தீபன் சிவபாலன்

01 இலக்கியம் குறித்த நினைவு எழும்போதெல்லாம் குலசேகர ஆழ்வார் பக்தி இலக்கியப் பாடல் ஒன்றும் சேர்ந்தே நினைவுக்கு வரும் – வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் என்கிற வரிகள் அது.  கடந்தகாலத்தின் கொடு நினைவுகளும் நிகழ்காலத்தின் மீது படருகின்ற அன்றாடம் குறித்த அச்சங்களும்…

எஸ்.வாசன்

“பொதுசன நூலகங்களில் இருக்கின்ற கனமான புத்தகங்கள் எனக்கு வாழ்வின் பல மோசமான உண்மைகளை கற்று தந்திருக்கின்றன” – இது நாம் அதிகம் அறிந்திராத தனது இளவயதில் மரணித்த ஈழத்து எழுத்தாளர் முனியப்பதாசன் ஒரு தடவை கூறிய வாசகம். இதனை வாசித்ததிலிருந்து கனமான தடித்த புத்தகங்களை காணும்போதெல்லாம் இந்த வாசகம்…

ஜே கே

ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம். 24 – 04 – 2009 முள்ளிவாய்க்கால் சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். “நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுறேல்லை…” அத்தார் சந்திராவைக் கட்டிக்கொண்டு வெடித்து அழத்தொடங்கினான். “அண்ணை வெளிக்கிடுங்கோ…” வெள்ளையன் கையை ஆறுதலாகப் பற்றினான். “என்னை விடு….

இரவி அருணாச்சலம்

இப்போது இதனைக் குறித்துக் கொள்ள வேண்டும், ஒருபேப்பர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்த சயந்தன் அவர்கள் `ஆதிரை’ என்ற புனைவுப் பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளார். அது குறித்த பத்தி எழுத்தே இது. சயந்தனுக்கு இது முதலாவது நெடுங்கதையல்ல, ஏலவே, `ஆறாவடு’ என அறியப்பட்டவர். `ஆறாவடு’ புதினத்தை வாசிப்பதற்கு முன்னர்…

நேர்காணல் – அம்ருதா மாத இதழ்

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழும் சயந்தன் தமிழில் எழுதும் முக்கிய படைப்பாளி. “ஆறாவடு“ நாவலின் மூலமாக தமிழ்ப்பரப்பில் கூடுதல் கவனத்தைப் பெற்றவர். “பெயரற்றது“ இவருடைய சிறுகதைகளின் தொகுதி. இப்பொழுது வந்திருப்பது “ஆதிரை“. வந்த சில வாரங்களிலேயே அதிகமான உரையாடல்களை “ஆதிரை“ உண்டாக்கியுள்ளது. ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் என்ற தளத்தில்…