இவர் யாருங்கோ..?

அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்தபோது எடுத்த படங்களின் தொகுப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் சிக்கியது இந்தப் படம்! யாழ்ப்பாணம் கோட்டையை அண்மித்தாக -பழைய சுப்ரமணிய பூங்காவிற்கு முன்பாக – இந்த சிலை இருக்கின்றது. யாரென்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா..? பாருங்கள்.. யுத்தத்தின் வடுக்களை தன்னால் முடிந்தளவு தாங்கி வைத்திருக்கின்றார்.

கடவுள் ஒருவன் தான்!

ஹி ஹி.. இது ஒண்ணும் மதப் பதிவு இல்லைங்க!இண்டைக்கு பின்னேரம் போல வகுப்பாலை ரெயினிலை வந்து கொண்டிருந்தன். அடுத்ததோ அதுக்கடுத்ததோ ஒரு ஸ்ரேசனில ஒரு வயசான வெள்ளைக்கார அம்மா வந்து எனக்கு பக்கத்தில இருந்தா. நான் ஒரு பண்பாட்டுக்கு சிரிச்சு வணக்கம் சொல்லிப்போட்டு பக்கத்தில கிடந்த ஓசிப்பேப்பரை எடுத்து…

ஊர் நினைவில் ஒரு வீடு – சிட்னியில்

சிட்னியில் penrith (என்று தான் நினைக்கிறேன்..) போகிற வழியில் தெரிந்த ஒருவர் இருந்தார். மிக அண்மையில் அந்த இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தார். நகர்ப்புறத்தில் இருந்து மிக அதிகமாக விலகிய ஒரு காடு சார்ந்த ஒரு சூழலில் அவர் வீடு இருந்தது. ஒரேஞ் தோட்டம் செய்வதற்கு ஏதுவான இடமாம். அவரது…

கத்தரித் தோட்டத்து மத்தியிலே..

சென்ற முறை இலங்கை சென்ற போது வசந்தன் திரும்பத் திரும்ப சொன்ன விசயத்தினை நான் நிறைவேற்றாமல் வந்தேன். அது சில சிறுவர் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வருதல். குறிப்பாக அவர் கத்தரித்தோட்டத்து மத்தியிலே பாடலை கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்து வரும்படி சொல்லியிருந்தார். சென்ற வாரம் சிட்னி சென்ற போது…

மெல்பேணில் AR ரஹ்மான்

இப்பத்தான் நிகழ்வு முடிஞ்சு வீட்டை வந்தன். நித்திரை கொள்ளப்போறன் ஏனெண்டால் எனக்கு நித்திரை வருகுது. நன்றி