அஷேரா! மனதை விட்டு அகலாத அற்புதம் – உமா ஆனந்த்

“கையைச்சுடும் என்றாலும் தீயைத்தொடும் பிள்ளைபோல்” நான் ஏன் தேடி தேடி ஈழக்கதைகளை வாசிக்கிறேன் என்று புரியவில்லை. எப்படியாவது வாழ்ந்துவிட துடிக்கும் மக்களின் கதை. உயிர் வாழும் ஆசை எந்த எல்லைக்கும் துரத்தக்கூடியது . அற்புதம் கடைசி முறையாக இலங்கையில் இருந்து கிளம்புவதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அருள்குமரன்களும், அற்புதங்களும்தான் ஈழத்தின்…

அஷேரா! சொல்லாமல் சொல்லும் புதிர்கள் – ஜூட் பிரகாஷ்

ஆறாவடு. ஆதிரை, வரிசையில் வாசிக்கும் சயந்தனின் மூன்றாவது நாவல் தான் அஷேரா. யூதர்களின் ஒற்றைக் கடவுளான யாஹ்வேயிற்கு ஒரு மனைவி இருந்ததாகச் சொல்லப்படும் மனைவியின் பெயர் தான் அஷேராவாம். அஷேராவை வேதாகமத்தை எழுதிய பண்டைய யூதர்கள் வேண்டுமென்றே மறைத்து விட்டதாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். யாஹ்வேயின் மனைவியான பெண்…

அஷேரா! அக உணர்வுகளின் திறப்பு – சுரேந்தர்

தமிழ் ஈழ போராட்டத்தைப் போன்ற குழப்படி மிகுந்த விடுதலைப் போராட்ட வரலாறு உலகில் எங்குமே காணக் கிடைக்காது. கொள்கை சாய்வுகளற்ற மூன்றாம் மனிதன் அதைப் புரிந்து கொள்ள தலைப்பட்டானானால் கிறுக்குப் பிடித்துப் போகும். என் பள்ளிக்காலத்தில் நான் நினைத்து இருந்தேன் தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே பிரச்சினை….

அஷேரா! ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் – சுபா

‘ஏரி பெரிய இருள்ப் படுக்கையைப் போல விரிந்துகொண்டே போனது…’. மனதின் ஒவ்வொரு இருள் படுக்கையாக உரித்து உரித்து எடுத்து, சில நாட்களுக்கு ஆப்கானின் வரண்ட மலைகளாக நிச்சலனத்துடன் வெறித்து மட்டுமே நிற்க வைத்தது அஷேரா எனும் ஆழமான நாவல். காமமும், கோபமும் உயிர்க்குணங்கள். பிரிக்க முடியாதவை. இருள் போர்த்தியவை….

‘அஷேராவின்’ புனைவுத் தளத்தை விரிவாக்கத் தூண்டும் வாசகப்பணி இது – அசுரா

நாவலின் ஆசிரியரின் குறிப்பு எனும் இறுதிப்பகுதியும், அதுவே இந்தப் புனைவின் ‘ஆசிரியரான’ சயந்தனின் குரலாகவும் கருதி, இப்பிரதியின் பின்னல்களை அவிழ்க்க வேண்டியதான ஒரு வாசிப்பு அனுபவத்தை என்னால் உணரமுடிகிறது. இலக்கியப் படைப்பாளிகளை, தத்துவ சிந்தனையாளர்களை, வரலாற்று ஆய்வாளர்களை ஆசிரியர்கள், ஆசான்கள், எனும் பொருள்பட அழைப்பதன் உட்பொருள் என்ன? இவர்களும்…