எங்கள் வீட்டு மரங்கள்

எல்லோரும் படம் காட்டுகிறார்கள்.

நாமும் ஏதும் காட்டலாம் என்றால் இது மெல்பேண் வானம், கடல், மற்றும் வானளாவும் கட்டடம், இது பூங்கா அது பூ என்று காட்டுவதற்கு நிறைய மினக்கெட வேண்டியுள்ளது.

சரி ஏதோ எங்களால் முடிந்தளவு சிக்கனமாக படம் காட்டலாம் என்ற எண்ணம்.

வசந்தன் தன் வீட்டின் உள்ளே இருக்கிற சாமான் சக்கட்டு எல்லாத்தையும் காண்பித்தார். நான் கொஞ்சம் வெளியே வந்திருக்கிறேன்.

இவை நான் மெல்பேணில் இருக்கின்ற வீட்டின் மரங்கள்.

Image hosted by Photobucket.com

மல்லிகையை போல மணக்கிற ஒரு மரம். முல்லையில்லை. பெரிய பந்தலாயிருந்தது. இப்ப ஒட்ட நறுக்கியிருக்கிறோம்.

Image hosted by Photobucket.com

மாதுளை மரம்.பழம் ஒண்டும் மரத்தில இல்லை. ஒருவேளை சீசன் முடிஞ்சிருக்குமோ?

Image hosted by Photobucket.com

வாழைமரங்கள் ஒரு கட்டத்துக்கு மேலை வளருதில்லை. குட்டி வாழையொன்று சில குட்டிகள் போட்டிருக்கு

Image hosted by Photobucket.com

அடுத்த வீட்டு தமிழர்கள் வளர்க்கும் கறிவேப்பிலை. வேலி தாண்டுகிறது. நாமும் கறிவேப்பிலை கடையில் வாங்குவதில்லை

Last modified: May 31, 2005

11 Responses to " எங்கள் வீட்டு மரங்கள் "

  1. Anonymous says:

    எழுதிக்கொள்வது: என்னத்த சொல்ல

    ஆரம்பிச்சிட்டாங்கப்பா!

    2.57 1.6.2005

  2. Anonymous says:

    எழுதிக்கொள்வது: maram

    undefined

    14.50 31.5.2005

  3. அப்டிப்போடு... says:

    கறிவேப்பிலையை எப்படி நட்டு வளர்ப்பதென்டு., அவியல்ட கேட்டு ஒருக்கா பதிவு போட்டியல் எண்டால், நல்லாயிருக்கும். அப்படியே இந்தப் புதினா., கொத்தமல்லி நடவு பத்தியும், தெரிஞ்சவுங்க சொல்விங்களே?

  4. Muthu says:

    சயந்தன்,
    போட்டோ எல்லாம் நல்லா இருக்கு.

    ///அடுத்த வீட்டு தமிழர்கள் வளர்க்கும் கறிவேப்பிலை. வேலி தாண்டுகிறது. நாமும் கறிவேப்பிலை கடையில் வாங்குவதில்லை///
    🙂 🙂 🙂

  5. சீலன் says:

    இது உண்மையிலேயே மெல்பேர்ணா? அல்லது யாழ்ப்பாணத்தில் உங்கள் ஊரோ?

  6. Anonymous says:

    என்னங்க.. ஆஸ்திரேலியா அப்பிடிங்கிற ஒரு லுக்கே இல்லையே.. சொந்த ஊர்ல இருக்கிற மாதிரி பீல் பண்ண ரொம்ப வசதியாயிருக்குமே..

  7. Anonymous says:

    எழுதிக்கொள்வது: வீ . எம்

    வந்துட்டாங்கய்யா ….வந்துட்டாங்க .. !! எப்பொடா ஆன் – சைட் ஆஃபர் கிடைக்குமுனு 5 வருசமா தேவுடு காத்த்ட்டு இருந்தா .. இப்படி அமெரிக்கா , மெல்ப்போர்ன் படத்தை போட்டு… நம்மல வெறுப்பேத்த…வந்துட்டாங்கய்யா ….வந்துட்டாங்க .. !!

    நல்ல புகைபடங்கள்! நன்றி !
    வீ . எம்
    http://arataiarangam.blogspot.com/

    18.26 1.6.2005

  8. வீ. எம் says:

    எழுதிக்கொள்வது: வீ . எம்

    வந்துட்டாங்கய்யா ….வந்துட்டாங்க .. !! எப்பொடா ஆன் – சைட் ஆஃபர் கிடைக்குமுனு 5 வருசமா தேவுடு காத்த்ட்டு இருந்தா .. இப்படி அமெரிக்கா , மெல்ப்போர்ன் படத்தை போட்டு… நம்மல வெறுப்பேத்த…வந்துட்டாங்கய்யா ….வந்துட்டாங்க .. !!

    நல்ல புகைபடங்கள்! நன்றி !
    வீ . எம்

  9. கொழுவி says:

    விரைவில் வருகிறது
    எங்கள் வீட்டுக் குப்பைத்தொட்டி
    பார்க்க தவறாதீர்கள்

  10. வசந்தன்(Vasanthan) says:

    அப்பிடிப்போடு!
    எங்கட கதைகூட ஓரளவு கைவருகிறதே உங்களுக்கு.
    சயந்தன்!
    நான் இன்னொருத்தருக்குப் போட்டியா ‘என் வீட்டுப் பொருட்கள்’ எண்டு படங்கள் போட, நீர் அதப்பாத்துத் தொடங்கீட்டீர். போதாததுக்கு மஸ்ட் டூவும் துவங்கிறன் எண்டு பயப்படுத்தியிருக்கிறார். எங்க போய் முடியப்போவுதோ தெரியேல.

  11. செல்லி says:

    சயந்தன்
    மெல்போனில் சமருக்குத்தான் எல்லாக் கண்டுகாலியும் களை கட்டும். ஆனா பிறிஸ்பேனில வருஷம் பூராவும் நல்லாத்தான் இருக்கும். ஏனெண்டா இங்கத்தைய காலநிலை அப்பிடி!

    கறிவேப்பிலை மரத்தைத் தான் நம்ப முடியவில்லை. சிலவேளை மலை வேம்பாயிருக்குமோ?

× Close