யாழ்ப்பாணத்தில நல்லூருக்கு கிட்டவாக இறுதிக்காலங்களில் நான் யாழ்ப்பாணத்திலிருந்த எங்கள் வீட்டுக்கு அண்மித்தாக கிட்டு மாமா பூங்கா இருந்தது.
எனக்கு சுப்பிரமணிய பூங்கா தெரியாது. விருத்தெரிய முதலே அது அழிந்து விட்டது. பூங்கா என்றால் இப்படி இப்படி இருக்குமாம் என்று கேள்விப்பட்டதனை முதலில் நேரடியாக பார்த்தது இங்கு தான்.
அப்பிடியென்ன பிரமாதம் உலகில் இல்லாத பிரமாதம் என யாரும் கேட்கலாம். அப்படி எதுவும் இல்லைத்தான். ஆனால் யுத்த காலத்தில் எங்கள் வயதொத்த சிறுவர்களின் மகிழ்வுக்கான தளமாக அது இருந்தது.
யாழ்ப்பாணம் சிங்கள இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்தப் பூங்கா, புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்டன. அதிலும் துயிலும் இல்லம் புல்டோசர் கொண்டு தூர்வாரப்பட்டது.
இம்முறை கிட்டு பூங்காவிற்கு சென்று நிறைய நேரம் உலாவித்திரிந்தேன். சிதைந்து போயிருந்தது பூங்கா…
Last modified: August 18, 2005
எழுதிக்கொள்வது: ShiyamSunthar
எத்தனை அழகாயிருந்தது இது? சுப்ரமணியம் பூங்கா கட்டப்படுவதாக அறிந்தேன்.
16.57 19.8.2005
எழுதிக்கொள்வது: ShiyamSunthar
எத்தனை அழகாயிருந்தது இது? சுப்ரமணியம் பூங்கா கட்டப்படுவதாக அறிந்தேன்.
16.57 19.8.2005
எழுதிக்கொள்வது: Seelan
எங்கை உங்கடை பயணத் தொடரை காணெல்ல. பாதியிலேயே நிறுத்தியாச்சா?
0.14 21.8.2005
எழுதிக்கொள்வது: Seelan
எங்கை உங்கடை பயணத் தொடரை காணெல்ல. பாதியிலேயே நிறுத்தியாச்சா?
0.14 21.8.2005