சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் – சு.வேணுகோபால்

1977 முதல் 2011 வரையிலான ஈழப்போர்ச் சூழலில் தமிழ்க் குடும்பங்கள் எப்படியெல்லாம் சீரழிந்தது என்பதை ‘ஆதிரை’ நாவல் விவரிக்கின்றது. டெலோ, ஈபி.ஆர்.எல்.எப், எல்.டி.டி போன்ற தமிழ் ஈழவிடுதலை இயக்கங்களுக்குள் நிகழ்ந்த அரசியல் நிலைப்பாடுகள், அழித்தொழிப்புகளின் பக்கம் என நாவல் பயணிக்கவில்லை. மாறாக, சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமான நீண்டகாலப்…

ஆதிரை வாசிப்பு / கார்த்திக் பிரகாசம்

ஈழத்து இலக்கியங்களின் மீது பெரும் ஆர்வமும், தீராத நேசமும் எப்பொழுதும் எனக்கு உண்டு. உலகின் வேறெந்த இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் அதன் மேன்மையுறு சாரத்திற்குச் சற்றும் சளைக்காத ஓர் உள்ளொளியை ஈழ இலக்கியங்களிலும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். வாசிப்புக்குள் நுழைந்த மிகக் குறுகிய காலகட்டத்திலேயே ஈழ இலக்கியங்கள்…

ஆதிரை : முன்நின்று கல்நின்றவள் – கமலக்கண்ணன்

களத்தில் ஆயுதமேந்திப் போராடும் வீரர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வின் நிலையின்மையுடன் போராடும் குடியானவர்களும் போரின் வலியை ஏந்திச் சுமப்பதில் முதன்மையானவர்களே. பத்துக்கும் குறைந்த வயதுடைய முகையவிழாக் குழந்தைகள், பேதலிப்பின் விளிம்பில் நின்றபடி முன்னகரும் தாய்மார்கள், நரைகூடிக் கிழப்பருவம் எய்தியபின்னும் பிஞ்சுகளின் மரணத்தைக் கண்டு வேதனையுறும் முதுமகன்கள் என நூலெங்கும்…

புத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்

05 ஜூன் 1991 கரியிருட்டு. தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை  வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டுநரம்பை நசித்துக்கொண்டிருந்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க, முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். குண்டும்…

ஆதிரை ஒரு பெரும்படைப்பு

இரண்டு வாரங்களில் 4 புத்தகங்களை வாசிக்க முடிந்தது. நண்பர் பத்திநாதனின் கையிலிருந்த சயந்தன் எழுதிய ‘ஆதிரையை’ வாங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். 640 பக்கங்கள் என்பதால் எடுக்கமுடியாமலே இருந்தது. பழைய வேகம் இல்லையென்றாலும் 4நாட்களில் வாசிக்க முடிந்தது. ஈழத் தமிழரிடமிருந்து வரும் படைப்புகளைப் பெரும்பாலும் வாசித்து வருபவன் என்றவகையில்…