ஆறா வடு – பொ.கருணாகரமூர்த்தி

சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் நாவலைப்படிக்கும்வரையில் மேற்கொண்டு பிரதி பற்றிய விமர்சனங்களைப் படிப்பதில்லை என்று இருந்தேன். என்இயல்பான மெத்தனத்தால் இப்போதுதான் நாவல் எனக்குக் கிடைத்தது. (நான் கேட்டதால் சயந்தனே எனக்கொருபிரதியை அனுப்பிவைத்தார்.) என் எதிர்பார்ப்பும்,…

ஆறாவடு, ரஃபேல் உரை – காணொளி

04 மார்ச் 2012 அன்று கனடா செல்வச்சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற “ஆறாவடு”  நாவல் விமர்சன அரங்கில்,  ரஃபேல் ஆற்றிய விமர்சன உரையின் முழுமையான காணொளி வடிவம். நிகழ்விற்கு  எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் தலைமையேற்றிருந்தார். Audio Quality: Good – Video Quality: Poor

ஆறா வடு – ரமணீதரன் கந்தையா

1. புலிசார்பு, சிங்கம் சாய்வு என்றில்லாமல் எல்லாவற்றையும் நுள்ளியிருக்கிற புதினம்…. 2. எள்ளல் + துள்ளல் நடை [ஷோபா சக்தியிடம் இதே நளினமும் திறமையும் உண்டு; சொல்லப்போனால், முத்துலிங்கத்திடம் உண்டு (துள்ளல் தவிர்த்து… மயிலாப்பூர்மிடில்கிளாஸுக்கான வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்க்காத மசாலாவுடன்); யோகநாதன் முரளியிடம் உண்டு… ஆனால், ஷோபாசக்தி+யோ.கர்ணன் இடம்…

ஆறா வடு – சேயோன்

எந்த உலத்தில் இது விளைந்தது?’ என்று சேயோன் கேட்கிறான், சயந்தன் எழுதிய ஆறாவடு புதினத்தை வாசித்தபிறகு. மிக அற்புதமாக வந்திருக் கிறது இப்புனைவு. ஈழத்தமிழத்தேசிய அரசியல் பற்றிய புதினங்கள் ஒரு கைவிரல்களுக்குள் மடிபடக்கூடியன. மு.தளையசிங்கத்தின் ஒரு தனி வீடு, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர் உலகம், ஷோபா சக்தியின்…

ஆறா வடு – த.அரவிந்தன்

ஆறா வடு – படித்தேன். நாவல் அழுத்தமாக வந்திருக்கிறது. இந்த நாவலில் வரும் அமுதன் பாத்திரத்தை நீங்கள் என்றே கருதி படித்து முடித்தேன். தீபம் உரையாடலைப் பார்த்தபோதுதான் நீங்கள் இல்லை என்று தெரிந்தது. முன் முடிவுகளோடு புனையப்பட்ட ஒன்றாக இந்த நாவல் அமையாதது சிறப்பு. புலிகள் மீதான, இந்திய…

ஆறா வடு – அ.முத்துலிங்கம்

அன்புள்ள சயந்தனுக்கு, வணக்கம். உங்கள் ’ஆறாவடு’ நாவலை வாசித்து இன்புற்றேன். ஓர் இரவிலே படித்து முடித்துவிட்டு உடனேயே எழுதுகிறேன். உங்கள் முதல் நாவலே இப்படி அமைந்திருப்பதால் இனி வரும் நாவல்கள் எல்லாம் இன்னும் சிறப்பாக அ்மையும் என எதிர்பார்க்கலாம். நாவலிலே eve teasing பகுதியும் அதன் தண்டனையும் வந்த…

ஆறா வடு – கரு.ஆறுமுகத்தமிழன்

ஆறாவடு (புனைவு), சயந்தன், தமிழினி வெளியீடு ஒவ்வொரு நாளும் கண்ணுக்கு முன்னால் நடனமாடிக் கெக்கலி காட்டுகிற சாவை முறியடிப்பதற்கு வாழ்வையே விலையாகக் கொடுக்கும் கதை ஆறாவடு. தொடர்ந்து போருக்கு மத்தியில் வாழும் புலி ஒருவன், சண்டையில் கால் இழந்ததால் அரசியல் பிரிவுக்கு அனுப்பப்படுகிறான். அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக விடப்பட்ட போர்…

ஆறா வடு – அருண்மொழி வர்மன்

நண்பர் சயந்தனின் ஆறாவடு நாவலை ஒரே நாவலில் வாசித்து முடித்தேன்.  எனக்குத் தெரிந்து எமது தலைமுறையச் சேர்ந்த ஈழத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து வந்திருக்கும் முதலாவது நாவல்.  நான் வாழ்ந்த சூழல், நாட்களை மீளவும் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கின்ற நாவல்.  எனக்கு மிகவும் பிடித்தும் இருக்கின்றது, வாழ்த்துக்கள் புத்தகத்தின் பக்கங்கள் சற்றே…

ஆறா வடு – ரமேஸ் ஸ்டீபன்

சயந்தனின் “ஆறாவடு” நாவல் விமர்சனக் கூட்டம் இன்று நடைபெற்றது. முரளியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு மண்டபம் நிறைந்த மக்கள் வருகை தந்திருந்தார்கள். (மண்டபம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பெரிய மண்டபம் இல்லை.) என்.மகாலிங்கம் தலமைதாங்கி இருந்தார். மயூ மனோ, ராபேஃல் மற்றும் இப் புத்தகம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில்…

ஆறா வடு – நந்தா கந்தசாமி

சாரலின் ஆரம்ப காலங்களில் இருந்தே தனித் தன்மையான  எள்ளலுடன் கூடிய சயந்தனின் எழுத்துகளுடன்  எனக்கு பரீட்சயம் உண்டு, சயந்தன் ஒரு நல்ல  சிறுகதை சொல்லி. சயந்தனின் ஏற்கனவேயான  அறிமுகம் ஆறாவடு நாவலை வாசிக்க தூண்டியது.கனடாவில்  வெளியீடு நடக்கும் என அறிவிப்பு வராத ஒரு  தரணத்தில் இந்தியாவில் இருந்து  அந்த…