சுகன்

நஞ்சுண்ட காடு ,விடமேறியகனவு,ஆறாவடு,ஆதிரை போன்ற நாவல்கள் தமிழகத்தில் மற்றும் புகலிடத்தில் கவனம் பெறுதலும் கவனம் கோரலுக்கான முன்மொழிவிற்குமான பின்னணி என்ன ? யுத்தத்தின் இறுதி நாட்கள் வரை யுத்தத்தின் மானசீகமான ஆதரவுத்தளமாக அதன் ஆதாரமாக அதன் இயக்குதளமாக இருந்த தமிழக – புகலிட ஈடுபாட்டாளர்கள்,யுத்தத்தின் அவலமுடிவை சீரணிக்கமுடியாமல் தலை…

மீரா பாரதி

ஈழவிடுதலைப் போராட்டத்தில் இறுதிவரை பெரும் பங்காற்றியவர்களும் அதிகமாக (கட்டாயமாகப்) பலியாக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் வடக்கு கிழக்கில் சாதியாலும் வர்க்க நிலைகளாலும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட மக்களே. இவர்களுடன் மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து அகதிகளாக வன்னிப்பிரதேசங்களில் வாழ்ந்த மலையக மக்களும் பாதிப்புக்குள்ளானார்கள். ஒரு புறம் தமிழ் சமூகங்களுக்குள் இருக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும்…

ப.ரவி

நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வெவ்வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில் ஒருவர் தனது கருத்தின் சார்புநிலையை அக் கணங்களில் துறக்க வேண்டியிருக்கும். தனது கருத்துசார்…

தமிழ்கவி

ஆதிரை ஒரு காத்திரமான வரலாற்றைப் பதிவு செய்து கொண்டு நகர்கிறது.கடந்த காலம் நிகழ்காலம் எனபவற்றில் தீவிரமான போக்குக் காட்டி விரைகிறது தமிழர்களின் என்பதைவிட என்னுடைய ஆறிய புண்ணை மிக மோசமாக கீறிக் கிழித்துச் செல்கிறது. எதையெல்லாம் எமது சந்ததி மறக்கக் கூடாதோ அதையெல்லாம் கச்சிதமாகப் பதிவு செய்துவிட்டது. படிக்கும்…

யதார்த்தன்

கருவுற்ற பெண் நாவல் முன் குறிப்புக்கள் 01 நாடுகடத்தப்பட்ட ஆரிய குழுமத்தினரான விஜயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் இலங்கைக்கு வந்தபோது , இலங்கையில் இயக்கர் நாகர் முதலான தொல்குடிகள் செழித்த இலங்கை நிலத்தில் வாழ்ந்துகொண்இருந்தனர். ஸ்பானியர்களும் பிரிடிஷ்காரர்களும் அமெரிக்க கண்டங்களின் தொல்குடிகளை வலுக்குன்றச்செய்து தங்களுடைய குடியேற்றங்களை நிறுவ அவர்களிடம்…