பனி விழும் இரவு

நேற்றைய இரவில் இருந்து இங்கு பனிப் பொழிந்து கொண்டிருக்கிறது. அதிகாலை 6 மணிக்கு புகையிரத நிலையத்திற்கு செல்ல கால்கள் புதையப் புதைய நடக்க வேண்டியிருந்தது. முதல் முறை.. அதனால் ஒரு வித கிளர்ச்சி.. நாளாக நாளாக அலுப்பினையும் எரிச்சலையும் தருவது உறுதி. படங்களின் மேல் கிளிக்குக.. wweeeeee wweeeeee

படங்களில் நோண்டுதல்

சில்லென்ற தண்ணீரும் அழகிய மாலையும் அதோ தூரத்தில் பனி மலையும் இன்னும் ஒரு மொட்டை மரமும் வீடும். படங்களில் மேல் கிளிக்குக. wweeeeee wweeeeee

எனக்கெண்டொரு றேடியோ

தடங்கலுக்கு வருந்துகிறேன். சொதப்பிட்டுது. சரி வந்தது தான் வந்தியள். பக்கத்தில இருக்கிற என்ர பாடலை கேட்டுப் போங்கோ. அதுவும் புது றேடியோத்தான்.

உலக வலைப் பதிவுகளில் முதல் முறையாக

கொஞ்ச நாளுக்கு முன்னாலை வசந்தன் தன்ர வலைப்பதிவின்ர ரண்டாம் ஆண்டு நிறைவுக்காக ஏதாவது செய்ய இருக்கிறதாகவும் என்ன செய்யலாம் எண்டும் கேட்டார். வழமையா குரல் பதிவுகள் தான் அவரின்ர விசேசமான பதிவுகள். அதனாலை ஒரு குரல் பதிவைப் போடும் எண்டு சொன்னன். சரியெண்டு அவரும் அதைப்பற்றிக் கதைச்சக் கொண்டிருக்கும்…