அஷேரா! பத்திரப்படுத்திய புத்தகம் – சவீதா சேந்தன்
அஷேரா… பெயரைக் கேட்டதும் ஏதோ சுவிட்சர்லாந்து பெண் தெய்வமோ? வரலாறு சம்பந்தப்பட்ட கதை என்றுதான் வாசிக்கத் தொடங்கினேன். அருள்குமரன்….எங்களில் ஒருவன்.. கூடவே 90களில் வாழ்ந்த யாழ்ப்பாணத்து இளைஞன்….நாவல் முழுவதும் அவனுடன் கூடவே பயணித்தேன்… அவன் அம்மா “ அப்பன் அம்மாவை பிழையாக நினைக்க கூடாதென்ற “ இடத்தில் நெஞ்சடைத்துப்போனேன்….