ஆதிரை! ஒரு பெருங் கிழவியின் வாய்ச் சொல்லைப்போல அனுபவம்
சயந்தன் எழுதிய ஆதிரை நாவலை முன்வைத்து “வரலாறு அது யாருடைய வாய்க்குள்ளிருந்து வருகிறதோ அவர்களுடைய விருப்பமானதையும், வேண்டியதையும் மட்டும் சொல்லும்” என்பதற்கு மாறாக ஒரு இனம் நிலமற்று,நிம்மதியற்று, உயிர் பதைக்க இன்னொரு இனத்தால் துரத்தப்பட்ட,சிதைக்கப்பட்ட ஈழத்து தமிழர்களின் வலியின் வரலாற்றை மக்கள் பார்வையில் ஆதிரை நாவல் பதிவு செய்கிறது….