கழுத்தை அறுப்பேன் பிரிகேடியருக்கு எதிராக 2009 க்கு பின்னர் பல்லாயிரக்கணக்கான  புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்ட கண்டன பேரணி

0

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கையுடனான பிரித்தானிய உறவை கண்டித்தும் வெள்ளிக்கிழமை 09/02/2017 அன்று
மதியம் இரண்டு  மணியளவில் பிரித்தானிய ஸ்ரீலங்கா தூதரகத்தின் முன்றலில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுடன் மற்றும் பல புலம்பெயர் அமைப்புக்களும் இணைந்து  கண்டன பேரணியை முன்னெடுத்தார்கள் . கடந்த ஞாயிற்றுகிழமை ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னெண்டோ கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்திருந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்னெண்டோவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் உடனே நாடு கடத்தவேண்டும் என்று கோரி தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுடன் இணைந்து மற்றும் பல புலம்பெயர் அமைப்புக்கள் இணைந்து கண்டணப்பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்த இந்த குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து  பராம்பரிய இசையான பாறை  இசை முழங்க கண்டணப்பேரணி பேரணி முனகர்த்தப்பட்டது . முதன் முறையாக பிரித்தானியாவில்  தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் முழு உருவப்படத்தினை தாங்கிய  இளைஞர்கள் பேரணியை தலைமைதாங்கினார்கள். பிரித்தானிய ஸ்ரீலங்கா தூதரக வாசற் கதவுகள் மூடப்பட்டு உள்ளிருப்பவர்களுக்கு பிரித்தானிய பொலீசார் பாதுகாப்பு வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. தமிழீழ தேசிய கொடிகளை கைகளில் ஏந்திய மக்கள் “தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் “ “பிரிகேடியர் பிரியங்க பெர்னெண்டோ ஒரு போர் குற்றவாளி “ “பிரித்தானிய அரசே பரியங்க பெர்னாண்டோவை நாடு கடத்து “ ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு சென்ற மக்கள் மாலை  ஐந்து மணியளவில் பொதுநலவாய நாடுகள் அலுவலக முன்றலை சென்றடைந்தனர்.அமைப்புகள் சார்ந்த சிற்றுரைகளுடன் தமிழீழம் கிடைக்கும் வரை பயணிப்போம் என்ற உறுதிமொழியோடு கண்டணப்பேரணி நிறைவு பெற்றது.

SHARE