ஒட்டுக் கேட்கலாம் வாங்க..

இன்னுமொரு உரையாடல் ஒலிப்பதிவு இது. இள வயது நினைவுகள் குறித்து நானும் சோமிதரனும் பேசியிருக்கின்….. ok.. அலட்டியிருக்கின்றோம். அனுபவங்களைப் பேசுதலில் கூட பதின்ம வயது அனுபவங்கள் தான் பெரும்பாலும் பேசப்படுகின்றன. அதனால் அதற்கும் முந்திய குழந்தைப் பராயத்து நினைவுகளைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கின்றோம். (எங்கடை பதின்ம அனுபவங்களை பப்ளிக்கில சொல்வதில நிறைய சங்கடங்கள் இருக்கின்றன என்பது வேறு விடயம்.)

ஒலிப்பதிவுகளை ஒரு போதும் 10 நிமிடங்களுக்கு மேல் அனுமதிப்பதில்லையென்பதில் உறுதியாக இருப்பதனாலும் வலைப்பதிவில் கேட்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் உருப்படியான வேறு வேலைகளும் இருக்கின்றன என்பதனாலும் அதற்கேற்ப வெட்டிக் கொத்தி தொகுக்கும் போது சில வேளைகளில் தொடர்ச்சித் தன்மை இல்லாது போகலாம். ஒவ்வொரு தடவையும் பயனுள்ள வகையில் ஏதாவது பேச வேண்டும் என நினைப்பது உண்டு.. என்ன செய்ய.. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்….

28 Comments

  1. நல்லா செய்திருக்கிறியள்.
    பதுங்கு குழி எங்கட வீட்டை வெட்டி மரம் தறிச்சு போட்டு மூடின அண்டைக்கு தான் இந்தியன் ஆமி பிளேனால சாப்பாடு போட்டது. சாப்பாடு போட்ட பிளேனுக்கு தான் நானும் முதல் முதல் பதுங்கு குழிக்க ஒளிச்சது. அத நினைச்சா இப்பவும் சிரிப்பு தான்.
    நீங்களும் அதுக்கு தான் ஒளிச்சிருக்கிறியள் 🙂

  2. நல்லா செய்திருக்கிறியள்.
    பதுங்கு குழி எங்கட வீட்டை வெட்டி மரம் தறிச்சு போட்டு மூடின அண்டைக்கு தான் இந்தியன் ஆமி பிளேனால சாப்பாடு போட்டது. சாப்பாடு போட்ட பிளேனுக்கு தான் நானும் முதல் முதல் பதுங்கு குழிக்க ஒளிச்சது. அத நினைச்சா இப்பவும் சிரிப்பு தான்.
    நீங்களும் அதுக்கு தான் ஒளிச்சிருக்கிறியள் 🙂

  3. சிரிச்சு கண்ணில தண்ணியே வந்திட்டுது.

    சன்னஞ் சேத்தது பற்றி ஞாபகப் படுத்திப் போட்டிங்களடாப்பா!! :O\

  4. சிரிச்சு கண்ணில தண்ணியே வந்திட்டுது.

    சன்னஞ் சேத்தது பற்றி ஞாபகப் படுத்திப் போட்டிங்களடாப்பா!! :O\

  5. சயந்தன்

    சிவராத்திரிக் கதை நீர் முந்திப் பதிவிலையும் தந்தது, வயசு போனா உப்பிடித்தான் 😉

    //`மழை` ஷ்ரேயா(Shreya) said…
    சன்னஞ் சேத்தது பற்றி ஞாபகப் படுத்திப் போட்டிங்களடாப்பா!! :O\ //

    என்ன வாடா போடா எண்டு மரியாதை இல்லாமை?

  6. சயந்தன்

  7. அருமையான பதிவு. ரசித்தேன்.

  8. அருமையான பதிவு. ரசித்தேன்.

  9. plane, helicopter, கப்பல், இராணுவம், shell – ஒரு தலைமுறைக்கே இப்படித் தான் இளமை நினைவா 🙁

    எதிர்ப்பார்த்த அளவு comedyஆ இல்லை..ஒரு வேளை பதின்ம அனுபவங்களைப் பேசினா கூட comdeyஆ இருக்குமோ ;)?

  10. plane, helicopter, கப்பல், இராணுவம், shell – ஒரு தலைமுறைக்கே இப்படித் தான் இளமை நினைவா 🙁

    எதிர்ப்பார்த்த அளவு comedyஆ இல்லை..ஒரு வேளை பதின்ம அனுபவங்களைப் பேசினா கூட comdeyஆ இருக்குமோ ;)?

  11. Ok.. நீங்க சொல்லச் சொன்னது போலவே இது ஒரு மொக்கைப் பதிவு.

  12. Ok.. நீங்க சொல்லச் சொன்னது போலவே இது ஒரு மொக்கைப் பதிவு.

  13. விஜெ சந்திரன்.. அப்போ ரெண்டுபேருமே ஒரே நேரத்தில பதுங்கு குழிக்குள்ளை கிடந்திருக்கிறம். கானா பிரபா அங்கிள்.. 18 வயசும் 19 வயசும் நிறைஞ்ச பொடியங்களை வாடா போடா என்று கூப்பிடுறதில என்ன பிழை.. நீங்க தாராளமா கூப்பிடுங்கோ அன்ரி. ரவிசங்கர் ஒரு வேளை துவக்கு ஆமி பிளேன் என்பதை கேட்டு ரொம்ப பீல் பண்ணீட்டிங்களோ தெரியல்ல.. எண்டாலும்.. ஒரு கட்டமைப்புக்குள்ளை கொண்டு வரத் தான் வேணும். முதலில சிரிக்கிறதை குறைக்க வேணும். அடுத்தது கொஞ்சமெண்டாலும் தயார்ப்படுத்த வேணும்.

    //Ok.. நீங்க சொல்லச் சொன்னது போலவே இது ஒரு மொக்கைப் பதிவு.//

    அண்ணை.. ஒரு பேச்சுக்கு சொன்னால் உடனை உப்பிடிச் சொல்லுறதே.. உங்களுக்கு பகிடியும் விளங்காது வெற்றியும் விளங்காது.. போங்கோ.. :((

  14. விஜெ சந்திரன்.. அப்போ ரெண்டுபேருமே ஒரே நேரத்தில பதுங்கு குழிக்குள்ளை கிடந்திருக்கிறம். கானா பிரபா அங்கிள்.. 18 வயசும் 19 வயசும் நிறைஞ்ச பொடியங்களை வாடா போடா என்று கூப்பிடுறதில என்ன பிழை.. நீங்க தாராளமா கூப்பிடுங்கோ அன்ரி. ரவிசங்கர் ஒரு வேளை துவக்கு ஆமி பிளேன் என்பதை கேட்டு ரொம்ப பீல் பண்ணீட்டிங்களோ தெரியல்ல.. எண்டாலும்.. ஒரு கட்டமைப்புக்குள்ளை கொண்டு வரத் தான் வேணும். முதலில சிரிக்கிறதை குறைக்க வேணும். அடுத்தது கொஞ்சமெண்டாலும் தயார்ப்படுத்த வேணும்.

    //Ok.. நீங்க சொல்லச் சொன்னது போலவே இது ஒரு மொக்கைப் பதிவு.//

    அண்ணை.. ஒரு பேச்சுக்கு சொன்னால் உடனை உப்பிடிச் சொல்லுறதே.. உங்களுக்கு பகிடியும் விளங்காது வெற்றியும் விளங்காது.. போங்கோ.. :((

  15. சிரிப்பை நீங்கள் குறைக்கலாம் என்று நினைக்கிறேன் அவை உங்களின் தொகுப்பின் இனிமையை குறைப்பதாக கருதுகிறேன் ஒவ்வொரு காமெடியிலும் காமெடியர்கள் சிரித்தால் எப்படியிருக்கும் பொடா வெண்ணை யென்று துரத்திவிடாதா திரையுலகம் ஆனாலும் வலைப்பதிவு வித்தியாசமானதே அவர்களை தட்டிக் கொடுக்கும்
    மற்றப்படி நல்ல கலந்துரையாடல் எங்களுக்கு அந்த நேரம் ஸ்பெசல் கவனிப்பு பாருங்கே ஹெலிகப்டரால் வல்வெட்டித்துறைதானே??

  16. சிரிப்பை நீங்கள் குறைக்கலாம் என்று நினைக்கிறேன் அவை உங்களின் தொகுப்பின் இனிமையை குறைப்பதாக கருதுகிறேன் ஒவ்வொரு காமெடியிலும் காமெடியர்கள் சிரித்தால் எப்படியிருக்கும் பொடா வெண்ணை யென்று துரத்திவிடாதா திரையுலகம் ஆனாலும் வலைப்பதிவு வித்தியாசமானதே அவர்களை தட்டிக் கொடுக்கும்
    மற்றப்படி நல்ல கலந்துரையாடல் எங்களுக்கு அந்த நேரம் ஸ்பெசல் கவனிப்பு பாருங்கே ஹெலிகப்டரால் வல்வெட்டித்துறைதானே??

  17. //plane, helicopter, கப்பல், இராணுவம், shell – ஒரு தலைமுறைக்கே இப்படித் தான் இளமை நினைவா :(//

    இதில் சொல்லப்பட்ட சம்பவம் 86-87, இப்ப 2007, இன்னும் இவை )plane, helicopter, கப்பல், இராணுவம், shell – ) தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது 🙁 ஒரு தலைமுறையல்ல ரவி சங்கர்

  18. //plane, helicopter, கப்பல், இராணுவம், shell – ஒரு தலைமுறைக்கே இப்படித் தான் இளமை நினைவா :(//

    இதில் சொல்லப்பட்ட சம்பவம் 86-87, இப்ப 2007, இன்னும் இவை )plane, helicopter, கப்பல், இராணுவம், shell – ) தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது 🙁 ஒரு தலைமுறையல்ல ரவி சங்கர்

  19. பதுங்கு குழி நாங்களும் வெட்டி வைச்சிருந்தனாங்கள். ஆனா இரவில அதுக்குள்ள போகப் பயம். மழை வந்தாலும் அதுக்குள்ள தண்ணி நிக்கிறதால போறேல. நானும் அம்மாவும் தான் தனிய அப்ப இருந்தனாங்கள். செல்லடிச்சா உடன புகைகூட்டுக்குள்ள தான் போய் பதுங்கி இருப்பம்.அதுக்கு முன்னுக்கு மண் நிரப்பின உர பாக்குகள்-bag- வைச்சிருப்பம்.
    அதுக்குள்ளேயும் கன நேரம் குனிஞ்சு கொண்டிருக்கேலாது. இதயமெல்லாம் பயத்தில படபடவெண்டு அடிக்கும். இப்ப கூட ஹெலிக் கொப்ரர் மேலால போன ஒருவித பயமாயிருக்கும். அப்போதய தாக்கம் இப்பவுமிருக்கு.

  20. பதுங்கு குழி நாங்களும் வெட்டி வைச்சிருந்தனாங்கள். ஆனா இரவில அதுக்குள்ள போகப் பயம். மழை வந்தாலும் அதுக்குள்ள தண்ணி நிக்கிறதால போறேல. நானும் அம்மாவும் தான் தனிய அப்ப இருந்தனாங்கள். செல்லடிச்சா உடன புகைகூட்டுக்குள்ள தான் போய் பதுங்கி இருப்பம்.அதுக்கு முன்னுக்கு மண் நிரப்பின உர பாக்குகள்-bag- வைச்சிருப்பம்.
    அதுக்குள்ளேயும் கன நேரம் குனிஞ்சு கொண்டிருக்கேலாது. இதயமெல்லாம் பயத்தில படபடவெண்டு அடிக்கும். இப்ப கூட ஹெலிக் கொப்ரர் மேலால போன ஒருவித பயமாயிருக்கும். அப்போதய தாக்கம் இப்பவுமிருக்கு.

  21. ரவிசங்கர் said…
    plane, helicopter, கப்பல், இராணுவம், shell – ஒரு தலைமுறைக்கே இப்படித் தான் இளமை நினைவா 🙁

    மரணத்துள் வாழ்தல் – யாழ்ப்பாண நாட்குறிப்புகள்

    எதிர்ப்பார்த்த அளவு comedyஆ இல்லை..ஒரு வேளை பதின்ம அனுபவங்களைப் பேசினா கூட comdeyஆ இருக்குமோ ;)?

    ????????????

  22. உதென்ன வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளம் ஏத்துறீங்கள் 2 பேரும்….உப்பிடி எப்பவும் லெவலடிச்சுக்கொண்டிருந்திங்கள் எண்டால் அப்புறம் நானும் குரல்பதிவு போடவேண்டி வந்திடும் பிறகு தாங்க மாட்டிங்கள் சொல்லிட்டன்!

  23. உங்களுக்கு வேணும். பொடியளா.. அப்பவும் கத்தி கத்தி சொன்னனான்.. ஏதும் பிரியோசனமா செய்யுங்கோ எண்டு.. கேட்டியளே.. இப்ப பாருங்கோ உங்களுக்கு வந்த நிலைமையை.. பித்தர் போங்கடா வெண்ணையள் எண்டு சொல்லாமல் சொல்லிட்டார். அதை விட நீங்கள் வெறுமை அலட்டுறியள்.. என்று சிநேகிதி அங்கை கிலிசை கெடுத்துறா.. நீங்கள் திருந்த மாட்டியளடா.. என்னமோ போங்கோ.

  24. நான் அலட்டல என்று சொல்றதுக்காக உங்களை அலட்டினது சொல்லிட்டன் போல கிடக்கு அதுக்காக ஒருத்தர் என்னை அக்காவாக்கி கடைசில அம்மா என்றிட்டார்:-)))

    சரி நீங்கள் அழாதயுங்கோ…நீங்கள் அலட்டினதுலயும் அர்த்தம் இருக்கெல்லோ”-))

    \\அதை விட நீங்கள் வெறுமை அலட்டுறியள்.. என்று சிநேகிதி அங்கை கிலிசை கெடுத்துறா.. நீங்கள் திருந்த மாட்டியளடா.. என்னமோ போங்கோ.
    \\
    ayooo ithu yaaru puthusa erila nerupila ennaya oothurathu….murugesar ungaluku vera velai ilayo??
    annaimaarthan enaku valikaadi…athilaum 2 pear en kurala keedu payanthu poyurukiram endu oruthar msn laum oruthar nerilaum solidinam enda kavaila naan irukiran ipa parthu murugesarum eethi vidurar. :-((((

  25. நன்றி நண்பர்களே,
    சகலரின் வேண்டுகோளுகிணங்கவும் இனி பயனுள்ள விடைய்டங்களைப் பேசுவதென்ற முடிவு பரிசீலிக்கப் படுகிறது.
    /2 பேரும்….உப்பிடி எப்பவும் லெவலடிச்சுக்கொண்டிருந்திங்கள் எண்டால் அப்புறம் நானும் குரல்பதிவு போடவேண்டி வந்திடும் பிறகு தாங்க மாட்டிங்கள் சொல்லிட்டன்! /

    !!!!!!! வாழ்த்துக்கள்

  26. சயந்தா!
    விளையாட்டுப் போட்டியை விடுமுறை நாள் என நினைப்பது ;நான் தான் என்றிருந்தால்;நீங்களும்
    இப்படியா??
    நடக்கட்டும்.

  27. நான்தான், ஆர்வம், ஓடைகள் – ஒன்னுக்கும் இணைப்பைக் காணுமே? இல்லை, இது போன்ற ஒரு பதிவை ஓட்டும் உள்குத்தா 😉

  28. சோமியைத் தேடுறம்.. அவரின் குரலைக் காணாமல் தூக்கம் வருகுதில்லை.. 🙁

Comments are closed.