இந்தப்படம் என்ரை பிறந்தநாள் ஒண்டுக்கு எடுத்த படம். என்ன அமைதியா நல்ல பெடியனாய் இருக்கிறன் என்ன? ம்.. சொல்ல மறந்திட்டன். இந்தப் படம் எடுத்தண்டு தான் இந்தியா எங்களுக்கு சாப்பாடு போட்டது.
ஹி..ஹி.. இந்தப் படத்தை வைச்சு வசந்தன் ஒரு போட்டியே அறிவிச்சிருந்தவர். கனபேர் சரியா சொல்லியிருந்தவை. அதுக்கு காரணம் வசந்தன் என்ன படம் போட்டாலும் அது நானாய்த்தான் இருப்பன் எண்ட மாதிரி போட்டுது. ஆனா முதலில இந்தப்படத்தை பாத்த வசந்தனும் உது ஆரெண்டு தான் கேட்டவர். 96 இல வன்னியில முத்தயன் கட்டு அணைக்கட்டோரம் எடுத்த படம் இது. வடிவா இருக்கிறன் தானே!
2003 இல ஒரு நாள். வெளிய மழை பெய்து கொண்டிருந்தது. யன்னலைத்திறந்து விட்டுவிட்டு மழைச்சாரல் என்னில பட படுக்கிறதுக்கு எனக்கு சரியான விருப்பம். அப்பிடிப் படுத்திருந்தவனை தட்டி எழுப்பி ராகுலன் எடுத்த படம் இது. தலைகணியை விட மாட்டாங்கள்!