ஒரு வழியாய் முடித்தாயிற்று

நிறைய நாளாக எனக்கே எனக்காக ஒரு Audio player செய்ய வேண்டும் என்ற ஆசை இன்று ஒரு 50 வீதம் நிறைவுக்கு வருகிறது என நினைக்கிறேன். வழமையாகக் குரல்ப் பதிவுகள் போடும் போது Real player பயன்படுத்துவது தான் வழமை. ஆனால் அது பலரைச் சென்றடைவதற்கான வாய்ப்பு இல்லையென்பதனால் வேறேதாவது Players பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் Flash இல் முயற்சி செய்யத் தொடங்கினேன். இணையத்தில் விழுந்து எழும்பிப் புரண்டு நிமிர்ந்ததில் கிடைத்த துணுக்கு அறிவினைக் கொண்டு Flash மற்றும் xml இல் தயாரித்த இந்தச் சாரல் ஒலியை வெள்ளோட்டத்திற்கு விடுகிறேன். வழமை போலவே இதுவும் என்னைக் கவிழ்க்கலாம்.

இப்போது நான் அடிக்கடி முணுமுணுக்கின்ற பாடல் தான் இங்கும் ஒலிக்கும்.
H. ஜெயராஜ், தாமரை, கெளதம் கூட்டணி பிடித்தவர்களுக்கு இந்தப் பாடலும் பிடிக்கும்.

சோமிதரன்.. அடுத்தது உனதுடனான அலட்டல் ஒலிப்பதிவுதான்.

18 Comments

  1. பக்கம் திறக்க பாட்டும் தன்ர பாட்டில தொடங்குது.

  2. பக்கம் திறக்க பாட்டும் தன்ர பாட்டில தொடங்குது.

  3. வசந்தன் உமது அவதானிப்பு சரி செய்யப்பட்டிருக்கு. வேறேதாவதும் ஐடியா வந்தால் சொல்லும்..

  4. சயந்தன்!

    அருமையாக வேலை செய்கிறது. பாராட்டுக்கள்.

  5. முதலாவது அநாநிமஸ்… வேலை செய்வதாய்ப் பின் வந்தோர் சொல்லுகின்றனர்.

    டிசே.. இதை விட நேரில என்ர குரல் நல்லாயிருக்கும்.

    நன்றி மலைநாடன்..

    மற்றும் இப்போது முன்செல்லும் பின்செல்லும் அழுத்தான்களை செயற்படுத்தியிருக்கிறேன். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிக் கோப்புக்களைக் கேட்கலாம். இப்போதைக்கு இரண்டு பாடல்கள். இரண்டுமே எனக்கு பிடித்தவை

    கொசுறு.. தாமரை எழுதிய பாடலென தவறாக குறிப்பிட்டு விட்டேன். அதன நடிகை ரோகினி எழுதியதாக காதில் சொன்னார் ஒரு நண்பர்.

  6. இதனை எப்படிச் செய்தீர்கள் எனச் சொன்னால் மற்றவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா…

  7. ஒரு வழியாய் முடித்தாயிற்று என்ற பெயரில் இன்னொரு பதிவு போடும் சூழ்நிலைக்கு காலம் தள்ளுகிறதோ என்றஞ்சுகிறேன். பாத்துப் பாத்து செய்தது. புளொக்கர் புதுசுக்கு மாறினால் எல்லாம் போயிடுமோ :((

  8. ம்க்கும் …

    எனக்கும் வேலை செய்யவில்லை.
    loading….. எண்டு கொண்டு கிடக்கு

  9. சயந்தன்!
    வேலை செய்யவில்லை. loding எனவே கிடக்கிறது.

  10. திலகன் மற்றும் யோகன் அண்ணை.. நீங்கள் பழைய றேடியோ கேட்கிறீங்கள். உது பழைய பதிவு. ஒலிப்பதிவுகள் பிரிவில வேறு ஏதாவது இருக்கும். கேட்டுப்பாருங்க.. 😉

Comments are closed.