கோணங்கி

சயந்தனின் ஆறாவடு நாவலுக்கு இதழில் வந்த மணிமாறனின் வாச்சியத்திற்குப் பின் இப்போது வந்திருக்கும் ஆதிரை நாவல் அளவில் பெரியதாயினும் தன் தீவு நிலத்தின் அகப்பரப்பில் மலையக சாயல்களோடு பெயர்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் கதை தான் நாவலாகி இருக்கிறது. ஆறாவடு நாவலோ அளவில் சிறியதாயினும் கால் இழந்த போராளியின் செயற்கைக்…

மங்கை செல்வம்

அழுகை, அச்சம், கையாலாகாத கோபம், ஒரு விதமான சுயவெறுப்பு எல்லாமுமாக ஆதிரையை முடித்தேன். எல்லாருக்கும் நியாயம் இருப்பது போல் ஆனால் எதற்குமே அர்த்தம் இல்லாதது போலும்… நண்பரொருவர் சொல்லியது போல் வன்னியின் எளிய மக்கள்படும் துன்பத்தை விட அவர்கள் எல்லோராலும் நடத்தப்படும் அவலம். Racial purity ethnic supremacy…

ஹரி ராசலெட்சுமி

மறுமை அரங்கு 1/வரலாற்றின் தேவதூதாய் இலக்கிய எழுத்து போர் முடிந்தது, சந்தை திறந்தது சரிதான் என்று நகர்ந்து விட முடியாத நிலை எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்றுதான். வரலாறு முடிந்து போய் விட்டதென்ற உள்-உணர்வினாலும், உத்தரவாதமற்ற சுதந்திரத்தாலும் ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று அன்றாடம் புதிய நியதியாகியிருக்கிறது. தட்டையாக்கும், ஒன்றாக்கும் வெற்று…

புருஜோத்தமன் தங்கமயில்

தமிழ் மக்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இறுதி 15 வருடங்களை ஒட்டுமொத்தமாக தாங்கி நின்றது வன்னிப் பெருநிலம். காடுகளும், களணிகளும், கடலும் சார்ந்த வன்னிப் பெருநிலம், தன்னுள் தன் பூர்வீகக் குடிகளை மாத்திரமின்றி மலையகத்திலிருந்தும், கிழக்கிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் வந்த பெருமளவு மக்களையும் ஒரு தாயின் உள்ளன்போடு உள்வாங்கிக் கொண்ட…

டிசே தமிழன்

‘ஆதிரை’ நாவலை வாசிக்கத் தொடங்கியபோது, எல்லாவற்றையும் விட சயந்தனின் உழைப்பே வியக்கவைத்தது. இவ்வளவு பெரிய நாவலை எழுதுவது எவ்வளவு மிகப்பெரும் விடயமென்பது எழுதுபவராகவும், புலம்பெயர்ந்து இருப்பவராகவும் இருக்கும் ஒருவரால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியும். புலம்பெயர்வை ஏன் இங்கு விசேடமாய்க் குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ் அவ்வளவு புழங்காத சூழலில் இருந்துகொண்டு, எழுதுவதின்…