நீர் விழுது !
கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் ஆடிச்சாம். என்ன… நீர் விழுதுதானே..லுசேர்ண் மாநிலம்
கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் ஆடிச்சாம். என்ன… நீர் விழுதுதானே..லுசேர்ண் மாநிலம்
கடந்த நட்சத்திர வாரப்பதிவுகளில் நான் எழுதியிருந்த யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது என்ற பதிவினை மதி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து globalvoicesonline.org இணையத்தில் இட்டிருந்தார். இந்த இணைப்பில் கிளிக்கவும்.. அவ் ஆங்கிலப் பதிவிலிருந்து rezwan என்பரால் அது வங்காள மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு இவ் விணைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது….
கடந்த ஒருவாரத்து நட்சத்திரப் பதிவுகளில் வழமைப் பாதையிலிருந்து மாறி ( சிங்கப் பாதை…? ) கொஞ்சம் கனமான விடயங்களை கையாள நினைத்திருந்தேன். அவ்வாறே செய்துமிருந்தேன். ஒவ்வொரு பதிவும் ஏதோ ஒரு விவாதப் புள்ளியைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன். பெரும்பாலும் இவ்வாறான (பொதுவாக ஈழம் குறித்த) கனத்த பதிவுகள் பின்னூட்டங்களால்…
அவ்வப்போது புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களை நோக்கி, தட்டுக் கழுவிகள் என்றோ தூசு தட்டுபவர் எனவோ யாராவது இணையத்தில் எழுதுவார்கள். வலைப் பதிவுச் சூழலில் அனாமதேயப் பின்னூட்டங்களாக பெரும்பாலும் இவை இடம்பெறும். ஏதோவொரு வழியில் அவர்களை ஏளனம் செய்வதற்கும், காழ்ப்புணர்வைக் காட்டவுமே அவ்வாறு சிலரால் சொல்லப்படுகிறது என்பதற்கு பின்னணியில்…
அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு. 1987…