August 22, 2026

அஷேரா – 21

கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன் யார்? “அதுக்குப் பிறகு நீ யாரோ.. நாங்கள் யாரோ.. உனக்காக நாங்கள் உரிமை கோர முடியாது. எப்பவாவது கைதிகளைப் பரிமாறும்போது கூட பட்டியலில் உன்ர பெயரைச் சேர்க்க முடியாது.” கடல் தாண்டும் முன்னர் சொல்லப்பட்டவற்றை […]
◷ 28 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

Sample article image

சைய சையா நய்.. தைய தையா

எல்லாமாச் சேத்து ஒரு 15 000 சனம் வந்திருக்கும். அதில ஒரு முக்கால்ப் பங்கு இந்திய அதுவும் ஹிந்தி மொழி பேசும் சகோதரர்களாக இருந்திருப்பார்கள். நாங்கள் ஒரு ஏழெட்டு தமிழ்ப்பெடியள். வழமை போலத்தான் கொஞ்சம் லேற்றாகப் போனம். உள்ளே நுழைஞ்ச போது…

மெல்பேணில் AR ரஹ்மான்

இப்பத்தான் நிகழ்வு முடிஞ்சு வீட்டை வந்தன். நித்திரை கொள்ளப்போறன் ஏனெண்டால் எனக்கு நித்திரை வருகுது. நன்றி

இப்பத்தான் நிகழ்வு முடிஞ்சு வீட்டை வந்தன். நித்திரை கொள்ளப்போறன் ஏனெண்டால் எனக்கு நித்திரை வருகுது. நன்றி

Sample article image

மெல்பேண், சிட்னி, நியூஸிலான்ட்- சங்கமம்

தென்துருவ வலைப்பதிவர் கழகமும் ஒரு பகிரங்க அறிவித்தலும்.வலைப்பதிவர் சந்திப்பொன்றை ஒஸ்ரேலியாவில நடத்தி நிறைய நாளாச்சு. கடைசியா போன சித்திரை மாசம் எண்டு நினைக்கிறன் ஒரு வலைப்பதிவா சந்திப்பை நானும் வசந்தனும் திறம்பட நடத்தி முடிச்சிருந்தனாங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில எங்கடை மெல்பேண்…

முதலாளியின் அப்பா

என்னுடைய வேலை அனுபவத்தைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆவல் தாரா வின் ஒரு பதிவினை பார்த்த பிறகு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அது கட்டாயம் எழுதப்பட்டேயாக வேண்டும் என்ற முடிவினை எட்டியது. அதாகப்பட்டது, ஒஸ்ரேலியா வர முன்பே அங்கு போனால்…

லக்ஸ்மன் கதிர்காம (ர் இல்லை)

போன சனிக்கு முதல் சனிக்கிழமை! முதல்நாள் வரை பாயாசம் காய்ச்சுவதாக இருந்த எண்ணத்தை கதிர்காமரின் இறப்புச் செய்தி கேட்டு கைவிட்டு விட்டம். ஏற்கனவே பிளான் பண்ணியிருந்தது தான் என்றாலும், நாளைக்கு கதிர்காமரின் இறப்பை பாயாசம் காய்ச்சி கொண்டாடினாங்கள் எண்ட பழிச்சொல் வரக்கூடாது…

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்