ஆறா வடு – தர்மினி

இப்ப தான் ‘ஆறாவடு ‘ படித்து முடித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையாகப் படிக்கக் கூடியவாறு அமைந்துள்ளது.எதார்த்தமும் உண்மைகளும் துயரங்களும் மனச்சாட்சியுமாக புத்தகம் முழுவதும் நம் கதைகள்.அநாவசியமாக எச்சொல்லும் இல்லை. தொடர்பற்று எச்சம்பவமுமில்லை.அத்துடன் எழுத்துப்பிழை எதுவும் இடையூறு செய்ய இதிலில்லை.பாராட்டுகள் சயந்தன்.

ஆறா வடு – இளங்கோ கல்லாணை

ஈழத் தமிழ் இலக்கியத்தில் சயந்தனின் ‘ஆறா வடு’ ஒரு முக்கியமான நாவல். அரசியலின் ஊடே அப்பாவிகளின் வாழ்வும், ஊழும் விளையாடும் அருமையான நாடகத் தருணம் இந்தப் புதினம். உணர்ச்சிப் போராட்டங்களிடையே தனித்து விடப்பட்ட தீவில் இருக்கும் அந்த மனிதர்களிடம் இந்திய ராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தனங்கள் முதல் முறையாக…

ஆறா வடு – அரங்கசாமி கே.வி

ஒரு நாவலிலேயே இதை சொல்லலாமா என தெரியவில்லை , இருந்தாலும் “இலக்கியம்” என்றால் அரசியல் அல்ல என்ற புரிதலுடன் எழுதும் ஈழ எழுத்தாளர்கள் என நான் வாசித்தவரையில் பிரியத்துடன் சொல்லக்கூடியவர்கள் இருவர் . அ.முத்துலிங்கமும் , சோபா ஷக்தியும் . ஈழ இலக்கியத்தின் இந்த தலைமுறை வரவு என…

ஆறா வடு – கவிஞர் தமிழ்நதி

சயந்தனின் ‘ஆறா வடு’வாசித்தேன். ஈழத்தின் துயர்படிந்த வரலாற்றின் ஒரு பகுதியை அந்த நாவல் பேசுகிறது. வாசிக்க இயலாத அவலம் நிறைந்த சில பகுதிகளை மிகுந்த சிரமத்தோடு கடந்து செல்லவேண்டியிருந்தது. எழுத்தில் கடக்கவியலாத கொடுந்துயரை, யதார்த்தத்தில் எங்கள் மக்கள் எப்படித்தான் சகித்தனரோ…? சயந்தனின் நக்கல் நடையையும் மேவியிருந்தது கண்ணீர். இலங்கை…

ஆறா வடு – கவிஞர் சேரன்

அண்மையில் வெளியாகி இருக்கும் சயந்தனின் ஆறா வடு என்னும் நாவல் நம் காலத்தின் மிகச் சிறப்பான நாவல்களில் ஒன்றாக அமையப் போகிறது. நேற்றுத்தான் வாசித்து முடித்தேன்.இந்த நாவலை மைக்கேல் ஒந்தாச்சியின் Cat’s Table உடன் சேர்த்துப் படிக்க வேண்டும். இரு நாவல்களும் வேறு கப்பல் பயணங்கள் பற்றியன மட்டுமல்ல,…

ஆறா வடு – துரைரத்னம் தயாளன்

ஆறாவடு ஆறாவடு என்டு ஒரு புத்தகம் இப்ப கொஞ்சகாலமா இந்த பேஸ்புக்க திறந்தா பெடியளோட கதைச்சா என்டு இதே கதை தான் எங்க பாத்தாளும் . சரி அப்பிடி என்னடா இருக்கு இதுல புதுசா, நாமளும் ரொம்ப பெரிய அறிவாளி மாதிரி காட்டிக்கலாம் தானே என்டு நினைச்சு ஒரு…