திசை ஒன்பது வாசிப்பு / நா.கதிர்வேலன் – விகடன்

ஈழத்திலிருந்து தமிழர்கள் உலகத்தின் எல்லா திசைகளுக்கும் ஓடத் தொடங்கி 40 ஆண்டுகளாகிறது. அலைந்து அலைந்து காடுகள், கடும் குளிரான பனிநிலங்கள், உறைந்த நதிகளையெல்லாம் கடந்துபோன வரலாறுகள் அவர்களுக்கு உண்டு. எங்கே போகிறோம், எப்படிப் போகிறோம் என்றே தெரியாத பயணங்கள்கூட இருக்கின்றன. அப்படியொரு பின்னணியில் எழுந்ததே சயந்தனின் இந்த ‘திசை… தொடர்க

திசை ஒன்பது வாசிப்பு / ஏக்நாத் – தி இந்து

அகதிகளின் எல்லை வலி போருக்கு பின்னான ஈழ படைப்புகளில், யுத்தத்தின் தாக்கத்தையும் அது கொடுத்த வலிகளையும் பார்த்திருக்கிறோம். அ.முத்துலிங்கத்தின் ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவலைப் போல இன்னும் சில, போலி கடவு சீட்டு மூலம் புலம்பெயர் தமிழர்கள், நாடுகளின் எல்லைகளில் எதிர்கொள்ளும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளையும் அலைகழிப்புகளையும்… தொடர்க

திசை ஒன்பது வாசிப்பு / ரவீந்திரன்.ப

சயந்தனின் “திசை ஒன்பது” நாவல் கவனத்தை சிதறவிடாதபடி வாசித்துத் தீர்க்க வேண்டியிருந்த நாவலாக எனக்கு இருந்தது. ஒரு செறிவான ‘நேர்கோட்டின்மை’ (non-linear) கதைசொல்லல்தான் அதற்குக் காரணம். வாசிப்பை குழப்பத்தில் நிறுத்தி, வாசகர் புத்தகத்தை மூடிவைத்துவிடாதபடி, அந்தக் கதைசொல்லல் முறையை கட்டியமைப்பதில் எழுத்தாளர் அதிக சிரத்தை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. அதில்… தொடர்க

திசை ஒன்பது வாசிப்பு / கபிலன் சிவபாதம்

ஒரு வெள்ளி இரவு வந்த புத்தகத்தை சனி இரவே படித்துவிட்டேன். எப்பொழுதாவது இப்படி அதிசயமாக நடப்பதுண்டு. முகநூல் காலத்திற்கு முந்தைய கற்காலத்திலிருந்தே சயந்தன் அவுஸ்திரேலியாவில் வசித்த பொழுதே அவருடன் ஒரு கருத்துக்களத்தில் சண்டைபிடித்துக்கொண்டிருந்தேன். அவரை பேசியதாகவும் பின்னொருநாளில் சொல்லியிருந்தார். எனக்கு அது நினைவில் இல்லை. என்ன அதிகப்படியாக சிங்களக்கைக்கூலி… தொடர்க