சற்றே ஓய்ந்து போன சிஞ்சா மனுசிக் கலையகத்தின் ? ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று இந்தப் பாடல். கணணியை மட்டும் உபயோகப்படுத்தி கோர்த்த இசையில் பாடல் வரிகளைப் போட்டுப் பாடுவது நான்தான். (தேவையா இதெல்லாம் ?) இசையமைத்தவர் ராஜ். ஒஸ்ரேலியாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது :)))
நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு.. :)
ராஜராஜ சோழனும் எழுத்தாளர் பாமரனும்..
ஐரோப்பாவில் (மற்றும் ஒஸ்ரேலியாவில்) ஒளிபரப்பாகும் நிகழச்சியொன்றை பாமரன் தொகுத்து வழங்குகிறார். ஏதோ ஒரு வகையில் பிரபல்யமானவர்களை அழைத்து அவர் காணும் செவ்வி சுவாரசியமாக இருக்கும். ( ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சி எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றே தெரியாமல் பாமரன் இருந்தார் என காற்று வாக்கில் ஒரு செய்தி. உண்மையா செல்லா சார் ?)
சில பல காலங்களிற்கு முன்னால் எழுத்தாளர் சாரு நிவேதாவை அழைத்து அவர் உரையாடிய போதான சில சுவாரசிய சந்தர்ப்பங்களைச் சொல்கிறேன்.
ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்தில் இருந்த வரைக்கும் அவர்கள் எவரையும் தமிழக/ இந்திய இலக்கிய கனவான்கள் எட்டியும் பார்த்ததில்லை. ஆனால் ஈழத்தில் யுத்தம் உக்கிரமடைய புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்கு அவர்கள் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கிற மதிப்பும் மரியாதையும் தன்னை ஆச்சரியத்தில் ஆழத்துகிறதாக அவர் சொன்னார். கூடவே உதாரணமாக எஸ் பொ ஈழத்தில் இருந்தவரை அவரை யாரும் திரும்பியும் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் ஒஸ்ரேலியா சென்ற பின்னர் அவருக்கு மரியாதையும் கெளரவமும் கொடுக்கும் தமிழக இலக்கிய வாதிகளை நினைக்கும் போது அமெரிக்க மாமா சாக்லெட் கொண்டு வருவார் என அங்கலாய்க்கின்ற சிறுபிள்ளைகள்தான் நினைவுக்கு வருகின்றனர் என்றார் சாரு நிவேதா. (அப்பிடியா ..?)
வெளிநாடுகளில் இருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களைக் கூட தமிழக இலக்கியவாதிகள் தோள் மீது சுமக்கிறார்கள் என்ற பேச்சினுடே பரீசிலிருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களையெல்லாம் தமிழகத்தில் காவடி சுமக்கிறார்கள் எனச் சொன்ன சாரு நிவேதா உடனடியாகவே சோபா சக்தி ஒரு திறமையான எழுத்தாளன். நான் அவரைச் சொல்லவில்லை. மற்றவர்களைச் சொல்கிறேன் என என் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். (மற்ற எழுத்தாளர்கள் யாருங்க.. )
அதுதவிர புலம் பெயர்ந்த தேசங்களிலெல்லாம் தம் மண் மீதான வேரறுப்பின் துயரங்களைச் சுமந்து திரிகின்ற ஈழத்து மனிதர்கள் அவற்றை இலக்கியமாக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யாமல் தம் துயரங்களை மறக்க அதிகம் மது அருந்துகிறார்கள் என ஒரு புதிய செய்தியையும் சாரு சொல்லிச் சென்றார். (அப்படியா ஈழத்துக் குடிமக்களே 🙁 )
இன்னொரு தடவை பாமரன் பெயரியல் நிபுணர் ? இராஜஇராஜ சோழனை செவ்வி கண்டிருந்தார். செவ்வியில் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என கூறிக்கொண்டிருந்தவர் சிலோன் என்ற பெயரை சிறிலங்கா என மாற்றியதால்த்தான் அங்கு இனமுரண் ஏற்பட்டது என கண்டு பிடித்தார். பதிலுக்கு பாமரன் அப்படியானால் 56 களில் அங்கே கலவரமும் இனமுரணும் ஏற்பட்டதே.. அது பெயர் மாற்றுவதற்கு முன்னர்தானே என ஒரு எதிர்க்கேள்வி கேட்டார்.
அதற்கு பெயரியல் (டக் கென வாசிக்க பொரியல் எனத் தெரிகிறது ) நிபுணர் என்ன சொன்னார் என்றால் பெயர் மாற்றிய பின்னர் தானாம் இருதரப்பும் சண்டை பிடிக்கத் தொடங்கினார்களாம். அதாவது பெயர் மாற்றிய பிறகே தமிழர்கள் திருப்பியடிக்கத் தொடங்கினார்கள். பெயர் மாற்றாது விட்டிருந்தால் சிங்கள அதிகாரம் மட்டுமே தமிழர்களை அடித்துக் கொண் (ன்றி) டிருக்கும்.
பெயர் மாற்றிய புண்ணியவானுக்கு கோடி நன்றி..
அப்புறம் இந்தியாவின் பெயரை United States of India என மாற்றச் சொன்னார். USI நல்லாத்தான் இருக்கு. ஒரு தபா மாத்தித்தான் பாக்கிறது 🙂

கலைஞரின் இரங்கற்பா இப்போது பாடலாகவும்..
பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வனின் வீரச்சாவு குறித்து கலைஞர் எழுதிய (தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய ) இரங்கற்பாவினை ஜேர்மன் கலை பண்பாட்டுக் கழகத்தினர் பாடலாக வெளியிட்டிருக்கிறார்கள். ஜேர்மன் கண்ணனின் இசையில் மலர்கிறது அப்பாடல்…
விடுமுறை நாளொன்றின் புகைப் படக் குறிப்புக்கள்
கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் இருக்கிறது பிலாத்தூஸ் (Pilatus) குன்று. லுசேர்ண் மாநிலத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரத்து பயணத்தில் இவ்விடத்தை அடையக் கூடியதாயிருக்கிறது. மிக அருகில் இருப்பினும் இதுவரை சென்று பார்க்க வேண்டுமெனத் தோன்றவில்லை. இன்று புறப்பட்டோம்.
லுசேர்ண் மாநிலத்தின் பிரபல்யமான பகுதி இது. சுவிசில் படம் பிடிக்கப்பட்ட திரைப்பட பாடல்காட்சிகளில் பெரும்பாலும் இடம் பெறும் இப்பகுதி பிரதான தொடரூந்து நிலையத்திற்கு அண்மையில் இருக்கிறது. நியூயோர்க் நகரம் உறங்கும் நேரமென சூர்யா பொய் சொல்லி பாடியது இவ்விடங்களில்த்தான்!
பதினைந்து நிமிடப் பயணத்தில் அடையும் ஒரு இடத்திலிருந்து கேபிள் கார்கள் பிலாத்தூஸ் மலைக் குன்றுக்கு வரிசையாகப் புறப்படுகின்றன. நான்கு பேர் அமரக் கூடிய அளவில் தொடர்ச்சியாக அவை புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஒரு சிலர் நடந்தும் மலையேறுகின்றனர். கடந்த வாரம் Imax இல் அல்ப்ஸ் தொடர்பான விவரணபடம் ஒன்று பார்த்தேன். மலையேறும் கணங்கள் மயிர்கூச்செறிய வைத்தன.
ஆரம்பத்தில் சாய்வாக செல்லும் மலை பிறிதொரு இடத்தில் இன்னுமொரு கேபிள் காருக்கு மாறிய பின்னர் செங்குத்தாக உயரத் தொடங்குகிறது. கீழே பனி மூட்டங்களிலிருப்பதால் தெளிவாக்க முடியவில்லை.
மலைக் குன்று. கீழே வெயில் கொழுத்திக்கொண்டிருக்க இங்கு சில்லிட வைக்கிறது குளிர். அவ்வப்போது பனிப் புகார் வந்து மூடி மறைத்துப் பின் போகிறது.
சுவிசின் பாரம்பரிய இசைக் கருவியொன்று. இது பற்றி மலைநாடான் எழுதியிருந்தார்.
மலைக் கரையோரம் இவ்வாறு சாய்வாகச் செல்லும் வண்டிகளிலும் மலையை அடைய விட்டகல முடிகிறது.