வந்தேன் வருவேன்

எழுதாமல் விட்டு மூண்டுமாசம் ஆகவில்லைத்தான் எண்டாலும், மெல்பேணில இருந்து வசந்தன் ‘எழுதும், எழுதும் இல்லாட்டி தூக்கிப் போடுவாங்கள்’ எண்டு பயப்பிடுத்திக் கொண்டிருந்தார். சரி.. நானும் தான் எழுதி நாளாச்சு எண்டதாலை இந்தப் பதிவு! எழுதிக் கொண்டு போகேக்கையே விளங்கிட்டுது. உது பெரிசா நீளும் எண்டு. அதுதான் தொடராக்கிப் போட்டன்….

போய் வருகின்றேன், நன்றி!

என் இனிய மெல்போண் நகரிலிருந்து விடை பெற்று சிட்னி நகர் குடி புகுகின்றேன். அதற்கென்ன ஒஸ்ரேலியாவில் இருக்கும் இரண்டு நகர்கள்தானே என இலகுவாக சொல்ல முடியாத படி, 1000 கிலோ மீற்றர்கள் இடைவெளியில் இருக்கின்றன இந்த இரண்டு நகரங்களும். காலநிலை மற்றும் சூழலியல் இவற்றிலும் இரண்டுக்கும் வேறு பாடுகள்…

கறிக் கடை – குறும்படம்

ஒஸ்ரேலிய – மெல்போண் – monash பல்கலைக்கழக மாணவர்கள் கறிக்கடை என்னும் குறும்படத்தை தயாரித்திருக்கிறார்கள். 9 நிமிடங்கள் வரை நீள்கின்ற இப்படத்தினை உங்கள் பார்வைக்கு இங்கே இடுகின்றேன். வலைப்பதிவில் பல குறும்பட ஜாம்பவான்களும் ஜாம்பவிகளும் இருக்கிறார்கள். அவர்கள் இப்படத்தினை பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என்றும் உங்கள் கருத்தில்…

நரகாசுரனுக்கு வீரவணக்கங்கள்!

5000 ஆண்டுகளுக்கு முன் திராவிட மண்ணுக்கு மேய்ப்போராக வந்த ஆரியர் திராவிட மண்ணைப் பறிப்பதற்காய் தொடர்ச்சியாகப் போரிட்டனர். போரிட்ட வேளை எதிர்த்த திராவிட தலைவர்களை அசுரராயும் தம்மை தேவர்களாயும் சித்தரித்தனர். தம் தலைவர்களை தெய்வங்களாக்கினர். அவற்றை கதைகளாகவும் புராணங்களாகவும் உருவாக்கினர். திராவிடருக்கு கொம்பு கடவாய்ப்பல் பெருத்த உடம்பு எல்லாம்…

இவர் யாருங்கோ..?

அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்தபோது எடுத்த படங்களின் தொகுப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் சிக்கியது இந்தப் படம்! யாழ்ப்பாணம் கோட்டையை அண்மித்தாக -பழைய சுப்ரமணிய பூங்காவிற்கு முன்பாக – இந்த சிலை இருக்கின்றது. யாரென்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா..? பாருங்கள்.. யுத்தத்தின் வடுக்களை தன்னால் முடிந்தளவு தாங்கி வைத்திருக்கின்றார்.