கியப் பின்னூட்டங்கள் இடுவார்கள். சூப்பர்.. அந்த மாதிரி.. இன்னும் படிக்கலை படிச்சிட்டு சொல்லுறன்.. நன்றி.. போன்ற பின்னூட்டங்களையும் தாராளமாக இடுவார்கள். எனவே இந்த நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்க்கும் படி பரிந்துரைக்கிறேன்.

    நம்ம பதிவை நாமே பரிந்துரைக்கும் தலைவிதியை எண்ணி நோவதுடன் இது வெறும் 6வது பின்னூட்டமே என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்;)

  4. பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்ற பதிவுகளை காட்சிப்படுத்துவது வரையறை செய்யப் பட்டுள்ளமையால் தமக்கு வரும் 30க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான (அந்த மாதிரி எல்லாம் வருதா) பின்னூட்டங்களை தொடர்ந்தும் நமது ரசிக நெஞ்சங்களுக்கு எப்படிக் காட்சிப் படுத்துவதென துடிக்கும் உள்ளங்கள் இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தமது பின்னூட்டங்களைத் தமது பதிவில் தாமே திரட்டலாம்.

    நீங்கள் எழுதிய அண்மைய பதிவொன்றினூடாக உள்ளே வருபவர்கள் இங்கு திரட்டப்படும் பின்னூட்டங்களை நோட்டம் விட்டு, அடடா நமது முன்னைய பின்னூட்டத்திற்கு எவனோ எதிர்ப்புச் சொல்லியிருக்கிறானே என்பதறிந்து, கார சார ஆரோக்கியப் பின்னூட்டங்கள் இடுவார்கள். சூப்பர்.. அந்த மாதிரி.. இன்னும் படிக்கலை படிச்சிட்டு சொல்லுறன்.. நன்றி.. போன்ற பின்னூட்டங்களையும் தாராளமாக இடுவார்கள். எனவே இந்த நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்க்கும் படி பரிந்துரைக்கிறேன்.

    நம்ம பதிவை நாமே பரிந்துரைக்கும் தலைவிதியை எண்ணி நோவதுடன் இது வெறும் 6வது பின்னூட்டமே என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்;)

  5. சயந்தன், timely ஆக உங்க பதிவ நீங்களே ஏத்தி விடும் பின்னூட்டக் கயமையை கண்டிக்கிறேன் 😉

    புது பிளாக்கர் வார்ப்புரு, wordpress ஆகியவற்றில் இதை எப்படி செய்வது என்று சொல்லித் தர இயலுமா?

  6. சயந்தன், timely ஆக உங்க பதிவ நீங்களே ஏத்தி விடும் பின்னூட்டக் கயமையை கண்டிக்கிறேன் 😉

    புது பிளாக்கர் வார்ப்புரு, wordpress ஆகியவற்றில் இதை எப்படி செய்வது என்று சொல்லித் தர இயலுமா?

  7. அட சாமி, உங்க வகுப்பு எல்லாமே பழைய வார்ப்புரு ஆட்களுக்குன்னு நினைச்சு முதல் இரண்டு பத்திக்கு அப்புறம் படிக்கல 🙁 இப்ப உங்க மறுமொழிக்கு அப்புறம் தான் புது பிளாக்கருக்கும் நீங்க சொல்லி இருக்கிறத பார்த்தேன் 🙁

  8. அட சாமி, உங்க வகுப்பு எல்லாமே பழைய வார்ப்புரு ஆட்களுக்குன்னு நினைச்சு முதல் இரண்டு பத்திக்கு அப்புறம் படிக்கல 🙁 இப்ப உங்க மறுமொழிக்கு அப்புறம் தான் புது பிளாக்கருக்கும் நீங்க சொல்லி இருக்கிறத பார்த்தேன் 🙁

  9. //உங்களுடைய Template பகுதியில் Page Elements பிரிவினைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இனி இறுதிப் பின்னூட்டங்களை காட்சிப்படுத்துவதற்கேதுவாக Add a Page Element இனை அழுத்தி தோன்றும் புதிய window இல் Feed என்னும் பகுதியில் ADD TO BLOG இனை அழுத்துங்கள்.//

    இது எங்க இருக்கு?
    Template பகுதிலை அப்பிடி ஒண்டையும் காணமே 🙁

  10. //உங்களுடைய Template பகுதியில் Page Elements பிரிவினைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இனி இறுதிப் பின்னூட்டங்களை காட்சிப்படுத்துவதற்கேதுவாக Add a Page Element இனை அழுத்தி தோன்றும் புதிய window இல் Feed என்னும் பகுதியில் ADD TO BLOG இனை அழுத்துங்கள்.//

    இது எங்க இருக்கு?
    Template பகுதிலை அப்பிடி ஒண்டையும் காணமே 🙁

Comments are closed.