சுஜித்-ஜீயின் வானொலிச் செவ்வி

By சினிமா

பெரியண்ணன் டிசே தனது பதிவொன்றில் சுஜித்-ஜீ பற்றி எழுதியிருந்தார். சுஜித்-ஜீ யாரென கேட்பவர்களுக்காக டிசேயின் வார்த்தைகளை இங்கே கடன்பெற்றுத் தருகிறேன்.

இந்த இளங்கலைஞர், தமிழ்ப்பாடல்களை Rap, R&B போன்ற தளங்களுக்கு நகர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கின்றார். முதலாவது ஆல்பம், Singles, இரண்டாவது ஆல்பமான சிலோன் (Ceylon) இந்த வருடம் நடுப்பகுதில் வர இருக்கிறது. தானே பாடல்கள எழுதி, பாடவும் செய்கின்ற சுஜித்தின் பாடல்கள், ராப் பாடல்களிலும், தமிழ் ரீமிக்ஸ்களிலும் கரைந்துபோகின்ற என்னைப் போன்றவர்களுக்கு பிடிக்காமற்போகாதுதானே. அநேக ராப் பாடல்களில் (கானாப் பாடல்களைப் போல) ஒருவித எள்ளல் தொனி இருக்கும் (specially Eminem’s lyrics). அதையும் சுஜித் முயற்சித்துப் பார்த்திருப்பது நன்றாக இருக்கிறது. ‘அன்புக் காதலி’யும், ‘பயணமும்’ மிகவும் பிடித்த பாடல்கள். ‘ஒரு சில பெண்களின்…’ பாடலில், ஒரு ஆணின் பார்வை வலிந்து தெரிந்தாலும் beatம் பாடல் வரிகளும் இணைந்து போகின்றதால், திரும்பத் திரும்பக் கேட்கமுடிகிறது.

சுஜித்-ஜியை கடந்த வாரம் ஒஸ்ரேலிய இன்பத்தமிழ் ஒலி வானொலியின் சிறகுகள் நிகழ்ச்சிக்காக செவ்வி கண்டிருந்தேன். அந்த ஒலிப்பதிவினை இந்த வேளையில் வெளியிடுவது பொருத்தமாயிருக்கும்.

செவ்வியென்றால் பெரிதாக நற்சிந்தனைகள், அறிக்கைகள் எதுவும் இருக்காது. அதிலும் குறிப்பாக இயல்பில் பேசுவது போலவே இருக்க வேண்டும் எனவும் கவனமெடுத்துக்கொண்டேன். பேட்டியின் இடையிடையே சுஜித்-ஜியின் பாடல்களும் இடம் பெறுகின்றன. கேட்டுப்பாருங்கள்

Last modified: February 23, 2006

28 Responses to " சுஜித்-ஜீயின் வானொலிச் செவ்வி "

  1. டிசே தமிழன் says:

    நல்ல விடயம் சயந்தன். இப்போது இந்த நேர்காணலைக் கேட்கமுடியாத சூழ்நிலை. பிறகு கேட்டுவிட்டு விரிவாக எழுதுகின்றேன். நன்றி.

  2. டிசே தமிழன் says:

    நல்ல விடயம் சயந்தன். இப்போது இந்த நேர்காணலைக் கேட்கமுடியாத சூழ்நிலை. பிறகு கேட்டுவிட்டு விரிவாக எழுதுகின்றேன். நன்றி.

  3. Anonymous says:

    நன்றி அண்ணை. கேட்டுப்போட்டுச் சொல்லுறன் நல்லா இல்லையெண்டால் கொல்லுறன்

  4. Anonymous says:

    நன்றி அண்ணை. கேட்டுப்போட்டுச் சொல்லுறன் நல்லா இல்லையெண்டால் கொல்லுறன்

  5. வசந்தன்(Vasanthan) says:

    நல்லதொரு பதிவும் அறிமுகமும்.
    செவ்வி மிகமிக இயல்பாக இருக்கிறது.

    அப்ப சிட்னி இடப்பெயர்வோட பெரிய ஆளாயிட்டீர்?

  6. வசந்தன்(Vasanthan) says:

    நல்லதொரு பதிவும் அறிமுகமும்.
    செவ்வி மிகமிக இயல்பாக இருக்கிறது.

    அப்ப சிட்னி இடப்பெயர்வோட பெரிய ஆளாயிட்டீர்?

  7. சினேகிதி says:

    செவ்வி இயல்பாக இருந்தது சயந்தன்.
    “விடுதலை விடுதலை என்று விடுதலை” சுஜீத்தின் அடுத்த அல்பமான “சிலோன்” இல் இடம்பெறப்போகுது என நினைக்கிறேன்.
    இங்கு இணைத்ததிற்கு நன்றி சயந்தன்.

  8. சினேகிதி says:

    செவ்வி இயல்பாக இருந்தது சயந்தன்.
    “விடுதலை விடுதலை என்று விடுதலை” சுஜீத்தின் அடுத்த அல்பமான “சிலோன்” இல் இடம்பெறப்போகுது என நினைக்கிறேன்.
    இங்கு இணைத்ததிற்கு நன்றி சயந்தன்.

  9. Anonymous says:

    எழுதிக்கொள்வது: kalanithe

    சயந்தன் பேட்டி முழுவதுமாக கேட்டேன்.சுட்டிய தர்வும்

    22.30 23.2.2006

  10. Anonymous says:

    எழுதிக்கொள்வது: kalanithe

    சயந்தன் பேட்டி முழுவதுமாக கேட்டேன்.சுட்டிய தர்வும்

    22.30 23.2.2006

  11. கலாநிதி says:

    பேட்டி முழுவதுமாக கேட்டேன்.இந்த பேட்டியை செய்ய record விரப்பமாக உள்ளது அதற்கு என்ன செய்யலாம்?(இணைய இனைப்பு இல்லாத என் நண்பனுக்குபோட்டு காட்டத்தான். அவனுக்குதான் ராப்பில் ஆர்வம் உண்டு)

  12. கலாநிதி says:

  13. டிசே தமிழன் says:

    கேட்டேன். சுஜித் நமது சமூகம் பற்றிக் கூறுகின்ற பல கருத்துக்கள்தான்(விமர்சனம்?) எனக்கும் உண்டு. முக்கியமாய் அவரது பாடல்களில், இளைஞர் வன்முறைக்கு பலியாகிப்போகின்ற இளைஞர்களை அணைத்துப்பார்க்கின்ற தன்மை ஈர்த்திருந்தது. நமது வட்டத்தை விட்டு இன்னும் இந்தமாதிரி இளைஞர்களை விலத்துவது அல்ல, நமக்கான வட்டத்துக்குள் இழுக்கவேண்டியதே நமது கலைஞர்களுக்குத் தேவை என்பது எனது தனிப்பட்ட எண்ணம். அந்தவளவிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் திரையிசை நடனங்களையும் (சில விமர்சனங்களுடன்)ஆதரிக்கின்றேன். இந்தப் புலம்பெயர் இளைஞர்களுக்கு எந்த வெளியையும் திறந்துவிடாது, ‘இவர்கள் இப்படித்தான், அடிபடுவார்கள்’ என்று stereo typedயாய் கூறிக்கொண்டிருப்பதில் எதுவும் நடந்துவிடவும் போவதில்லை. இந்த விடயங்கள் சுஜித்தின் கவனத்திலும் இருப்பதால் அவர் மீது இன்னும் மதிப்பு வருகின்றது.
    …..
    அது சரி, ஜஸ்வர்யா வருவாயா? பாடல் எப்படி உங்கள் நேர்காணலில், 50Centன் Candy shop beatயாய் மாறியது? நான் கேட்டபோது அப்படியிருந்ததாய் நினைவில்லை :-).

  14. டிசே தமிழன் says:

  15. சயந்தன் says:

    கலாநிதி! forcomment@gmail.com முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்களேன்.

    //அது சரி, ஜஸ்வர்யா வருவாயா? பாடல் எப்படி உங்கள் நேர்காணலில், 50Centன் Candy shop beatயாய் மாறியது? நான் கேட்டபோது அப்படியிருந்ததாய் நினைவில்லை :-)//

    டிசே! VIP வெளியீடு என்ற ஒன்று பற்றி சுஜீத் சொல்லவில்லையா

  16. சயந்தன் says:

  17. Nambi says:

    nantraaka ullathu…

  18. Nambi says:

    nantraaka ullathu…

  19. nampi says:

    ivarin paadalkalai enke edukalam

  20. nampi says:

    ivarin paadalkalai enke edukalam

  21. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Kanthan

    சயந்தன் உவரின் செவ்வியினைக் கேட்கிறபோது உவர் ஒரு நக்கல்காரன் போல கிடக்கிறது. பின்னர் உவரால் எழுதமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை!
    உண்மையை அறியவும்!!!

    18.4 25.2.2006

  22. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Kanthan

    சயந்தன் உவரின் செவ்வியினைக் கேட்கிறபோது உவர் ஒரு நக்கல்காரன் போல கிடக்கிறது. பின்னர் உவரால் எழுதமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை!
    உண்மையை அறியவும்!!!

    18.4 25.2.2006

  23. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Kanthan

    எழுதிக்கொள்வது: Kanthan

    உவரின் கதையைக் கேட்டால் உவரால் உப்பிடிப் பாட்டு எழுதமுடியும் எண்ட நம்பிக்கை எல்லாம் எனக்கு வரவில்லை!
    உண்மையை அறியவும்!!!
    உமக்கு ஆப்பு எண்டுதான் என் மனம் சொல்கிறது!

    18.11 25.2.2006

    18.14 25.2.2006

  24. Anonymous says:

  25. Anonymous says:

    I dont believe that, this guy can write lyrics. Sorry! thats how he sounds to me. Please make sure that. b’cause people are there sayanthan. don’t let him make you fool. He is just a funny guy. ‘Someone isbacking him with lyrics.

    Kanthan

  26. Anonymous says:

  27. செந்தூரன் says:

    நல்லா இருக்கு சயந்தன். இன்பத்தமிழ் ஒலிக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். எங்களப்போல குழந்தைகளோட கதைச்சுக் கொண்டிருக்காம, ரப் எண்டு போட்டுத்தாக்குங்க..
    இவற்ற பாடல்கள் அருமை. எங்க இருந்தாவது தரையிறக்கம் செய்யலாமோ?

  28. செந்தூரன் says:

× Close