என்ன செய்ய போகிறது இந்தியா?

By சினிமா

குமுதம் றிப்போட்டரில் சோலை என்பவர் எழுதியிருந்த அந்த முதல் கட்டுரையை வாசித்த போது அட என்ற உணர்ச்சியெழுந்தது. நக்கீரன், நெற்றிக்கண், ராணி இவ்வாறான பத்திரிகைகளில் அக் கட்டுரை வந்திருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆயினும் இதுவரை குமுதத்தில் கண்டறியாத விடயம் அது!

மகிந்த அரசினை மிக கண்டித்தும், நையாண்டி செய்தும், விடுதலைப் புலிகளை உச்சத்தில் வைத்தும் எழுதப்பட்டிருந்தது அக்கட்டுரை. அதனை எழுதியவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலோசகராக பணியாற்றியவர் என யாரோ சொன்னார்கள். அக் கட்டுரையின் ஒரு இடத்தில் புலிகளின் மீதான இராணுவ தளபதியின் எச்சரிக்கையை ‘சூரியனைப் பார்த்து பனித்துளிகள் எச்சரிக்கின்றன என்கிறார் கட்டுரையாளர்.

அக்கட்டுரையின் கருத்துக்கள் குமுதத்தின் கருத்துக்கள் இல்லைத்தான் என்றாலும் அது குமுதத்தினால் கேட்டு வாங்கி பிரசுரிக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதுகிறேன். ஏனெனில் இரண்டாவது முறையாகவும் குமுதம் றிப்போட்டரில் அதே கட்டுரையாசிரியர் எழுதிய கட்டுரை வெளிவந்திருக்கிறது. மகிந்தாவின் இந்திய விஜயம், அதன் தோல்வி குறித்து அலசுகிறது அக் கட்டுரை.

அண்மையில் சு.ப.வீயின் செவ்வியொன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். ‘உங்களை எதிர்த்து எழுதியவர்கள் எல்லாம் இப்போது உங்கள் உண்மையான போராட்டத்தினை உணரத் தொடங்கி விட்டார்கள் என அவர் சொல்கிறார்.

அடுத்தடுத்ததாக சில ஈழ ஆதரவு மாநாடுகள் தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. வை.கோ உள்ளிட்ட தலைவர்கள் கொஞ்சம் மிகைபடக் கருத்துக்கள் தெரிவித்தாலும் ஈழ ஆதரவு அலையொன்று அங்கு மெதுவாக உருவாகியிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. பெரிதாக பொங்கிப் பிரவாகிக்கும் அளவுக்கு ஈழத் தமிழர் ஆதரவு உருவாகவில்லையென்தே உண்மையாயினும் மக்களின் கருத்துலகில் மகிந்தா அரசுக்கு எதிரான சிந்தனைகள் நிறைந்திருக்கின்றன என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

அந்தச் சிந்தனைகளே முதல்வர் ஜெயலலிதாவின் மகிந்தவுடனான சந்திப்பினை ரத்துச் செய்திருக்கின்றன நம்பப்படுகிறது. என்னதான் வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தேர்தல் நெருங்குகின்ற சமயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துச் செயற்படுவதை ஜெயலலிதா விரும்பாததன் வெளிப்பாடாகவே சந்திப்பு ரத்தாயிருக்கிறது.

ஒருவேளை தனக்குப் பாதகமில்லாத ஒரு சூழ்நிலையில் ஜெயலலிதா மகிந்தாவை சந்திக்கக் கூடும். ஆயினும் அவர் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதே இங்கே நோக்கத்தக்கது.

தலிரவும் மகிந்தாவின் இந்திய விஜயம் பாரியளவு வெற்றியைத்தரவில்லை என்றே கூறப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்ட இராணுவ ஒப்பந்தம் நிறைவேற்றப் படவில்லை. புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கும் படி ஆலோசனையே கூறப்பட்டுள்ளது. இப் பேச்சுவார்த்தையில் இந்தியாவையும் உள்ளிழுக்கும் மகிந்தாவின் நோக்கம் நிறைவேறவில்லை.

குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஒரு விடயம் என்ன என்றால், அரைகுறை அதிகாரங்களுடன் திணிக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்திலேயே சமஷ்டி ஆட்சி முறை குறித்து சொல்லப்பட்டிருக்க மகிந்தாவோ ஒற்றையாட்சி முறை மூலம் மட்டுமே தீர்வு எனச் சொல்லுகையில் இந்தியாவின் ஆசி அவருக்கு கிடைக்குமா என்பதே.

இதற்கிடையில் இலங்கையில் உத்தியோகப் பற்றற்ற யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரே இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கின்றதா என கேள்வியெழுப்பும் நிலைவரை வந்தாகி விட்டது.

இராணுவத்தினரின் பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் அதற்கான பதிலடிகளும் அங்கே தினமும் நடைபெறுகின்றன. இராணுவத்தால் கொல்லப்படும் அப்பாவி மக்களின் ஒரு உயிருக்கு 10 இராணுவத்தினரின் உயிரினைப் பறிப்போம் என புலிகள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில் மீண்டும் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை செல்ல இருக்கிறார். அங்கு அவர் மகிந்தாவையும் புலிகளின் தலைவரையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அன்ரன் பாலசிங்கம் அவர்களும் வன்னி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. பேச்சுக்களை நோர்வேயில் நடாத்த அரசு சம்மதிப்பின் சமாதானம் அடுத்த படிக்கு ஏறி பின்னர் இழுபடும். இல்லையெனின் இப்பொழுதே முறியும்.

பேச்சுக்கள் இவ்வாறு இழுபடுவதை புலிகள் விரும்பவில்லை. பல விட்டுக் கொடுப்புக்களை செய்தும் உலக நாடெதுவும் சமாதானத்தின் உண்மையான எதிரி யாரென்பதை புரிந்து கொள்ளவில்லையாதலால் இனியும் நற்பெயரை எதிர்பார்த்து நிற்பதில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள் போல தெரிகிறது. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகள் மீது தடை விதிக்க ஆயத்தமாக இருக்கின்ற இச் சூழலிலும் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல் தமது இலக்கிற்கான நேரடிச் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதானது, எவர் தடை செய்தாலும் எமக்கென்ன? எங்கள் பாதையில் செல்வோம் என்னும் நிலையில் அவர்கள் நிற்பதனை உணர்த்துகிறது.

புலிகள் மீண்டும் யுத்தத்தினை ஆரம்பித்தால் அவர்கள் பலம் பொருந்திய இராணுவம் ஒன்றினை எதிர் கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இது அமெரிக்கா இலங்கை இராணுவத்திற்கு இராணுவ உதவிகள் வழங்க தயாராயுள்ளது என்பதனை உணர்த்துகிறது. வழங்கட்டும்! என்னுடைய கேள்வியெல்லாம் அமெரிக்கா ஆயுதம் வழங்கி தமிழனை அழிக்க நினைக்கிறது. அதெப்படி முடியும்? நான் ஒருவன் இங்கு ‘பெரியண்ணன்’ இருக்கின்றேன். விட்டுவிடுவேனா? நான் தான் ஆயுதம் வழங்கி தமிழரை அழிப்பேன் என இந்தியா சிந்திக்குமா என்பதே!

Last modified: January 16, 2006

22 Responses to " என்ன செய்ய போகிறது இந்தியா? "

  1. Anonymous says:

    எழுதிக்கொள்வது: உனக்கு வேறு வேலை இல்லையா

    உனக்கு வேறு வேலை இல்லையா

    20.12 16.1.2006

  2. Anonymous says:

    எழுதிக்கொள்வது: உனக்கு வேறு வேலை இல்லையா

    உனக்கு வேறு வேலை இல்லையா

    20.12 16.1.2006

  3. கொண்டோடி says:

    //இராணுவத்தால் கொல்லப்படும் அப்பாவி மக்களின் ஒரு உயிருக்கு 10 இராணுவத்தினரின் உயிரினைப் பறிப்போம் என புலிகள் தெரிவிக்கிறார்கள்.//

    எப்போது?

  4. கொண்டோடி says:

    //இராணுவத்தால் கொல்லப்படும் அப்பாவி மக்களின் ஒரு உயிருக்கு 10 இராணுவத்தினரின் உயிரினைப் பறிப்போம் என புலிகள் தெரிவிக்கிறார்கள்.//

    எப்போது?

  5. சயந்தன் says:

    நல்லது கொண்டோடி! பொங்கியெழும் மக்கள் படைதான் அவ்வாறு தெரிவித்திருந்தது. புலிகள் இல்லை! இப்போது தங்களுக்கு திருப்தி தானே?

  6. சயந்தன் says:

    நல்லது கொண்டோடி! பொங்கியெழும் மக்கள் படைதான் அவ்வாறு தெரிவித்திருந்தது. புலிகள் இல்லை! இப்போது தங்களுக்கு திருப்தி தானே?

  7. கொண்டோடி says:

    எனக்குத் திருப்தி இருக்கட்டும்.
    இதைச்சொல்லிவிட்டு பதிவில் எதுவும் செய்யவில்லையே. அப்படியேதானே இருக்கிறது?

  8. கொண்டோடி says:

    எனக்குத் திருப்தி இருக்கட்டும்.
    இதைச்சொல்லிவிட்டு பதிவில் எதுவும் செய்யவில்லையே. அப்படியேதானே இருக்கிறது?

  9. Anonymous says:

    ஓஹோ.. பொங்கும் மக்கள் படை வேறு புலிப்படை வேறா? நான் இரண்டும் ஒன்றென்றுதானே நினைத்திருந்தேன்..நடக்கட்டும்..நடக்கட்டும்

  10. Anonymous says:

    ஓஹோ.. பொங்கும் மக்கள் படை வேறு புலிப்படை வேறா? நான் இரண்டும் ஒன்றென்றுதானே நினைத்திருந்தேன்..நடக்கட்டும்..நடக்கட்டும்

  11. Anonymous says:

    எழுதிக்கொள்வது: DO

    எது எப்பபிடியோ இந்த அடிதான் கடசி அடியாய் இருக்கும்!!!!

    1.6 17.1.2006

  12. Anonymous says:

    எழுதிக்கொள்வது: DO

    எது எப்பபிடியோ இந்த அடிதான் கடசி அடியாய் இருக்கும்!!!!

    1.6 17.1.2006

  13. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Mahadevan

    இந்தியா எப்போதும் தன்னை தமிழ் மக்களின் எதிரியாக உறுதிபட நடந்துவந்திருக்கிறது. இந்திய ஒருமைப்பாட்டைக் கருத்திற்கொண்டுதான் இந்த நிலைப்பாடென்று இந்திய கருதிக்கொண்டால். இந்தியாவை உடைத்துத் தான் ஈழம் அமையவேண்டும் என்கிற ஒரு முடிவுக்கு வரவேண்டிவரும். ஈழம் அமைவதற்கு இந்தியாவின் உடைவு தான் முன்நிபந்தனை என்றால் அதை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்.

    16.38 26.1.2006

  14. Anonymous says:

  15. Anonymous says:

    what ever u tell we are indian.india is our country

  16. Anonymous says:

    what ever u tell we are indian.india is our country

  17. Samudra says:

    //இந்தியாவை உடைத்துத் தான் ஈழம் அமையவேண்டும் என்கிற ஒரு முடிவுக்கு வரவேண்டிவரும். ஈழம் அமைவதற்கு இந்தியாவின் உடைவு தான் முன்நிபந்தனை என்றால் அதை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும்.
    //

    புலிகளின் Fuhrer மிக சிறந்த Strategist.உங்களை பொல அல்ல!

  18. Samudra says:

  19. Karaivasan says:

    There is no India before British
    invasion. There were FIFTY Sovereign Kingdom in the Indian sub-continent.British administerd
    India along with 3 or 4 sovereign
    Kingdom.Like Jinnah if Tamils asked
    Tamil Nadu as Independent Country
    British would have granted at that time.But Tamils never had that foresight.In another fifty years India will disintegrate in to several sovereign states.

  20. Karaivasan says:

  21. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Thamilan

    எனது தமிழகச் சகோதரர்களுக்கு நன்றி. உங்கள் தூதுவர் நிருபமா ரா கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது. மகிந்தவுக்கு நல்லாத்தான் ஆதரவு குடுக்கிறா.. ஏன் அவ ஒரு தமிழ் எதிரியா நடக்கிறா..?

    9.47 1.2.2006

  22. Anonymous says:

× Close