கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..

உங்களுக்கு வேலையற்ற நேரம் இருக்கிறதா..? இருந்தால் இந்த அலட்டலைக் கேளுங்கோ.. சென்னையில் உள்ள எனது நண்பர் சோமிதரனும் நானும் வலைப்பதிவுக்காக அலட்டியதன் ஒலிப்பதிவு இது. இலங்கைத் தமிழ் நல்ல தமிழ் சென்னைத் தமிழ் ஊடகத் தமிழ் என்பவை பற்றி பலதும் பத்துமான உரையாடல். வழமை போலவே ஆயத்தங்கள் ஏதுமின்றி வழ வழா கொழ கொழா என்று கதைத்துவிட்டு பிறகு நேரக் கணக்கிற்கும் விசயக் கணக்கிற்கும் ஏற்ப வெட்டியதும் கொத்தியதும் போக மிச்சத்தை உங்கள் செவிகளுக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஒலிப்பதிவு தரமாக இருக்கிறது. இரு பக்கமும் கணணியூடாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட இப் பதிவில் சில இடங்களில் நேரடியாக ஒலிப்பதிவு செய்தது போன்ற தோற்றம் வருகிறது. நன்றி voipcheap.com

இதனையும் எனது பிரேத்தியேக player ஊடாக வெளியிடுகிறேன். கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க.. இது ஒரு Tea with sayanthan

47 Comments

  1. கடைசியில் OK டா BYE என்று சொல்வதில் தெரிகிறது,எப்படி கஸ்டப்பட்டு தமிழ் கதைத்தீர்கள் என்று :-).என்றாலும் Super அ கதைத்தீர்கள் 🙂

  2. கடைசியில் OK டா BYE என்று சொல்வதில் தெரிகிறது,எப்படி கஸ்டப்பட்டு தமிழ் கதைத்தீர்கள் என்று :-).என்றாலும் Super அ கதைத்தீர்கள் 🙂

  3. வன்னியில எதிரொலி எண்ட பேரில ஓர் அறிவிப்பாளர் இருந்தவர். போராளியான அவர் ஒலிவாங்கியேதுமின்றி எதிரொலித்துக் கதைப்பார். மிக அருமையாக இருக்கும். அதனால்தான் எதிரொலி என்ற பேரும் வந்தது.

    அவர்போலவே சோமியும் கதைக்கத் தொடங்கினார், ஆனால் பிறகு சாதாரணமாக வந்துவிட்டது அவரது கதை.
    வணக்கம், நலம் போன்ற சொற்களைச் சொல்லும்போது அவர்குரலும் நன்றாக எதிரொலிக்கிறது.

  4. வன்னியில எதிரொலி எண்ட பேரில ஓர் அறிவிப்பாளர் இருந்தவர். போராளியான அவர் ஒலிவாங்கியேதுமின்றி எதிரொலித்துக் கதைப்பார். மிக அருமையாக இருக்கும். அதனால்தான் எதிரொலி என்ற பேரும் வந்தது.

    அவர்போலவே சோமியும் கதைக்கத் தொடங்கினார், ஆனால் பிறகு சாதாரணமாக வந்துவிட்டது அவரது கதை.
    வணக்கம், நலம் போன்ற சொற்களைச் சொல்லும்போது அவர்குரலும் நன்றாக எதிரொலிக்கிறது.

  5. சயந்தன்,சோமிதரன் நல்ல முயற்சி. நல்ல கனத்த குரல்களும்தான். ஆனா… சும்மா ‘செல்ல’க்கூடாது இந்தத் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பேசுகிற ‘தமிலுக்குக்’கிட்டவும் வராது உங்கடை தமிழ்.

  6. சயந்தன்,சோமிதரன் நல்ல முயற்சி. நல்ல கனத்த குரல்களும்தான். ஆனா… சும்மா ‘செல்ல’க்கூடாது இந்தத் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பேசுகிற ‘தமிலுக்குக்’கிட்டவும் வராது உங்கடை தமிழ்.

  7. விரு விரு மாண்டி விருமாண்டி.. உங்கடை அவதானிப்புச் சரி.. hai என்று சொல்லும் பழக்கம் இல்லாத நான் Ok.. bye என்பதைப் பின்பற்றுகின்றேன் தான். அதற்காக கஸ்ரப்பட்டு தமிழில கதைக்கவில்லை. உப்பிடித்தான் இயல்பாகவே கதைக்கிறன். ஆச்சரியமாத்தான் கிடக்கு. முதலில ஆங்கிலச் சொல்லு வந்து தான் பிறகு அது தமிழாகிறது. very bad

  8. விரு விரு மாண்டி விருமாண்டி.. உங்கடை அவதானிப்புச் சரி.. hai என்று சொல்லும் பழக்கம் இல்லாத நான் Ok.. bye என்பதைப் பின்பற்றுகின்றேன் தான். அதற்காக கஸ்ரப்பட்டு தமிழில கதைக்கவில்லை. உப்பிடித்தான் இயல்பாகவே கதைக்கிறன். ஆச்சரியமாத்தான் கிடக்கு. முதலில ஆங்கிலச் சொல்லு வந்து தான் பிறகு அது தமிழாகிறது. very bad

  9. நல்லதொரு முயற்சி.

    சில ஆக்கபூர்வமான விடயங்களையும் பதிவு செய்தால் நன்று.தம்பிமாரே விசயமிருக்கிர பெடியள் போல கிடக்கு இது மாதிரி இனி அலட்டுறதை விட்டுட்டு நல்ல விசயங்களைச் சொல்லுங்கள். இருந்தாலும் இந்த முயற்சி வரவேற்க தக்கதொன்றூ

  10. நல்லதொரு முயற்சி.

    சில ஆக்கபூர்வமான விடயங்களையும் பதிவு செய்தால் நன்று.தம்பிமாரே விசயமிருக்கிர பெடியள் போல கிடக்கு இது மாதிரி இனி அலட்டுறதை விட்டுட்டு நல்ல விசயங்களைச் சொல்லுங்கள். இருந்தாலும் இந்த முயற்சி வரவேற்க தக்கதொன்றூ

  11. அடே பொடியளா..
    கலக்கிறியள்.. பெருமையாக் கிடக்கு.. கல கல எண்டு கதைக்கிறது விறுவிறுப்பாக் கிடக்கு. வானொலியில கதைக்கிறதெண்டால் ஒரு மரபிருந்தது. அதைப் பற்றிக் கணக்கெடுக்காமல் உங்கடை பாட்டில விளங்கிறது போல கதைச்சியள்.. அது தான் பிடிச்சிருக்குது.. தொடந்து செய்யுங்கோடாப்பா..

  12. அடே பொடியளா..
    கலக்கிறியள்.. பெருமையாக் கிடக்கு.. கல கல எண்டு கதைக்கிறது விறுவிறுப்பாக் கிடக்கு. வானொலியில கதைக்கிறதெண்டால் ஒரு மரபிருந்தது. அதைப் பற்றிக் கணக்கெடுக்காமல் உங்கடை பாட்டில விளங்கிறது போல கதைச்சியள்.. அது தான் பிடிச்சிருக்குது.. தொடந்து செய்யுங்கோடாப்பா..

  13. நன்றி வசந்தன்.
    நன்றி தமிழ்நதி.. கனத்த குரல்களா.. எவ்வளவு கிலோ இருக்கும்.. ?

  14. நன்றி வசந்தன்.
    நன்றி தமிழ்நதி.. கனத்த குரல்களா.. எவ்வளவு கிலோ இருக்கும்.. ?

  15. ஒலிபரப்பு தெளிவாக இருக்கிறது. அதிலும் நீங்கள் பேசும் பகுதி மிக மிகத் தெளிவு. சோமி பேசுவது கொஞ்சம் தூரத்தில் பேசுவது போல் தான் கேட்கிறது.

    மட்டக்களப்புத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ்னு வித்தியாசம் வேற இருக்கா? தனித்தனியாக இந்த வட்டார வழக்குகளைப் பதிவு செய்யுங்களேன்….

    சயந்தன்,
    உங்கள் குரல் நிசமாவே கனத்த குரலாகத் தான் இருக்கு :))))) கிலோ கணக்கெல்லாம் தெரியாது 🙂

  16. ஒலிபரப்பு தெளிவாக இருக்கிறது. அதிலும் நீங்கள் பேசும் பகுதி மிக மிகத் தெளிவு. சோமி பேசுவது கொஞ்சம் தூரத்தில் பேசுவது போல் தான் கேட்கிறது.

    மட்டக்களப்புத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ்னு வித்தியாசம் வேற இருக்கா? தனித்தனியாக இந்த வட்டார வழக்குகளைப் பதிவு செய்யுங்களேன்….

    சயந்தன்,
    உங்கள் குரல் நிசமாவே கனத்த குரலாகத் தான் இருக்கு :))))) கிலோ கணக்கெல்லாம் தெரியாது 🙂

  17. நன்றாயிருக்குது இப்படியான முயற்ச்சிகளை தொடர்ந்து செய்யுங்கோ

  18. நன்றாயிருக்குது இப்படியான முயற்ச்சிகளை தொடர்ந்து செய்யுங்கோ

  19. சயந்தன்,
    அதென்னெண்டு நீர் கதைக்கேக்க நல்ல தெளிவா வருது?

    சரி. அதைவிடும்.
    நீங்கள் ரெண்டு பேரும் விவாதத்தின்ர அடுத்தகட்டத்துக்குப் போக வேணும்.
    ஆய்வாளர் சோமியை வைச்சு தற்போதைய ஈழ அரசியல் தொடர்பாக உரையாடலாமே?
    எல்லா வானொலியிலயும் செய்யிறதைப்போல வலையிலயும் செய்யலாம்.
    இல்லாட்டி சண்டை தொடங்கிறதெண்டா எந்தப் பக்கத்தால எப்பிடித் தொடங்கலாம், எப்பிடியெப்பிடி அடிக்க வேணும் எண்ட ஆய்வுகளைச் செய்யலாம்.
    மொழிகளைப் பற்றிக் கதைச்சுக்கொண்டிருக்கத்தானே நானிருக்கிறன்.

  20. சயந்தன்,
    அதென்னெண்டு நீர் கதைக்கேக்க நல்ல தெளிவா வருது?

    சரி. அதைவிடும்.
    நீங்கள் ரெண்டு பேரும் விவாதத்தின்ர அடுத்தகட்டத்துக்குப் போக வேணும்.
    ஆய்வாளர் சோமியை வைச்சு தற்போதைய ஈழ அரசியல் தொடர்பாக உரையாடலாமே?
    எல்லா வானொலியிலயும் செய்யிறதைப்போல வலையிலயும் செய்யலாம்.
    இல்லாட்டி சண்டை தொடங்கிறதெண்டா எந்தப் பக்கத்தால எப்பிடித் தொடங்கலாம், எப்பிடியெப்பிடி அடிக்க வேணும் எண்ட ஆய்வுகளைச் செய்யலாம்.
    மொழிகளைப் பற்றிக் கதைச்சுக்கொண்டிருக்கத்தானே நானிருக்கிறன்.

  21. நன்றாயிருக்குது இப்படியான முயற்ச்சிகளை தொடர்ந்து செய்யுங்கோ

  22. நன்றாயிருக்குது இப்படியான முயற்ச்சிகளை தொடர்ந்து செய்யுங்கோ

  23. புதிய புளொக்கருக்கு மாறியதன் காரணமாக சொந்தப் பெயரில் கருத்திட்ட பலர் anonymous ஆக ஆக்கப் பட்டிருக்கிறார்கள். உதாரணமாக இந்தப் பதிவுக்கு பதிலிட்ட விருமாண்டி மற்றும் பொன்ஸ் ஆகியோர்.. புதிய புளொக்கருக்கு மாற்றம் பெற்ற பின்னர் அவர்களாகவே anonymous ஆகி விட்டார்கள். காரணம் கண்டறியப் படவில்லை. புளொக்கர் சார்பில் மன்னிப்புக் கேட்கிறேன். 🙁

  24. புதிய புளொக்கருக்கு மாறியதன் காரணமாக சொந்தப் பெயரில் கருத்திட்ட பலர் anonymous ஆக ஆக்கப் பட்டிருக்கிறார்கள். உதாரணமாக இந்தப் பதிவுக்கு பதிலிட்ட விருமாண்டி மற்றும் பொன்ஸ் ஆகியோர்.. புதிய புளொக்கருக்கு மாற்றம் பெற்ற பின்னர் அவர்களாகவே anonymous ஆகி விட்டார்கள். காரணம் கண்டறியப் படவில்லை. புளொக்கர் சார்பில் மன்னிப்புக் கேட்கிறேன். 🙁

  25. நல்ல முயற்சி..
    தமிழில் ஆங்கிலத்தை மிக்ஸ் பண்ணுவது நல்ல பகிடி.. சோமிக்கு விளங்கவில்லை போல

  26. நல்ல முயற்சி..
    தமிழில் ஆங்கிலத்தை மிக்ஸ் பண்ணுவது நல்ல பகிடி.. சோமிக்கு விளங்கவில்லை போல

  27. மிகவும் விரும்பி ரசித்தேன்.
    நன்றி.

  28. மிகவும் விரும்பி ரசித்தேன்.
    நன்றி.

  29. கந்தன் சொல்வது போல் இலங்கை தமிழில் நாடகங்கள் செய்யவும்.
    இது ஒரு நல்ல யோசனை.

  30. கந்தன் சொல்வது போல் இலங்கை தமிழில் நாடகங்கள் செய்யவும்.
    இது ஒரு நல்ல யோசனை.

  31. இலங்கைத் தமிழில் நாடகஞ் செய்யும் ஆற்றல் கொழுவியிடமும் உண்டு.அங்கெ சென்று கேட்கவும்.

  32. இலங்கைத் தமிழில் நாடகஞ் செய்யும் ஆற்றல் கொழுவியிடமும் உண்டு.அங்கெ சென்று கேட்கவும்.

  33. கந்தன் அல்லது காந்தன் மற்றும் மாசிலா.. உங்கள் கருத்துக்களுக்கு மலைநாடான் வடிவம் கொடுக்க இருக்கிறார்.

    வசந்தன்.. என்ர குரல் எங்கையும் ஓங்கி ஒலிக்கும் எண்டு உமக்குத் தெரியாதோ..?

    கனைத்த குரல்கள் தான் தவறி கனத்த குரல்களாக தட்டச்சு செய்யப்பட்டு விட்டது என்ற வதந்திகள் உலவுது. உண்மையா தமிழ் நதி?

  34. /என்ர குரல் எங்கையும் ஓங்கி ஒலிக்கும் எண்டு உமக்குத் தெரியாதோ..? /
    வீட்டில் பெட்டிப்பாம்பாய் நீர் அடங்கிவிடுவீரென்று ஒரு பெண்குரல் ஓங்கி ஒலிக்கிறதே…உண்மையா அப்பு :-)?

  35. தொடர்ந்தும் செய்யுங்கோ.. கேட்க பொழுது போகும்.. உவன் பொடி வசந்தன் சொன்ன மாதிரி மட்டும் ஏதாவது செய்து என்ர எரிச்சலை வாங்கிக் கட்டாதேங்கோ..

  36. இன்று தான் கேட்டேன். நல்ல தெளிவு.என்னுடைய வேண்டு கோளும் இலங்கைத் தமிழில் நாடகம் ஒன்று. நன்றி

  37. நல்ல உரையாடல். முக்கியமான ஒரு தலைப்பு.

    இலங்கைத் தமிழர் பேசுவது முற்றிலும் தூய தமிழ் எனச் சொல்வதற்கில்லை சென்னை, மதுரை நாஞ்சில் தமிழ் போல அதுவும் ஒரு வடிவம்தான். இதை அழகாச் சொல்லியிருக்கீங்க.

    தமிழில் ஆங்கிலம் கலப்பதை(மிக்ஸ் செய்வதை) இயன்றவரை தவிர்க்கலாம்.

    எனக்கு எழுதும்ப்போது கொஞ்சம் எளிதாயிருக்குது ஆன பேசும்போது ஆங்கிலக் கலப்பிலாம பேச ஏலாது.

    இலங்கைத் தமிழ் உச்சரிப்புக்கும் கன்னியாகுமரி கடலோரமக்கள் பேசும் தமிழுக்கும் கொஞ்சம் ஒற்றுமை இருக்குதுன்னு நினைக்கிறேன்.

    நல்ல முயற்சி தொடருங்கள்.

  38. வலைப்பதிவின் வீச்சை, சாத்தியங்களை விளக்குற மாதிரி நல்லா இரு பதிவு போட்டிருக்கீங்க. பாராட்டுக்கள். பெரும்பாலானாரோக்கு தெனாலி படத்தமிழ் தான் தெரியும். ஆனால், இங்கு பார்க்கும் ஈழத்தமிழர்கள் அதை பகிடி 🙂 செய்கிறார்கள். முடிந்நால் ஈழத்தின் ஒவ்வொரு வட்டாரத் தமிழரின் பேச்சையும் இயல்பாகப் பதிந்து போடுங்களேன்.

  39. திலகன் மற்றும் யோகன் அண்ணை.. இதில கேட்கலாம்.

  40. சயந்தன்!
    உரையாடல்; நன்றாக உள்ளது.
    ஆங்கிலம் கலப்பது;தாங்கள் படித்தவர்கள் எனக் காட்ட;அல்லது மேல்தட்டு மக்கள் என்பதை வெளிக்காட்ட உள்ள வழியாகக் கருதுவது.

  41. நல்லதொரு முயற்சி.ஒலிபரப்பு தெளிவாக இருக்கிறது.மிகவும் விரும்பி ரசித்தேன்.
    நன்றி.
    இப்படியான முயற்ச்சிகளை தொடர்ந்து செய்யுங்கோ krishna

  42. என்னதான் கதைத்தாலும் நீங்களும் உங்கள் இயல்புநடையில் கதைக்கவில்லை என்பது என் கருத்து அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருக்கிற இன்றய பேச்சுத்தமிழின் நடை வெகுவாக மாறியிருப்பதும் உண்மை…

Comments are closed.