இவர் யாருங்கோ..?

அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்தபோது எடுத்த படங்களின் தொகுப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் சிக்கியது இந்தப் படம்! யாழ்ப்பாணம் கோட்டையை அண்மித்தாக -பழைய சுப்ரமணிய பூங்காவிற்கு முன்பாக – இந்த சிலை இருக்கின்றது. யாரென்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா..?

பாருங்கள்.. யுத்தத்தின் வடுக்களை தன்னால் முடிந்தளவு தாங்கி வைத்திருக்கின்றார்.


Image hosted by Photobucket.com

By

Read More

கடவுள் ஒருவன் தான்!

ஹி ஹி.. இது ஒண்ணும் மதப் பதிவு இல்லைங்க!

இண்டைக்கு பின்னேரம் போல வகுப்பாலை ரெயினிலை வந்து கொண்டிருந்தன். அடுத்ததோ அதுக்கடுத்ததோ ஒரு ஸ்ரேசனில ஒரு வயசான வெள்ளைக்கார அம்மா வந்து எனக்கு பக்கத்தில இருந்தா. நான் ஒரு பண்பாட்டுக்கு சிரிச்சு வணக்கம் சொல்லிப்போட்டு பக்கத்தில கிடந்த ஓசிப்பேப்பரை எடுத்து படங்கள் பாக்க தொடங்கினன். முக்கியமா எந்தக் கடையிலாவது எந்தச் சாமானாவது மலிவாப் போட்டிருக்கோ எண்டு பாக்கிறது தான் என்ரை வேலை.

பக்கத்தில இரந்த மனிசி ஒரு சின்ன சாப்பாட்டுப் பெட்டியை திறந்து பாத்திட்டு oh.. i dont like it எண்டிச்சு.. நானும் விடுப்பு பாக்கிற அவதியில பேப்பருக்குள்ளாலை தலை எடுத்து என்ன ஏதெண்டு பாத்தன். மனிசி இதுதான் சாட்டெண்டு கதைக்க தொடங்கிட்டுது.

எனக்கு முன்னாலை பின்னாலை பக்கத்திலை எல்லாம் வலு இளம் பெடி பெட்டயள் சிரிச்சு கும்மாளம் அடிச்சு கதைச்சுக் கொண்டு வர, என்ரை விதியை நொந்து கொண்டு நான் இந்த வெள்ளைக்கார ஆச்சி சொல்லுறதை கேக்க தொடங்கினன்.

அவ ஆருக்கோ கேக் செய்து அந்த சின்னப் பெட்டியில குடுத்தவவாம். அதுக்கு அந்தப் பெட்டியை தரேக்கை அவை கொஞ்ச ரொபியளை வைச்சு தந்திருக்கினமாம். தனக்கு உந்தப் பழக்கம் பிடிக்கேல்லை எண்டு அவ சொன்னா.

எனக்கும் உப்பிடியொரு பழக்கம் கொழும்பில புழக்கத்தில இருந்தது தெரியும்.

அதிலை ஒரு ரொபியை எடுத்து எனக்கு தந்தா. ரெயினுக்குள்ளை பழக்கமில்லாதவை ஆர் என்ன தந்தாலும் வாங்க கூடாது எண்டு சொல்லுறவை. எண்டாலும் அவவைப் பாத்தால் என்னை மயங்க வைச்சு களவெடுக்கிற ஆள் மாதிரியோ இல்லாட்டி என்னைக் கடத்திக்கொண்டு போற ஆள் மாதிரியோ தெரியெல்லை எண்ட படியாலை நான் thanx சொல்லி ஒரு ரொபியை வாங்கி சாப்பிட்டன்.

இப்பதான் மனிசிக்கு விசர் ஏறத் தொடங்கினது. முன் சீற்றில ஒரு இளம் பெடியும் பெட்டையும் ஒருத்தரை ஒருவர் கட்டிப்பிடிச்ச படி கொஞ்சுப் படுறதும் குலவுப்படுறதுமா இருந்திச்சினம். நான் என்ரை பாட்டில இருந்தன். வழமையா வாற ஒரு சில பெருமூச்சுக்கள் கூட இல்லை.

ஆனா.. பக்கத்தில இருந்தவ புறுபுறுக்க தொடங்கினா. its too much எண்டா அவ என்னைப்பாத்து.. அதுகள் too much எண்டால் அதுக்கு நான் என்ன செய்யிறது..?

தன்ர காலத்தில தாங்கள் வலு கட்டுப்பாடா இருந்தவையாம். இப்ப எல்லாம் கெட்டுப்போச்சாம் எண்டு சொல்ல எனக்கு ஆச்சரியமாக்கிடந்தது. எட.. எல்லா இடத்திலையும் இதுதான் பிரச்சனையோ..?

நானும் ஏதாவது சொல்ல வேணும் எண்டிட்டு.. உது தலைமுறை மாற்றம் எண்டு சொன்னன். அது மாறேக்க சில பழக்க வழக்கங்களும் மாறும் தானே எண்டும் சொன்னன்.

மனிசிக்கு கோபம் வந்திருக்க வேணும்.. காலம் மாறும்.. ஆக்களும் மாறுவினம்.. ஆனால் கடவுள் ஒராள்தான் அவர் மாறேல்ல.. அவர் எல்லாத்தையும் பாத்துக்கொண்டிருக்கிறார் எண்டு அவ லெக்சர் அடிக்க தொடங்கினா.. நாங்கள் அவரை மதிக்க வேணுமாம்.

கடைசியில நான் என்ர இடம் வந்தோடனை இறங்கிட்டன். ஒண்டை மட்டும் வீடுவரை யோசிச்சு கொண்டு வந்தன்.

அதாவது.. நானோ இல்லாட்டி இண்டைக்கு ரெயினில கொஞ்சிக்கொண்டு போன அந்த இளைஞனோ அல்லது அந்தப் பெண்ணோ.. வயசான பிறகு.. அதாவது கிழடுகள் ஆன பிறகு எங்காவது அகப்படும் ஒரு அப்பாவியிடம் இப்படிச் சொல்லிக் கொள்வோம்..

எங்கடை காலத்தில நாங்கள் வலு கட்டுப்பாடா இருந்தம். இப்ப சுத்த மோசம்!

By

Read More

ஊர் நினைவில் ஒரு வீடு – சிட்னியில்

சிட்னியில் penrith (என்று தான் நினைக்கிறேன்..) போகிற வழியில் தெரிந்த ஒருவர் இருந்தார். மிக அண்மையில் அந்த இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தார். நகர்ப்புறத்தில் இருந்து மிக அதிகமாக விலகிய ஒரு காடு சார்ந்த ஒரு சூழலில் அவர் வீடு இருந்தது.

ஒரேஞ் தோட்டம் செய்வதற்கு ஏதுவான இடமாம். அவரது காணிக்குள்ளேயே நிறைய ஒரேஞ் (என்று தான் நினைக்கிறேன்..) மரங்கள் காய்த்துக் குலுங்கின.. தவிர வீட்டைச் சுற்றி கோழிகள் அங்குமிங்கும் ஓடித்திரிந்தன.. அவற்றுக்கு முற்றத்தில் அரிசி வீசிக் கிடந்தது.

இரண்டோ மூன்று ஆட்டுக்குட்டிகள்..

ஒரு நாய்..

ஒஸ்ரேலியாவில் முழுக்க முழுக்க தனது வீட்டினை ஒரு கிராமத்து சூழலில் மாற்றிவிட்டிருந்தார்.

காலையில் சேவல் கூவி நித்திரைவிட்டெழும் பாக்கியம் அவருக்கு!

அங்கு எடுத்த சில படங்கள் இவை.. அந்த ஒரு நாளும் எனக்கும் ஏதோ ஊர்ச் சூழலில் வாழ்வது போன்ற உணர்வு கிடைத்தது..


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

இந்தச் சேவலுக்கு இது இறுதிப்படம். அன்று விருந்தினராய்ப் போன எங்களுக்காக தன்னையே தந்த அந்த சேவலுக்கு எனது நன்றி நன்றி நன்றி…

By

Read More

கத்தரித் தோட்டத்து மத்தியிலே..

சென்ற முறை இலங்கை சென்ற போது வசந்தன் திரும்பத் திரும்ப சொன்ன விசயத்தினை நான் நிறைவேற்றாமல் வந்தேன். அது சில சிறுவர் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வருதல். குறிப்பாக அவர் கத்தரித்தோட்டத்து மத்தியிலே பாடலை கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்து வரும்படி சொல்லியிருந்தார்.

சென்ற வாரம் சிட்னி சென்ற போது எப்பிடியாவது அந்தப்பாடலை ஒலிப்பதிவு செய்ய சொல்லியிருந்தார். இம்முறை அவரது விருப்பத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நோக்கில்… இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறேன்.

இந்தப்பாடலுக்கு தனியாக இசையமைக்கப்பட்டது. சிட்னியில் எனது நண்பன் ராஜ் (தல) இதற்கான இசையை தந்திருந்தார். குரல் வழங்கியிருக்கிறார்.. அத மட்டும் சொல்ல மாட்டன்.

வசந்தனுக்கு இப்ப சந்தோசமாயிருக்கும். என்ன வசந்தன் சந்தோசம் தானே!

By

Read More

மெல்பேணில் AR ரஹ்மான்

இப்பத்தான் நிகழ்வு முடிஞ்சு வீட்டை வந்தன். நித்திரை கொள்ளப்போறன் ஏனெண்டால் எனக்கு நித்திரை வருகுது. நன்றி

By

Read More

× Close