அன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும் (Leicester, UK)

0

அன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும் இன்று பிரித்தானியாவில் இரண்டு இடங்களில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டத்துக்கான நிகழ்வு Thumaston Community Social Association,
Silverdale Drive,
Thurmaston,
Leicester, LE4 8NJ ல் அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் ஈகைச்சுடரினை stoke on tent நகரத்திலிருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்ட 1991ல் ஆனையிறவு சமரில் வீரகாவியமான வேதா அவர்களின் சகோதரி கலா வசந்தன் ஏற்றிவைத்தார். அதைத்தொடர்ந்து பூபதி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு முல்லைத்தீவு படைத்தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான மாவீரர் கப்டன் பழனிமுத்து அவர்களின் சகோதரன் திரு ஜோன்சன் அவர்கள் அணிவித்தார். தொடர்ந்து இடம்பெற்ற மலரஞ்சலி தீபஞ்சலிகளைத்தொடர்ந்து அன்னை பூபதி நினைவுக் கவியரங்கம் இடம்பெற்றது. கவியரங்கில் திரு ஸ்டாலின், Stoke on Trent தமிழர் நலன்புரிச் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு அற்புதன், திரு மனோகரன் ஆகியவர்கள் பங்கெடுத்துச் சிறப்பித்தனர். தமிழர் தாரக ஒலியுடன் நிறைவுக்கு வந்த நிகழ்வு நம்புங்கள் தமிழீழம் நாளை மலரும் என்ற பாடலுடன் முழுமை பெற்றது.

SHARE