போய் வருகின்றேன், நன்றி!

By சினிமா

என் இனிய மெல்போண் நகரிலிருந்து விடை பெற்று சிட்னி நகர் குடி புகுகின்றேன். அதற்கென்ன ஒஸ்ரேலியாவில் இருக்கும் இரண்டு நகர்கள்தானே என இலகுவாக சொல்ல முடியாத படி, 1000 கிலோ மீற்றர்கள் இடைவெளியில் இருக்கின்றன இந்த இரண்டு நகரங்களும். காலநிலை மற்றும் சூழலியல் இவற்றிலும் இரண்டுக்கும் வேறு பாடுகள் இருக்கின்றன.

மெல்போணில் ஐரோப்பிய கலாசார தாக்கமும் சிட்னியில் அமெரிக்க கலாசார தாக்கமும் இருப்பதாக சொல்கின்றார்கள். காலநிலையில் மெல்போணின் குளிர் இந்த வருடம் Snow கொட்டுகின்ற அளவிற்கு அதிகமானது. சிட்னியில் சீதோஷ்ண நிலை சில சமயம் இலங்கையின் காலநிலையை நினைவு படுத்தும்.

சிட்னியில் சென்று தங்கியிருந்த காலங்களில் எல்லாம் நான் ஊரில் இருப்பது போன்ற ஒரு உணர்வினை பெற்றிருக்கின்றேன். ஒரு வேளை நான் அங்கு தங்கியிருந்த வீட்டுச் சூழல் அதற்கு காரணமாயிருக்கலாம்.

மெல்போணில் வந்து இறங்கிய போது, இருந்த தனிமைப் பயம் சிட்னி சென்று இறங்கும் போது இருக்கப் போவதில்லை என்னும் போது மகிழ்ச்சியாயிருக்கிறது.

மெல்போணில் இருந்த வரைக்கும், சுவாரசியமான நிறைய நினைவுகள் இருக்கின்றன. வலைப்பதிவு பற்றி யோசித்தால் நானும் வசந்தனும் ஏற்படுத்திய குழப்பங்கள் தான் நினைவில் வருகின்றன. என்ன காரணத்தினாலேயோ நானும் அவரும் ஒருவரே என்ற கருத்து உலவியதும் அதை நாம் ஏற்பது போலவும் ஏற்காதது போலவும் பல இடங்களில் விளையாடியமையை நினைத்தால் சிரிப்பாக வருகிறது.

வசந்தன்! தென்துருவ வலைப்பதிவர் சங்க தலைமையை, நான் கண்ணாக கட்டி வளர்த்த அவ் வமைப்பை, என் கண்ணையே உமது கையில் தந்துவிட்டு செல்கிறேன். நீங்கள் தான் இனி எல்லாம்! உமது நடவடிக்கைகள் சிட்னியில் இன்னொரு தலைமையை தொடங்க வழி வகுக்கக் கூடாது.

தனித்தியங்கும் ஆற்றல் தந்த மெல்போணுக்கு நன்றி,

கலகலப்பான நண்பர்களாக இருந்த வசந்தன், அருணன் முதலானோர்க்கு நன்றி,

எனது கல்வியை சிட்னிக்கு மாற்ற அனுமதி தந்த பள்ளிக்கூடத்துக்கு நன்றி,

நான் ஒழுங்கா வேலை செய்வதில்லை என கூறிக் கூறியே.. கடைசிவரை என்னை வேலை செய்ய அனுமதித்த, Petrol Station முதலாளிக்கு நன்றி.

நன்றி நண்பர்களே, சிட்னியில் இருந்து சந்திப்பேன். தாமதமாய் என்றாலும்…

Last modified: November 19, 2005

24 Responses to " போய் வருகின்றேன், நன்றி! "

  1. Anonymous says:

    எழுதிக்கொள்வது: satya

    சாரல் சிட்னில அடிக்க போவுதா, குட் குட்…வெக்கை தாங்கல இங்க…
    தங்கள் வரவு நல்வரவாகட்டும்!
    ஆமா சிட்னில எந்த school?

    22.11 19.11.2005

  2. Anonymous says:

    எழுதிக்கொள்வது: satya

    சாரல் சிட்னில அடிக்க போவுதா, குட் குட்…வெக்கை தாங்கல இங்க…
    தங்கள் வரவு நல்வரவாகட்டும்!
    ஆமா சிட்னில எந்த school?

    22.11 19.11.2005

  3. Kanags says:

    வருக வருகவென சிட்னி வரவேற்கின்றது.

  4. Kanags says:

    வருக வருகவென சிட்னி வரவேற்கின்றது.

  5. Anonymous says:

    எழுதிக்கொள்வது: 15C

    //சிட்னியில் சென்று தங்கியிருந்த காலங்களில் எல்லாம் நான் ஊரில் இருப்பது போன்ற ஒரு உணர்வினை பெற்றிருக்கின்றேன்//
    இரவு நேரத்தில 15⁰C பாகை கீழ இப்ப நிற்கிறமாதிரி தெரியுதே…

    14.16 19.11.2005

  6. Anonymous says:

    எழுதிக்கொள்வது: 15C

    //சிட்னியில் சென்று தங்கியிருந்த காலங்களில் எல்லாம் நான் ஊரில் இருப்பது போன்ற ஒரு உணர்வினை பெற்றிருக்கின்றேன்//
    இரவு நேரத்தில 15⁰C பாகை கீழ இப்ப நிற்கிறமாதிரி தெரியுதே…

    14.16 19.11.2005

  7. Anonymous says:

    //என்ன காரணத்தினாலேயோ நானும் அவரும் ஒருவரே என்ற கருத்து உலவியதும் அதை நாம் ஏற்பது போலவும் ஏற்காதது போலவும் பல இடங்களில் விளையாடியமையை நினைத்தால் சிரிப்பாக வருகிறது//

    அப்போ! நீங்க வேறு வேறு ஆட்களா.. 🙁

  8. Anonymous says:

    //என்ன காரணத்தினாலேயோ நானும் அவரும் ஒருவரே என்ற கருத்து உலவியதும் அதை நாம் ஏற்பது போலவும் ஏற்காதது போலவும் பல இடங்களில் விளையாடியமையை நினைத்தால் சிரிப்பாக வருகிறது//

    அப்போ! நீங்க வேறு வேறு ஆட்களா.. 🙁

  9. Anonymous says:

    Is this a North East split?
    Have you been Discriminated!

  10. Anonymous says:

    Is this a North East split?
    Have you been Discriminated!

  11. kirukan says:

    Naan Namburen….

    Vasanathanum, Sayanthanum Vera Vera Aatkal thaan…

    😉

  12. kirukan says:

    Naan Namburen….

    Vasanathanum, Sayanthanum Vera Vera Aatkal thaan…

    😉

  13. Anonymous says:

    AYA RASA
    NEEINKA ENNEE KAAIKUUSSUU POKAVUMMM BLOGILA VAINTHUU SOLLEEVEEINKAL POOOLA

  14. Anonymous says:

    AYA RASA
    NEEINKA ENNEE KAAIKUUSSUU POKAVUMMM BLOGILA VAINTHUU SOLLEEVEEINKAL POOOLA

  15. பபா... says:

    சுகமா சுகமா அமெரிக்க மாமா…

  16. பபா... says:

    சுகமா சுகமா அமெரிக்க மாமா…

  17. கொழுவி says:

    உடுப்பை புறப்பக்கமாப் போட்டுப் படமெடுக்கிறது ஒரு பாணிபோல.
    கலி முத்திப்போச்சு.

  18. கொழுவி says:

    உடுப்பை புறப்பக்கமாப் போட்டுப் படமெடுக்கிறது ஒரு பாணிபோல.
    கலி முத்திப்போச்சு.

  19. Anonymous says:

    போய், வருக!

  20. Anonymous says:

    போய், வருக!

  21. Anonymous says:

    எழுதிக்கொள்வது: முன்.

    தகவலுக்கு நன்றி!!!
    200 மேற்கட்ட எழுத்துருக்களை வேளியிட்டள்ளர்கள்!!!
    எல்லாம் தம்! எல்லாத்தையும் அப்படியே இறக்கிவைத்தாகிவிட்டது!!
    (எழுத்துருவெணன்றால் ஒருகாதல்தான்) நன்றி நன்றி!!

    10.10 21.11.2005

  22. Anonymous says:

    எழுதிக்கொள்வது: முன்.

    தகவலுக்கு நன்றி!!!
    200 மேற்கட்ட எழுத்துருக்களை வேளியிட்டள்ளர்கள்!!!
    எல்லாம் தம்! எல்லாத்தையும் அப்படியே இறக்கிவைத்தாகிவிட்டது!!
    (எழுத்துருவெணன்றால் ஒருகாதல்தான்) நன்றி நன்றி!!

    10.10 21.11.2005

  23. Anonymous says:

    எழுதிக்கொள்வது: முன்´.

    கருத்து பிழையாண இடத்தில விழுந்துவிட்டது மன்னிக்கவும்!!!

    10.32 21.11.2005

  24. Anonymous says:

    எழுதிக்கொள்வது: முன்´.

    கருத்து பிழையாண இடத்தில விழுந்துவிட்டது மன்னிக்கவும்!!!

    10.32 21.11.2005

× Close